ஏலக்காயின் நன்மைகள்

அன்றாடம் உணவில் குறிப்பாக இனிப்பு பலகாரங்களில் சேர்த்துக்கொள்ளும் ஏலக்காய் பற்றிய பல சுவாரசிய தகவல்களை பார்ப்போம் – elakkai nanmaigal tamil.

elakkai nanmaigal tamil

தொடர்ச்சியான விக்கலை குணப்படுத்தும்

நம்மில் சிலருக்கு வரும் தொடர்ச்சியான விக்கல் பிரச்சனைக்கு ஏலக்காய் ஒரு சிறந்த தீர்வு, வாயில் உருவாகும் கிருமிகளை அழிக்கும் வல்லமை கொண்டது ஏலக்காய். ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு நல்லது

ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு தேய்த்துவிடும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம்.

அஜீரணக்கோளாறு நீங்கும்

அஜீரணத்தால் அவதிப்படுவோர் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிடலாம். ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌தினமு‌ம் ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம் -elakkai nanmaigal tamil.

நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி

நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌விட ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம். ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காய் கஷாயம் பருகவேண்டும்.

சர்க்கரையின் அளவை

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா நோயாளிகளுக்கும் ஏற்றது. சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு உள்ளது. வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் இந்த தொல்லை ஏதும் ஏற்படாது.

You may also like...

9 Responses

  1. Kasthuri says:

    Nice, Really useful tips

  2. Pavi says:

    Evlo nanmaikala!! One more thing, yelakai sapta blood reduce agumnu solranga apadiya?

  3. எதுவும் அளவோடு இருக்கும்வரை எந்த இடையூறும் வராது.

  4. தி.வள்ளி says:

    அபரிமிதமான நன்மைகள்..இரத்ததில் கொலஸ்ட்ரால் அளவை கூட குறைக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறென்.பயனுள்ளள பதிவு..

  5. Ranjaniraj says:

    ஏலக்காய் ஒரு நறுமண பொருள் என்றே தெரியும்.. அதில் இவ்வளவு நன்மைகள் உள்ளது என்று அறிய வைத்ததற்கு நன்றி🙏🙏🙏

  6. S. Rajakumari chennai says:

    ஏலக்காய் வாங்க கடைக்கு போய் கொண்டு இருக்கிறேன்

  7. R. Brinda says:

    அருமையான, பயனுள்ள பதிவு!

  8. Prasanna says:

    Really informative and useful

  9. மாலதி நாராயணன் says:

    ஏலக்காயில் இவ்வளவு நன்மைகளா!!!!
    இது வரை அறியாத தகவல் மிகவும் அருமை.