போகர் சித்தர்
போகர் பதினெட்டு சித்தர்களில் முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொங்கணர் (திருப்பதி புகழ்) சித்தரின் குருவான இவர் நவ பாஷாணங்களை பற்றி நன்றாக அறிந்தவர். அடிப்படையில் போகர் சீனாவில் பிறந்தவர், இவரின் முன்னோர்கள் பூர்வீகம் இந்தியா என்றாலும் பிழைப்புக்காக சீனாவில் குடியேறினாரகள். சலவைத்தொழில் செய்து அங்கு வாழ்ந்து வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும் சிலர் இவர் பிறப்புக்கு பிறகே இவர் பெற்றோர் தமிழகத்தில் இருந்து சீன சென்றதாக குறிப்பிடுகிறார்கள். இவரது பெற்றோர் மறைவுக்கு பிறகு தாகம் திரும்பிய இவர் இமயமலையில் தங்கி வாழ்ந்தார். சித்தர்களை சந்திக்க வேண்டும் என்பது இவர் எண்ணமாக இருந்தது – bogar siddhar.
அறுபத்து மூன்று சீடர்கள்
இமயமலையில் தங்கியிருந்த பொழுது அறுபத்து மூன்று சீடர்களுக்கு இவருக்கு தெரிந்த கலைகளை கற்றுக்கொடுத்தார். இவர் சீடர்களில் இடைக்காடர், கருவூரார், சட்டைமுனி, புலிப்பாணி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர். மேரு மலையில் மறைந்து கிடைக்கும் கண்ணுக்கு புலப்பாடாத செல்வங்களை கண்டறிந்து மக்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்பது இவர் எண்ணம். இவர் சீடர்களுக்கு அணைத்து கலைகளையும் கற்றுக்கொடுத்து தேர்வு நடத்தி மதிப்பீடு செய்த பின்னர், நாடு முழுவதும் மக்களுக்கு சேவை செய்ய அனுப்பிவைத்தார்.
சஞ்சீவினி மந்திரம்
மரணத்தை வெல்லும் சஞ்சீவினி மூலிகை மற்றும் மந்திரம் அறியும் முயற்சியில் பல போராட்டங்களை சந்தித்தார். அவர் மேற்கொண்ட பல முயற்சியின் பலனாக இறுதியில் சில சித்தர்களின் துணையோடு அவருக்கு அந்த இரகசியம் தெரிய வந்தது. ஆனால் இறைவன் திருவிளையாடல் அதை பயன்படுத்த முடியாமல் செய்தது. வருவோர் தங்கி விட்டால் இந்த பூமி தாங்குமா என்ற நியாதிக்காக தான். பிறகு ஆகாய மார்க்கமாக பொதிகை மலை வந்து உமையாள் அன்னையை நோக்கி தவம் செய்தார். அவர் தவத்திற்கு செவி சாய்த்த அம்பாள் அவருக்கு தரிசனம் கொடுத்து தன் மகன் முருகனின் பழனி மலைக்கு செல்ல வழி சொல்லி மறைந்தாள். பழனியில் முருகன் இவர் முன் தோன்றி தனக்காக சிலை வடிக்க ஆணையிட்டு மறைந்தார் – bogar siddhar.
பழனி மூலவர் சிலை இரகசியம்
சித்தர்கள் வாழ்ந்த பூமியான பழனி மலை அதிசயம் அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்ட தண்டாயுதபாணி சிலையாகும். அதை நிறுவி அதில் தான ஜீவா மற்றும் ஆத்ம சக்தியை அதற்குள் பிரதிஷ்டை செய்தார் என்பது பின்னால் வரலாறு மற்றும் அதிசயம். இதற்காக இருநூறு வருடங்கள் தவம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. துல்லியம் தப்பாத அந்த சிலையில் பதினெட்டு சித்தர்களின் திறன்களும் அடங்கி இருந்தது. உலகின் பெரும்பகுதி அழிவிலிருந்து காப்பாற்றும் அளவிற்கு இந்த சிலை அமைக்கப்பட்டது.
செவ்வாய் தோஷம், தீராத நோய்கள் தீர்க்கும்
செவ்வாய் கதிரை உள்வாங்கி மக்களுக்கு நன்மை செய்யும் விதமாக இந்த சிலை வடிக்க முடிவு செய்து சித்தர்களின் ஆலோசனையுடன் மொத்தமுள்ள 64 இல் 9 பாஷாணங்களை சரியான அளவில் சேர்த்து சிலையை வடித்தார்.
1. கௌரிப் பாஷாணம்
2. கெந்தகப் பாஷாணம்
3. சீலைப் பாஷாணம்
4. வீரப் பாஷாணம்
5. கச்சாலப் பாஷாணம்
6. வெள்ளைப் பாஷாணம்
7. தொட்டிப் பாஷாணம்
8. சூதப் பாஷாணம்
9. சங்குப் பாஷாணம்
அந்த நவ பாஷாணங்களில் 4448 மூலிகைகளின் சாராம்சம் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒன்பது பாஷாணங்களும் சரியான விகிதத்தில் கலக்கும்போது செவ்வாயின் கதிர்வீச்சை இழுக்கும் தன்மை பெற்றுவிடும் என்று ஆராச்சி செய்து சரியான திட்டமிடலின் பின்னர் சிலை வடிக்கப்பட்டது. உலகத்தில் பெரும்பகுதி அழிவுகள் ஏற்படாமல் தடுப்பது இந்த சிலையே என்பதில் ஐயமில்லை.
போகர் தமிழில் இயற்றியுள்ள நூல்கள்
போகர் 7000 (சப்த காண்டம்)
ஜெனன சாகரம் 550
நிகண்டு 1700
வைத்தியம் 1000
சரக்குவைப்பு 800
கற்பம் 360
உபதேசம் 150
இரணவாகமம் 100
ஞானசாராம்சம் 100
கற்ப சூத்திரம் 54
வைத்திய சூத்திரம் 77
முப்பு சூத்திரம் 51
ஞான சூத்திரம் 37
அட்டாங்க யோகம் 24
பூசா விதி 20
வாண சாஸ்திரம்
சிறப்பு.
நல்ல பயனுள்ள தகவல்