என் மின்மினி (கதை பாகம் – 12)
சென்ற வாரம் – பப்புனு அப்பாவும் கூப்பிட மாட்டாங்க, அம்முனு அம்மாவும் கூப்பிட மாட்டாங்க என்றவாறு கண்கலங்கினாள் பப்பு… அப்போது அவள் கை அவளையும் அறியாமல் அவன் கைகளை பற்றி கொண்டிருந்தது… – en minmini thodar kadhai-12.
ஒண்ணும் இல்லை. நான் உன்கிட்ட எங்க அம்மா அப்படி கூப்பிடுவாங்க, அப்பா இப்படி கூப்பிடுவாங்கணு சொன்னது எல்லாமே பொய்தான். எனக்கு அப்படி செல்லமாக கூப்பிட அம்மாவும் இல்லை, தட்டி கொடுக்க அப்பாவும் இல்லை.
இரண்டு பேரும் ஒரே நாளில் என் கண்முன்னாடியே இறந்து போய்ட்டாங்க…இப்போ எனக்குனு யாரும் இல்லடா. நான் கூட நம்ம ஆபீஸ் ஹாஸ்டலில்
தங்கிதான் வேலை செய்கிறேன் என்றவாறே தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள் பப்பு…
அவள் சொல்ல சொல்ல அவனுக்கோ துக்கம் தொண்டையினை இறுக்கப்பற்றியது போலே ஒரு உணர்வு… அதை தனது மனதுக்குள் அடக்கியபடி
ஹே என்ன ஆச்சு. எதுக்கு இப்போ கண்ணு கலங்குது.
முதலில் உன் கண்ணீரை தொடச்சு தூறமா வீசு., அம்மா, அப்பா இல்லாம
போனது யாருமே ஆறுதல் சொல்லமுடியாத ஒரு இழப்பு தான். ஆனாலும் உனக்கு இன்னும் அழகான ஒரு வாழ்க்கை காத்துகிட்டு
இருக்கு. அதை இன்பமாக களிக்க உன்கூட நான் எப்போதும் இருப்பேன் என்று
அவளை சமாதானப்படுத்தி இயல்புநிலைக்கு கொண்டு வர முயற்சித்தான் பிரஜின்… – en minmini thodar kadhai-12
ம்ம்ம் ஓகே. ஒவ்வொரு முறையும் அழக்கூடாதுனு தான் நான் நெனெப்பேன். ஆனாலும் இதையெல்லாம் உன்கிட்டே சொல்லும் போது என்னால என்னோட உணர்வுகளை கட்டுப்படுத்தமுடியாமல் அழுதுவிட்டேன் என்று கண்ணீரை துடைக்க தன் கைகுட்டையினை தேடினாள் பப்பு…
இதோ முதலில் இத வெச்சு துடைச்சுக்கோ. அப்புறம் உன்னோட கைகுட்டையை தேடலாம் என்றவாறே தனது கைகுட்டையினை
அவளிடம் நீட்டினான் பிரஜின்….
தேங்யூ டா என்று கண்ணீரை துடைத்தவாறே நான் என்னோட தலையெழுத்தியினை நினைச்சு அழுதுட்டு இருந்தேன்.என்ன
பார்த்து நீ ஏன் அழுதே என்றாள் பப்பு…
அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் உன் பெயர் ரொம்ப பெருசா இருக்கு,அதனால நான் செல்லமா ஏஞ்சல்னு கூப்பிட
போறே. உனக்கு ஓகேவா,என்றான் பிரஜின்…
உன்னோட இஷ்டம் எப்படி வேணும்நாளும் நீ கூப்பிட்டுக்கோ. என்கூட எப்போதும் போலே இப்படி சந்தோசமா இருந்தா சரி என்றாள் பப்பு…
ஓகே ஏஞ்சல், என்றவாறே லேசாக அவன் சிரிக்க…, சரி சரி நீ அன்னிக்கு ஒரு நாள் என்கிட்டே எதோ சொல்லணும்னு சொன்னீயே
என்ன அது… இப்போ சொல்லு என்றாள் ஏஞ்சல்…
அது வந்து ஒன்னும் இல்லை என்று தலையினை சொரிந்தபடி தயங்கி கொண்டிருந்தான் பிரஜின்…
ஹே இப்போ சொல்லப்போறீயா இல்லையா.சொல்லவில்லையெனில் என்கிட்டே இனி பேசவே வேணாம் என்று அதட்டினாள் ஏஞ்சல்..
பாகம் 13-ல் தொடரும்
பப்புவின் கதை பாவமாக இருக்கிறது
கொஞ்சம் வருத்தம், கொஞ்சம் மகிழ்ச்சி எனக் கலந்து வருவது அருமை!
வாழ்த்துகள். மேலும் சிறக்க
சுவாரஸ்யமான நடை..கதையின் விறுவிறுப்பு கூடியுள்ளது..ஆசிரியருக்கு வாழ்த்துகள்…
அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி
சஸ்பென்ஸ் தொடர்வது அடுத்த வாரத்திற்கு காத்திருக்க வைக்கிறது.