என் மின்மினி (கதை பாகம் – 6)
சென்ற வாரம் – அதற்கு பிறகு அவன்மேல் இருந்த கோபத்தில் அவளும்,
அவள் மீது இருந்த பயத்தில் அவனும் சந்தித்து கொள்ளவே இல்லை – en minmini thodar kadhai-6.
சூரியன் தன் திரைகளை விலக்கி மெல்ல வெளியே வரவும், பப்பு தூக்கத்தில் இருந்து கண் விழிக்கவும் சரியாக இருந்தது…
கடிகாரமும் தன் வேலையினை மிகச் சரியாக செய்தவாறே 6.20 யினை காட்டி கொண்டி சுற்றிக்கொண்டிருக்க
ச்சோ…. அதுக்குள்ளே விடிஞ்சு போச்சா… என்று கொஞ்சம் சலித்தப்படி சோம்பல் முறித்து கொண்டே தன் படுக்கையில் இருந்து எழும்பி ஜன்னல் அருகில் வந்து வழக்கம் போலே வெளிஉலகத்தை ரசித்து கொண்டிருந்தாள் பப்பு…
தெருவே விழாக்கோலம் பூண்டது போலே எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம்…காய்கறி காய்கறி என்று ஒரு புறமும், மீனு மீனு
என்று மறுபுறமும் வியாபாரிகள் கூவி கூவி தங்கள் தொழிலை பார்த்துக்கொண்டிருந்தனர்…
நேரம் செல்வதே தெரியாமல் ஏழரை மணி வரை வேடிக்கை பார்த்தவளுக்கு ஐய்யோ ஆபீஸ்க்கு லேட்டா ஆச்சே என்ற எண்ணம்
நினைவில் வரவே விறுவிறுவென கிளம்ப ஆரம்பித்தாள் பப்பு…
நேரம் செல்ல செல்ல ஆபீஸ்க்கு செல்பவர்கள் கூட்டம் அதிகமாகவே பஸ் வரும் வரை கால்கடுக்க நிற்காமல் ஷேர்ஆட்டோவை
பிடித்து ஆபீஸ் வாசலில் வந்து இறங்கினாள் பப்பு…
இறங்கியவள் கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்த படி இவன் எங்கே???
எங்கேயும் காணும் என்று மனசிலே புலம்பியபடி தன் டிபார்ட்மெண்ட் நோக்கி நடந்தாள்…
சற்று நேரம் அமர்ந்து வேலை செய்தவளுக்கு அவனுக்கு போன் பண்ணி பார்க்கலாமா அப்படினு ஒரு தீடீர் யோசனை….
ட்ரிங் ட்ரிங் ட்ரிங் என்று போன் மணி ஒலித்தது… மறுமுனையில் ஒரு பெண் குரல் ஹலோ என்று கேட்கவே….
ஹலோ நான் பப்பு பேசுறேன்… அங்கே அச்சு இருக்காங்களா என்று இவள் கேட்கவும் அப்படியெல்லாம் யாரும் இல்லைங்க
என்று கூறியபடி போன் இணைப்பை துண்டித்தது மறுமுனையில் பேசிய அந்த பெண்குரல்…. – en minmini thodar kadhai-6
பாகம் 7-ல் தொடரும்
அச்சுவை ஒளித்து வைத்து பப்புவுடன் கண்ணாமூச்சி ஆடுகிறார் ஆசிரியர்…ம்ம்ம்..பார்ப்போம்
யார்?அந்த பொண்!
டக்கு டக்குனு முடிச்சுடறீங்களே?