எல்லா வகையான முகமும் பளபளக்க மினுமினுக்க
பெண்கள் எல்லோரும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.நல்ல வெள்ளையான சருமம் பெற்றவர்கள் மட்டும் அழகானவர்கள் அல்ல, வெள்ளையோ, கருப்போ, அல்லது மாநிறமோ முகமானது முகபரு, கரும்புள்ளி, தழும்பு ,மரு மற்றும் மங்கு இல்லாமல் இருந்தாலே முகம் பிரகாசமானதாய் இருக்கும். அவ்வாறு இருக்க பார்லர் மூலம் தற்காலிகமாக தீர்வு தேடுவதை விட இயற்கை முறையில் நிரந்தரமாக தீர்வுகாணுங்கள். இதோ சில இயற்கை முறைகள் உங்களுக்காக face color beauty tips in tamil,
எலுமிச்சை
எலுமிச்சை மற்றொரு அற்புதமான ப்ளீச்சிங் தன்மை கொண்ட பொருள். இத்தகைய எலுமிச்சையின் சாற்றினை நீரில் கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, சுத்தமான குளிர்ந்த நீரில் கழுவி, பின் மாய்ஸ்சுரைசர் தடவவும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தின் பொலிவு மேம்படும். எலுமிச்சையுடன் சந்தனம் ,பால் ,தேன்,தயிர்,மற்றும் கடலை மாவும் கலந்து தடவ நல்ல மாற்றம் கிடைக்கும்.
தேன்
தேன் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வதோடு, சிறந்த ப்ளீச்சிங் பொருளாகவும் பயன்படும். மேலும் தேனில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை அதிகம் உள்ளது. எனவே அந்த தேனை தினமும் முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வாருங்கள். இதனால் நல்ல சரும மாற்றத்தைக் காணலாம்.
மஞ்சள்
தென்னிந்திய பெண்களின் அழகின் ரகசியமே மஞ்சள் தான். மேலும் மஞ்சளில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் தன்மை உள்ளதால், இந்த மஞ்சள் தூளை பாலில் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதன் மூலம் முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.
தயிர்
தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட், சருமத்தில் உள்ள கருமையை நீக்கும் தன்மை கொண்டது. ஆகவே தினமும் தயிரை முகம் மற்றும் கை, கால்களில் தடவி ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால், முகம் பொலிவாகும். முக்கியமாக, இந்த செயலை ஒரு மாதத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
பப்பாளி
பப்பாளி கூட ப்ளீச்சிங் தன்மை கொண்டது. அதற்கு பப்பாளித் துண்டைக் கொண்டு முகத்தை தேய்த்து, 2-3 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். முகத்தில் உள்ள இறந்தசெல்கள் நீக்குவதோடு, முகத்திற்கு புத்துணர்வையும் கொடுக்கும்.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. மேலும் இது எலுமிச்சையைப் போன்றே ப்ளீச்சிங் தன்மை கொண்டதால், இவையும் சருமத்தில் உள்ள கருமையைப் போக்க உதவும். அதற்கு 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், 1/2 கப் ஆரஞ்சு ஜூஸ் கலந்து, முகம், கை, கால்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். நல்ல நிறமாற்றம் உண்டாகும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் குளிர்ச்சி தன்மை கொண்டது தினமும் வெள்ளரிக்காயை அரைத்தோ அல்லது துண்டுகளாக்கியோ முகத்தில் வைத்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், சருமத்தின் கருமை நீங்குவதோடு, சரும சுருக்கமும் மறையும்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனாலும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம். சரும சுருக்கங்களைப் போக்கி வழுவழுப்பாக்கும்.