என் மின்மினி (கதை பாகம் – 38)
சென்ற வாரம் – இரவு மணி சரியாக 11.59 யினை தொடும் வேளை அவளது கைபேசி சிணுங்கியது. அந்த சத்தத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து பயந்து திடுக்கென எழுந்து கைபேசியினை தேடினாள் – en minmini thodar kadhai-38.
அன்றுமுழுவதும் வேலை செய்யவும் மனமில்லை அவளுக்கு.என்னதான் சமாதான படுத்தினாலும் அவள் மனம் கொஞ்சம் அடங்க மறுத்து கண்களில் கண்ணீரை சிந்தியது… யாராவது பார்த்தால் என்ன நினைப்பாங்க என்று தன் அழுகையினை தனக்குள்ளே அடக்கி கொண்டாள்… மதியஉணவு நேரம் கூட அவனை பார்க்க மனமில்லாமல் மதியமே லீவ் போட்டுவிட்டு ஹாஸ்டல்க்கு கிளம்பி சென்று நன்றாக தூங்கி போனாள் ஏஞ்சலின்…
மாலை நேரம் ஆனது. இன்னும் மனசு கொஞ்ச பாரமாகவே இருப்பதாய் உணர்ந்தவள் தன்னை இசைப்பயிற்சியில் மூழ்கடிக்க முயற்சித்து தோற்றுத்தான் போனாள்… மனசு முழுக்க வலி.என்னோட உழைப்பிலே வாங்கிய முதல் பரிசு.அதில் அழகில்லாமல் கூட இருக்கலாம். ஏன் அவனுக்கு பிடிக்காமல் கூட இருக்கலாம்.ஆனால் அதை வெறும் பரிசாக பார்த்தது யார் தவறு?என்னோட தவறா? “இல்லையே” என்னோட அன்பான மனம் அவனுக்கு புரியவில்லையோ என்று மனதிற்குள் ஆயிரம் கேள்விகளை அவளுக்குள் அடுக்கிகொண்டே போனாள் ஏஞ்சலின்…
சிறிது நேரத்திற்கு பிறகு.,அவனை சொல்லி என்ன ஆகபோகுது.எல்லாம் என்னோட தவறு.ஐ லவ் யு அப்படினு ஆசையாக அவன் வந்து சொல்லும் போது என் பழையபஞ்சர் பல்லவியை பாடினால் யாருக்குதான் புடிக்கும். அவன் பண்ணது தான் சரி.அவனுக்கு எது புடிக்கும்னு கூட புரிஞ்சுக்க தெரியல, உனக்கு எப்படி அவனோட காதல் புரியும் என்று
மீண்டும் மீண்டும் புலம்பி தவித்தாள் ஏஞ்சலின்…
புலம்ப புலம்ப அவளுக்கே தெரியாமல் அவனது நினைவு அவளுக்குள் துளிர்விட்டது என்றே சொல்லலாம்… அவன் நினைவை அடக்க தெரியாதவளாய் தனக்கு அவன்தான் என்று அன்றே மனதிற்குள் பச்சைக்குத்த ஆரம்பித்தாள் ஏஞ்சலின்…
காதலை ஏன் மறைக்கணும்
இருந்தாலும் கொஞ்ச யோசிச்சு அவன் பேசியிருக்கலாம்.தடியன் வாய பாரு.இப்படியா மூஞ்சுல அடிச்சமாதிரி பேசுவான் என்று அவனை திட்டிக்கொண்டே செல்லமாக தனக்குளே சிரித்தாள்… இரவு வெகுநேரம் ஆகியும் தூக்கம் வராதவளாக புரண்டு புரண்டு படுத்தவாறே நீ எவ்வளவுதான் திட்டி பேசுனாலும் ஏன் எனக்கு கொஞ்ச கூட உன்னை வெறுக்க முடியலை…உன் மேலே துளி அளவு கூட கோபம் வரவும் இல்லை என்று தனக்குள் பேசிக்கொண்டாள்…
உன்மேல் அவ்வளவு காதலா…மனசுக்குள் இவ்வளவு காதலை வைத்துவிட்டு ஏன் அவன்கிட்ட சொல்லாம மறைக்கணும்… உடனே உள்ளிருந்து அவள் மனசாட்சி உறுத்த ஆரம்பித்தது.உன்னோட தகுதி என்னனு உனக்கு தெரியாதா..??? எல்லாம் தெரிஞ்ச அப்புறமும் எதுக்குடி உனக்கு இந்த காதல் அவனை பற்றி நினைப்பதை இத்தோடு நிறுத்திக்கோ என்றது – en minmini thodar kadhai-38.
இவளும் சுதாரித்து கொண்டவளாக யோசிக்க ஆரம்பித்தாள்…
வேணா வேணா… என்னை அவனுக்கு எப்போதும் புடிக்கவே கூடாது.என்னை பார்த்தாலே அவன் டென்சன் ஆகணும். ம்ம்ம் பண்றேன். இந்த வாட்ச் விஷயம் வெச்சே அவனை பிரிஞ்சே ஆகணும் என்று முடிவெடுத்தாள் ஏஞ்சலின்… உடனே மீண்டும் அவளோட மனசாட்சி வெளியே வந்து., உன்னால முடியுமா அவன் மேலே இவ்வளவு காதலை வெச்சுக்கிட்டு மறைச்சு மறைச்சு இவ்வளவு நாளும் இருந்தே. அவன் நினைப்புலே வாழ்ந்து உன் வாழ்க்கையினை முடிச்சுக்க போறீயா என்று குழப்பிவிட்டது.
குழம்பி போனவளாக சரி காலைல யோசிச்சு ஒரு முடிவுக்கு வரலாம் என்று தூங்க முயற்சி செய்தாள் ஏஞ்சலின்…
– அ.மு.பெருமாள்
பாகம் 39-ல் தொடரும்