பழ ரவை கொழுக்கட்டை
ரவை உப்புமா என்றாலே சிறியவர் முதல் பெரியவர் ஓடுவர். ஆனால் இவ்வாறு செய்து கொடுத்தால் பழங்களின் வண்ணங்ளும் அவற்றின் சுவையும் அனைவரையும் கவரும் – rava kolukattai.
தேவையான பொருட்கள்
ரவை – 200 கிராம்
அன்னாசிப் பழம் – 1 துண்டு
மாதுளை – கால் கப்
ஆப்பிள் – 1 துண்டு
உலர் திராட்சை – 10
நெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
ரவையை நன்கு வாசனை வருமாறு வறுக்கவும். பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி அனைத்து பழங்களையும் ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு அதே நெய்யில் ரவையையும் கலந்து உப்புமா பதத்திற்கு உப்பு சேர்த்துக் கிளறவும்.
இறக்குவதற்கு முன் பழங்களையும் சேர்த்து கிளறி அந்தக் கலவையை ஆறவிட்டு பிடி கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி தட்டில் ஐந்து நிமிடம் வைத்து எடுக்கவும் – rava kolukattai.
சுவையான சத்துக்கள் நிறைந்த ரவை பழக் கொழுக்கட்டை தயார்.
– ஏஞ்சலின் கமலா, தமிழ் ஆசிரியை, மதுரை.
படிக்கும் போதே நாவில் எச்சில் ஊற வைக்கும் அருமையான ரெசிபி. பாராட்டுக்கள்.
அருமையான, சுவையான ரெசிபி. பாராட்டுக்கள்!!
பழங்கள் சேருவதாலும், ஆவியில் வேக வைப்பதாலும் ..குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் ஏற்ற சத்துணவு .நன்றி.சகோதரி..ஏஞ்சலின்
விநாயகர் சதுர்த்தி க்கு செய்து அசத்துகிறோம்
அருமையான ரெசிபி.நன்றி
சத்தான உணவு.சிறப்பு
நல்ல ரெசிபி, அருமை வாழ்த்துக்கள்
பின்னூட்டம் அளித்து உற்சாகம் ஊட்டிய அன்பு உள்ளங்களுக்கு என் நன்றி