பயத்தம் பருப்பு கோதுமை சுசியம்

ஏஞ்சலின் கமலா அவர்கள் எழுதிய சமையல் குறிப்பு – “பயத்தம் பருப்பு கோதுமை சுசியம்” – gothumai susiyam

gothumai susiyam

தேவையான பொருட்கள்

பயத்தம் பருப்பு – 200 gm
வெல்லம் – 200gm
தேங்காய் – அரைமூடி
ஏலக்காய் – 3
கோதுமை மாவு – 100gm
எண்ணெய்
உப்பு – தேவைக்கு
சோடா உப்பு – ஒரு துளி

செய்முறை

பயத்தம் பருப்பு (தட்டைப்பயறு) இரண்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைக்கவும். வெந்தவுடன் கரண்டியால் நன்கு மசிக்கவும். வெல்லத்தை சிறிது அளவு தண்ணீர் விட்டு பாகு காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்

தேங்காயைத் துருவி, ஏலக்காயை பொடித்து, அனைத்தையும் ஒன்றாக கலந்து,
சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும் .கோதுமை மாவை சற்று நீர் விட்டு இட்லி மாவு பதத்திற்கு உப்பு, சோடா உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெய்யை ஊற்றி சூடானதும் பயத்தம் பருப்பு உருண்டைகளை கோதுமை மாவில் தோய்த்து(மூழ்குமாறு) எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.நன்கு சிவந்தவுடன் எடுக்கவும் – gothumai susiyam.

வெல்லம், பயத்தம் பருப்பு மற்றும் தேங்காயின் ருசி அபாரமாக இருக்கும். மேலும் கோதுமை சேர்ப்பதால் உடல் நலம் கூடும் சிறியவர் முதல் அனைத்து வயதினரும் விரும்பி உண்ணலாம்.

இப்பலகாரத்தில் உள்ள சத்துக்கள்:

வெலலம்: இரும்புச் சத்து.
பயறு: புரதச் சத்து.
தேங்காய்: கொழுப்புச் சத்து.
கோதுமை : நார்ச் சத்து.

அருமையான பாரம்பரிய பலகாரம். செய்து பாருங்கள்..

– ஏஞ்சலின் கமலா, தமிழ் ஆசிரியை, மதுரை.

You may also like...

5 Responses

  1. உஷாமுத்துராமன் says:

    அரிசி மாவில் சுகியம் செய்து சாப்பிட்டிருகிறேன். ஆனால் பயத்தம் பருப்பு கோதுமை மாவில் சுகியம் படிக்கும் போதே செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்டியது. அருமையான ரெசிபி பாராட்டுக்கள்.

  2. தி.வள்ளி says:

    வெல்லம் சேர்த்து செய்யும் பலகாரம் எல்லாமே சத்து..ருசி..அதிலும் பருப்பு சேருவதால் புரதமும் கிடைக்கிறது.மைதா தவிர்த்து கோதுமையில் செய்வது மிச் சிறப்பு. சகோதரி ஏஞ்சலின் கமலாவிற்கு நன்றிகள்..பகிர்தலுக்கு

  3. R. Brinda says:

    சுவையான, சத்தான பலகாரம்; அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

  4. Rajakumari says:

    துரியன் தனி ருசி தான்.

  5. G.Angeline kamala says:

    நன்றி.