என் மின்மினி (கதை பாகம் – 24)
சென்ற வாரம் – என்ன செய்வது என்று அறியாமல் தூரத்தில் இருந்து கொண்டு ஒன்றும் புரியாமல் என்ன நடக்கிறது என்றும் தெரியாமல் அவர்களையும் அப்பாவையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டிருந்தேன் – en minmini thodar kadhai-24.
சிறிது நேர பேச்சுக்கு பின்னர் அவர்கள் அனைவரும் அப்பாவின் சட்டையினை பிடித்து உலுக்க நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார். பதறிக்கொண்டு அவரை நோக்கி எழுந்து ஓடினேன்.
நான் ஓடியதை பார்த்த அம்மாவும் என் உறவினர்களும் என் பின்னால் ஓடிவர ஏதோ சண்டை சச்சரவு என்று ஊர்மக்களும் எங்கள் வீட்டு வாசலில் கூடினர். அம்மாவும் தம்பியும் சேர்ந்து அப்பாவின் கையினை பிடித்து தூக்கி அருகில் இருந்த ஒரு துணிதுவைக்கும் கல்லில் உட்காரவைத்தனர்.
ஏன்யா.,அவரு என்ன தப்பு செய்தார்.அவரை ஏன் கிழே தள்ளி விட்டு பிரச்சனை பண்றீங்க என்று கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுக்க அனைவரும் சேர்ந்து,ஆமா ஏன் அவரை கிழே தள்ளினீங்க சொல்லுங்க என்றனர். வந்த மூவரில் ஒருவர் பேச ஆரம்பித்தார்.யோவ் நான் எதுக்குனு சொன்னா அதுக்கு அப்புறம் இப்படி அவனை உட்கார வெச்சு அவனுக்கு ஒத்து ஊதமாட்டீங்க என்று கோபமுடன் கூற, அதுதான் நாங்களும் கேட்கிறோம் அவரு என்ன செய்தார் சொல்லுங்கள் என்றார் கூட்டத்தில் இன்னொரு தாத்தா.
என் பேரு சேகரன்.என்னோட அரிசி ஆலையில் தான் இவன் கணக்குப்பிள்ளையாக இருக்கிறான்.அவன்மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம்.ஆனால் அந்த நம்பிக்கை எல்லாம் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிட்டான்.தினமும் கணக்கு எழுதுறேன் என்ற பெயரில் இருபத்தைந்தாயிரம் ரூபாயை கள்ளகணக்கு எழுதி திருடிருக்கான்.முதலாளியிடம் பணம் கையாடல் பண்ணியவனை அடிக்காம தலைவாழை இலை போட்டு விருந்து வைக்க சொல்றீங்களா என்றார் வந்த மூவரில் ஒருவர்.
இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அப்பா எழுந்து,அண்ணாச்சி உங்க அரிசி ஆலையை என்னோட சொந்த நிறுவனம் போலே நெனச்சுதான் கண்ணும் கருத்துமாக வேலை செய்தேன்.வயித்திலே பசி இருந்த போதும் கூட அடுத்தவங்க காசு எனக்கும் என் குடும்பத்துக்கும் வேணானு நெனெக்குற ஆளு நான்.என்னை போயி இப்படி குற்றம் சொல்லலாமா.நான் எந்த தவறும் செய்யவில்லை அண்ணாச்சி என்றார்.
எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த என் பெரியப்பாவும் சித்தப்பாவும் மெதுவாக பேச ஆரம்பித்தனர். நீ சொல்வது எல்லாம் சரி.தீடீர்னு உன் பொண்ணோட சடங்கு நடத்த உன்கிட்டே எப்படி இவ்வளவு காசு வந்துச்சு.நம்ம வீட்டை பங்குபோடும் போது கூட நல்லவன் போலே வேணானு சொல்லிட்டு இப்படி அடுத்தவங்க காசை திருடி உன் பவுசை காட்டணுமா என்றனர்.
தன் உடன்பிறந்தவர்களே தன்னை பழி சொல்வதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அப்பா கண் கலங்கி நின்றார்- en minmini thodar kadhai-24
– அ.மு.பெருமாள்
பாகம் 25-ல் தொடரும்
கதையில் சோகமும் கலந்து வருகிறது
கதையில் சோகமும் கலந்து வருகிறது
தொடரட்டும் பல திருப்பங்களை க் கொண்டு
பொய்யாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் போது அதன் வலி கொடுமையானது கதைத் திருப்பங்கள் அருமை ..
மிக்க நன்றி அனைவருக்கும்…..