கவிதைப் போட்டி 2021_7
நீரோடை கவிதைப் போட்டி ஆறு , நமது கவிச் சொந்தங்களால் மிகச்சிறப்பாக நடைபெற்றது!!, இன்றைய அடுத்த பதிவில் முந்தைய போட்டியான ஜூன் மாத போட்டியின் முடிவுகள் வெளியிடப்படும் – kavithai potti 7
- தங்கள் வாழ்வை மாற்றிய (அல்லது பாதித்த) அந்த ஒரு நிமிடம்,
- வாழ்க்கைக்கு திருப்பு முனையாக அமைந்த நபர்
- முகக்கவசம்
- அப்பா நம் சொத்து
- அப்துல் கலாமின் 2020 என்னவாயிற்று (அரசியல் தவிர்த்து எழுதவும்)
மேலே குறிப்பிட்ட தலைப்பில் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம்.
எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.
வெற்றி பெரும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்
தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 7. போட்டி ஜூலை 31 வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். ஒரு கவிதைக்கும் இரண்டாம் கவிதைக்கும் ஓரிரு நாட்களாவது இடைவெளி இருக்க வேண்டும். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.
குறிப்பு: 1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).
குறிப்பு: சென்ற போட்டியில் பரிசு வென்ற ரோகிணி அவர்கள் இன்னும் தங்களது முகவரியை நீரோடைக்கு தெரிவிக்கவில்லை..
தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது
தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.
நமது நீரோடை வலையொளிக்கு (YouTube Channel) கவிதை வாசிக்க விருப்பம் உள்ளவர்கள் – வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
காலை முதல் மாலை வரை
நடந்தகதை அத்தனையும்
ஒன்னுவிடாம ஒப்பிக்க
நீங்க தப்பிக்காம கேப்பீகளே அப்பா!
நான் ஒசரமா வளரனும்னு
நீங்க
உசுர உறுக்கி ஓடுனகதை
தெரியாததா அப்பா!
அடிச்சதில்லை உதைச்சதில்லை
நானும் அடிக்கும்படி வச்சதில்லை;
நீங் வளர்த்த புள்ள நான்
தப்பு செஞ்சதா ஒருத்தரும் சொன்னதில்லை;
விட்டுக்கொடுக்கிற வித்தையையும்
தட்டிக்கேக்குற தைரியத்தையும்
கத்துக்கொடுத்ததே நீங்தானேப்பா!
அன்பா கூப்பிட்டாலும்
அதட்டிக் கூப்பிட்டாலும்
என்னம்மாம்பிகளே;
எங்கம்மாவுக்கும் உங்கம்மாவுக்கும் அடுத்து
எனக்குத்தான் பயப்புடுவீகளே!😂
நீங்க சம்பாரிச்ச பணமெல்லாம்
என்னை சாகவிடாம வச்சுச்சு;
நீங்க சேத்துவச்ச புண்ணியந்தான்
என்னை சாதிக்க வச்சுச்சு!
என்னவன் என் வாழ்வை மாற்றியவன்…..
அதிர்ஷ்டசாலி தான் நானும்…
உன்னைப் போன்ற அன்பாளனை
கணவனாக பெற்றதில்!!!! எந்த பிறவியில் என்ன புண்ணியம் செய்தேனோ?? உன்னை இப்பிறவியில் பெற….
கோபத்திலும் அன்பை கண்டவன்
அவன் என்னிடத்தில்!!!!
என்னை புரிந்துகொண்ட மகான் அவன்!!
அன்பில் அழகியல் தத்துவத்தை
நன்கு கற்றவன் போல!!!
நான் திட்டினாலும் தீராத
கோபங் கொண்டாலும் என்மீது
அளவில்லா அன்பை கொண்டவளே
என்கிறான் கள்வன்!!!!….
இவனிடத்தில் அன்பில் அடிமையாகி
வெகு நாள் ஆகியும்
தன்னுடைய குணத்தில் சற்றும்
மாறாத சிறுபிள்ளைப் போல்!!!!..
இப்படி ஒரு மனிதனை என் வாழ்வில்
படைத்த ஈசனுக்கும் நன்றி!!!!
நல் முறையில் வளர்த்த என்னவன் தாய்க்கும் நன்றி!!!!
லோகநாயகிசுரேஷ்குமார்…
அப்பா! நம் சொத்து!
————- —— —————
தனக்கு என்று வாழாது!
தன் வயிற்றை நிறைக்காது!
தன் தேவையை விரிக்காது
தற்பெருமை எதுவும் கொள்ளாது!
தவ வாழ்வைத் தவறாது!
தன்மானத்தை என்றும் விடாது!
தன் நிலையை அறியாது!
தன்னம்பிக்கையை ஒருபோதும் வெறுக்காது!
தலைகுனிய எதிலும் தயங்காது!
தன் ஆசையைத் தெரியாது!
நல வாழ்வை நவிலாது!
நல் வாழ்வு இல்லாது!
புதுமைகள் எதையும் அணியாது!
புகழ்ச்சிகள் ஒன்றும் இல்லாது!
புண்மேனி வெளியில் தெரியாது!
பொன் சிரிப்பில் பொங்காது!
தன் பிள்ளையைத் தாழாது!
தடம் பதிக்கத் தவறாது!
தந்தையெனும் பாத்திரமானது…
பாரில் பாங்கானது!
பாரத்தில் பாலமானது!
பரவசத்தில் மென்மையானது!
பரிதவிப்பில் மௌனமானது!
தனித்தன்மையில் வனப்பானது!
தன்னிகரில் வகையானது!
தடம்பதித்ததில் வரலாறானது!
தரமானதில் வாழ்வானது!
அன்புடனும்!அர்ப்பணிப்புடனும்!
அருமையுடனும்!அற்புதமுடனும்!
அகிலத்தின் அரங்கேற்றத்தில்!
அனைத்துலகின் எதார்த்தத்தில்!
ஆகவே தான்!
அப்பா…
நம் சொத்து!
அதுவே!
நமக்கு கெத்து!
ம..யோகானந்தம்,
பட்டதாரி ஆசிரியர்,
தருமபுரி..
கவிதை போட்டி:7
அப்பா…..
நான் ரசித்த அழகிய
இசை என் அப்பாவின்
இதயத்துடிப்பு…
தன் மூச்சு உள்ள வரை
என்னை நேசிப்பவர்…
எனக்காக
சுவாசிப்பவர் என்
அப்பா மட்டும்…!
அப்பா நமக்கு
என்னவெல்லாம் செய்தார்
என்பதை நாம் உணர்வதற்கு
வாழ்க்கையில் பல
வருடங்களை கடக்க
வேண்டி இருக்கின்றது…!!!
அப்பாவை தவிர நமக்கு
நல்ல நடத்தையை
வாழ்க்கையில் வேறு
எந்த ஆசானாலும்
கற்பிக்க முடியாது…
அன்பை வார்த்தையில்
வெளிப்படுத்தாமல் தன்
உழைப்பு மூலம்
உணர்த்தும் ஒரே உறவு
அப்பா மட்டும் தான்…!!
தாய் நமக்காக
கஷ்டப்படுவதை நம்மால்
கண்டு பிடித்து விட முடியும்.
ஆனால் தந்தை நமக்காக
கஷ்டப்பட்டதை மற்றவர்கள்
சொல்லித் தான் பிற்காலத்தில்
தெரிய வரும்…
உண்மையாக உழைத்து
சொந்த காலில் நிற்கும்
பொழுது தான் புரிகிறது…..
இத்தனை நாள் என்னை தன்
தோளில் சுமப்பதற்கு
எவ்வளவு வலிகளை
கடந்திருப்பார்
“அப்பா”என்று…..
அம்மாவின் அன்பு கடல்
அலை போல வெளிபட்டுக்
கொண்டே இருக்கும்..
ஆனால் அப்பாவின் அன்பு
நடுக் கடல் போன்றது
வெளியே தெரியாது
ஆனால் ஆழம் அதிகம்…..
அப்பாவின் அன்பை
விட சிறந்த அன்பு இந்த
உலகில் எதுவும் கிடையாது….
கடவுளுக்கும் அப்பாவிற்கும்
சிறு வேறுபாடு தான்
கண்ணுக்கு தெரியாதவர்
கடவுள்.. கண்ணுக்கு
தெரிந்தும் பலராலும்
கடவுள் என புரிந்து
கொள்ளப்படாதவர்
“அப்பா”.
செதுக்கப்பட்ட ஒவ்வொரு
சிலையும் கடவுள் என்றால்
எனக்கு அப்பாவும் கடவுள்
தான். அடித்தாலும் அன்பால்
அணைக்கும் கடவுள் அப்பா….
சில நேரம் பல வலிகளை
மறக்க அப்பாவின்
வார்த்தைகள் மட்டும்
போதுமாக இருக்கின்றது.
நாம் தவறான பாதையில்
சென்றால் ஓடி வந்து
நம்மை தடுக்கும் முதலாவது
உறவு அப்பாவாக தான்
இருக்க முடியும்…!
அப்பாவை அதிகமாக நேசிப்பவர்களுக்கு இந்த அப்பா கவிதை வரிகள் உணர்வுகளை வெளிப்படுத்த உதவியாக இருக்கும் என நம்புகிறேன்…
லோகநாயகிசுரேஷ்
அப்பா நம் சொத்து!!!!
அழகாக என்னை அள்ளி…
ஆசையாக உன் மார்பில் புதைத்து..
அன்பான முத்தம் வைத்து விடு அப்பா…
உன் கைவிரல் பிடித்து நெடுந்தூரம் நடந்து..
உன் தோளில் நீண்ட நேரம் உறங்கி…
பட்டி மன்றம் நமக்குள் நடத்தி நான் வென்றதாய் உன் புன்னகையை பரிசளிப்பாய் அப்பா…
ஆசை பட்டதெற்கெல்லாம் ஏங்கி அதை கஷ்டப்பட்டு நீ வாங்கி அற்புதமாக எனக்கு பரிசளித்தாயே அப்பா….
ஆயிரம் உறவுகள் கூடி நின்றாலும் கிடைக்காத தைரியத்தை உன்னுடன் தனியாய் நிற்கயில் கொடுப்பாய் அப்பா..
என் கஷ்டங்களில் எத்தனை பேர் என்னை தாங்கி பிடித்தாலும் உன் நிழல் தந்த நம்பிக்கை எவரிடமும் கிடைக்கவில்லை அப்பா…
எனக்கும் இருந்திருக்க வேண்டும் அப்பா…
என்னுடன் பேசியிருக்க வேண்டும் அப்பா…
என்னை விட்டு பிரிந்தாயப்பா….
வாழ்விலும், வடிவிலும், வார்த்தையிலும் வாழாமலே பிரிந்தாயப்பா….
இவர்தாம் அப்பா
பாவலர் கருமலைத்தமிழாழன்
முப்போகம் விளைகின்ற நிலத்தைப் போன்று
—முன்நின்று காப்பவர்தாம் அப்பா ! என்றும்
எப்போதும் தனைப்பற்றி நினைத்தி டாமல்
—எல்லாமும் தான்பெற்ற பிள்ளைக் கென்றே
செப்பாமல் செயலினிலே நாளும் செய்வார்
—செம்மையாகச் சிலைசெதுக்கும் சிற்பி போல
ஒப்பற்ற தாய்க்கிணையாய் அன்பு தன்னை
—ஒளித்துவைத்துக் கண்டிப்பில் கலந்த ளிப்பார் !
தன்வயிற்றுப் பசிமறைத்துச் சோற்றை யூட்டும்
—தாய்போல தன்வலியை மறைத்துக் கொண்டு
தன்பிள்ளை சிறப்பாக உயர்வ தற்குத்
—தன்னுடலை ஓடாகத் தேய்த்துக் கொள்வார் !
துன்பத்தைத் துயரத்தை விழுங்கிக் கொண்டு
—துலங்கிடவே பிள்ளையினைப் படிக்க வைப்பார்
தன்தோளில் சுமந்தெல்லா திறன்க ளூட்டித்
—தன்காலில் நிற்கவைத்துப் பெருமை கொள்வார் !
சொல்லடியில் புண்ணாக்கி முதுமை தன்னில்
—சோகத்தில் தள்ளினாலும் வேராய் நின்று
கல்லடிகள் பட்டாலும் பொறுத்துக் கொண்டு
—கனிகளினைக் கொடுக்கின்ற மரமாய் நிற்பார் !
எல்லையிலே நின்றுகாக்கும் முனியப் பன்போல்
—ஏளனந்தான் செய்தாலும் காவல் காப்பார்
நல்லபடி அவைபுகழ வளர்த்த தற்கு
—நன்றிகாட்டும் மகனானால் வாழ்த்து வாரே !
கவிதைப் போட்டி 2021 _ 7
தலைப்பு: #அப்பா_நம்_சொத்து!
‘விடலைப் பருவத்தில் உடன்வயதுத் தோழருடன்
வரப்பில் ஒளிந்தேத் திருடனாய்க் காய்ந்த
பரங்கிக் கொடி பற்றவைத்துப்
பீடி குடித்ததே
என்பிழையின் பிள்ளையார் சுழியானது!
பாதி மூடிய அறைக்கதவின் இருள்மூலையில்
ஒரிஜினல் பீடி குடித்தபோதுதான்
உணர்ந்தேன் என் மெச்சூரிட்டியை!
புகையை மூட முடியுமா?
அக்காள் கண்டாள்! அரற்றினாள்!
பணி முடிந்து வந்த தந்தையிடம் பக்குவமாகப் போட்டுத் தந்தாள்!
சில நிமிடம் உற்றுப் பார்க்கிறார்
தந்தை என் முகத்தை!
எதுவும் பேசவில்லை இருவரும்!
மெளனமாகக் கலைந்து சென்றோம்!
இதென்ன பைத்தியக்காரத் தண்டனை!
என் தந்தையே! நீ வென்றுவிட்டாய்!
நாற்பத்தேழு ஆண்டுகளாக இன்றுவரை
என் விரல்கள் அத்தவறைத் தீண்டவில்லை!
மதிய உணவுக்கு கொளுத்தும் வெயிலில்
வீடு வருகிறாய் மிதிவண்டியில் அப்பா!
வியர்க்க விறுவிறுக்க
வேகநடைபோட்டு எதிர்திசையில் நான்
மேட்னி ஷோவுக்குப் போகிறேன்!
“வீட்டுக்கு வா!”
“வர மாட்டேன்!”
“வரப்போகிறாயா இல்லையா?”
“முடியாது!”
“சரி!…போ!”
நானே பட்டுத் தெளிய அனுமதித்தாய் அப்பா!
என் சினிமாப் பைத்தியத்தை!
பாரசூட் படம்போட்ட சட்டைதான் வேண்டும்!
அடம்பிடிக்க அனுமதியில்லை!
விரல் நீட்டினாலே வாங்கித் தந்தாய்!
எட்டு ரூபாய் லிப்கோ டிக்க்ஷனரி
எனக்குப் பிடிக்கவில்லை!
ஆக்ஸ்போர்டு டிக்க்ஷனரி
நூறுரூபாய்க்கு வேண்டும்!
வாங்கித் தந்து அசத்தினாய் அப்பா!
அலுவலக விழாக்களுக்கும்
விருந்துகளுக்கும் அழைத்துச் சென்று
மனிதரோடு அனுபவத்தை அழகாக அறிமுகப்படுத்தினாய்!
தட்டெழுத்துத் தேர்வில்
தேர்ச்சி பெற்றேன் முதல் வகுப்பில்!
சான்றிதழைக் காட்டியவுடன்
சண்டையிட்டாய் என் தாயிடம்!
‘இவன் எனக்கே சொந்தமென்று’
வேண்டிய மிதிவண்டிகள் வாங்கிக் கொடுத்தாய்!
கைலிகள் கட்டவே கற்றுக் கொடுத்தாய்!
எட்டுக் குழந்தைகள் பெற்றெடுத்தும் நீ
எவருக்கும் அன்பில் குறைவைக்கவில்லை அப்பா!
அரிசிச் சோற்றுக்கு ஏங்கியதுண்டு!
ஆனாலும்,
அறிவான கல்வியை எனக்குக்
கல்லூரி வரை தந்தாய்!
ஊரார் மெச்சவே
குதிரைக் கொட்டகை போட்டு
ஆடம்பரக் கலியாணம் செய்துவித்தாய் எனக்கு!
நிரந்தரமானதொரு வேலையெனக்கு
வாங்கித்தர இயலவில்லை
உன்னால் அப்பா!
என்செய்வாய் நீ என் சுழி அப்படியிருக்கும்போது!
பிறந்த பேரப்பிள்ளையை
என்னைப் போலவே
தூக்கி வைத்துக் கூத்தாடினாய்!
அப்பா! உன்னைக் கடைசிவரை என்னால்
காப்பாற்ற முடியவில்லையே!
கண்கலங்க வைத்து இறந்து போனாயே!
உன்னைப் போலவே நானொரு
நல்லதொரு தந்தையா! தெரியவில்லை அப்பா!
என் பிள்ளை எழுதட்டும்
என்றேனும் ஒருநாள்
நான் மடிந்த பிறகு! அதுவரை
நான் சிறகொடிந்த உறவு!’
அந்த ஒரு நிமிடம் :
புது உலகம் காண என்னை
படைத்த இறைவனுக்கு முதல் நன்றி!
என் வாழ்வுக்கு வழி வகுத்து கொடுத்து
என் அன்பின் சொந்தம் பெற்றோர்!
என் உடன் பிறப்பின் மீதான உறவு!
எனக்குள் இருக்கும் அன்பான உறவு
எனக்கு வழிகாட்டியாக இருந்து
என் புகழுக்கு காரணம் குருவே !
என் முகக் கண்ணாடியாக காட்சி
கொடுக்கும்!
என் துணைவரின் அன்புக்கு அடிமை!
எனது வாழ்வுக்கு அர்த்தம் கொடுத்து!
புது உறவு கிடைக்க நான் பெற்ற பாக்கியம் துணைவரின் பெற்றோர்!
தன் உடன்பிறப்பின் மீதான பாசத்தை
என்னுடனுன் பகிரும் துணைவரின்
உடன்பிறப்பு!
அளவு கடந்த மகிழ்ச்சியை அள்ளி தந்து
அன்பின் வழியாக வந்த குழந்தை
செல்வத்தின் மகிழ்ச்சியான அந்த
நிமிடம் மறக்க முடியாது ! என்னால்…
வேல்…
அப்பா நம் சொத்து :
தாய் சுமக்கும் காலத்தில்
தன்னை அறியாமல் கலங்கும்
குணம் தந்தைக்கே !
நினைக்கும் தருணத்தில் நடந்த
நிகழ்வு ஆனந்த கண்ணீரை வர
வழைத்தது !
தேவதை அம்சமாக பெண் குழந்தை
பிறந்தது
தன்னை தாங்க இன்னொரு தாய்
என்று !
மகிழ்ச்சி பொங்கிய தந்தை தன்
மனதில் உற்சாகத்தை அடைந்து
அனைவருக்கும் !
இனிமையான தகவலை சொல்லி
இனிப்புகள் வழங்கி பெருமிதம்
கொள்கிறார் !
தன் தாயின் மரு உருவம் என்று
தன் அன்பை முழுவதும் காட்டினார் !
மழலையின் சொற்பொழிவை
கேட்டு
மயங்கி போனார் பரவசத்தில் !
தன் காலில் தடம் பதித்த இடத்தில் தன் செல்ல மகளின் நடையை
கண்டு வியந்தார் !
பள்ளி பருவம் முடிந்து விரும்பும்
மேற்படிப்பை படிக்க வைத்தார் !
வயது செல்ல செல்ல தன் மகளின் வளமான எதிர்காலத்தை உருவாக்க
அரும்பாடுபட்டார் !
வாழ்க்கை எனும் அங்கத்தை ஒரு வசந்த காலமாக அமைத்து
கொடுத்தார் !
மகளுக்கு மண வாழ்க்கையை
முடித்து கொடுத்து
மனமே இல்லாமல் வீடு திரும்பினார் !
காணும் இடமெல்லாம் தன் மகளின்
கற்பனை முகம் என்று தேம்பினார்!
தனது பொறுப்பு முடிந்த மகிழ்ச்சி
தந்தையின் கண்ணில் துளியாய்
கொட்டியது !
* சொத்து என்பதன் பொருள் தந்தையின் அன்பு
மட்டுமே *
வேல்…
என் வாழ்க்கையின் திருப்புமுனை என் செல்வ புதல்வன் :
இல்லற வாழ்க்கை சந்தோசம் என்
இதயத்தில் மலர்ந்தது நீ தானே!
என் மனதில் பூத்த புன்னகையே
உன்னை பற்றிய சிந்தனை என்
நெஞ்சிலே!
பத்து மாதம் சுமந்த உன்னை
பத்திரமாக பாதுகாக்க தவம்
இருந்தேனே!
ஆசையாய் பெற்றெடுத்த என்
அழகின் அமுதான அன்பு செல்லமே!
அன்னையாகிய என்னை ஆனந்தப்
படுத்தும்
அற்புதமான பாசத்தின் தூய
உள்ளமே!
நீ தான் என் சந்தோசம் என்று
நான் அசந்து போவேன் உன்
அன்பினாலே!
என் மனதில் உள்ள பாரம் குறையும்
உன்னால்
என் வாழ்நாள் முழுவதும் உனக்காக
என்று !
உன் குறும்பு தனத்தை ரசிக்கின்றேன்
என் அன்புக்கு சொந்தகாரன் நீ தானே!
முரண்டு பிடிக்கும் குணம் உனக்கு
அதில்
மனம் மயங்கி நேசிப்பேன் உனை
கண்டு !
உன் கருவிழியின் ஓரம் ஈரம்
வந்தால் என் கண்கள் கலங்கி விடும்
தன்னாலே !
என் மீது அன்பு கொண்ட மகனே
உன் அன்புக்கு நான் அடிமை
என்றுமே !
நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அன்பின் பரிசாக
நீ உலகை காண வந்த நாள் தான் எனது
வாழ்க்கையின் திருப்புமுனை…!
வேல்…
கவிதைப் போட்டி 2021 _ 7
#முகக்கவசம்
‘கர்ணனுக்குக் கவச குண்டலம்போல்
கடவுள் மானுடர்க்கு வழங்கிய
வரப்பிரசாதம் முகக் கவசம்!
காது இருக்கும் வரை
முகக்கவசம் அணிந்து வந்தால்
சாதுவாய் இருக்கும் அந்த
சண்டாள வைரஸ்!
முகக்கவசமே அனைவருக்கும் உயிர்க்கவசம்! அதை
மூக்குக்கீழே அணிந்தால் நமக்குவரும் திவசம்!
தலையைக் காக்க ஹெல்மெட் வாங்கி
பைக்கில் மாட்டி பவிசாய்ச் சென்று உயிருக்கு
உலைவைத்துக் கொள்ளும் அறிவிலிபோல
தாடைக்கு மட்டும் மாட்டிக் கொண்டால் முகக்கவசம்
எரிமேடைக்கு நம்மை இட்டுச் செல்லும்!
நோயாளி மருத்துவர் செவிலியர் மட்டுமே
அணிந்தால் போதும் என்றநிலை மாறி
அனைவரும் அணிய ஆணையிட்டதரசு!
இருமல் தும்மல் வந்தால் மட்டும்
வெளிப்பட்ட வைரஸ் வாலாட்டியின்று
மூச்சுக் காற்றிலும் நுண்துகளாக
காற்றில் மிதந்தே அலைகிறதாமே!
பேருந்து அலுவலகம்
மருத்துவ மனையில்
இரட்டை முகக்கவசம் அணிந்து கொண்டால் நாம்
அரட்டை அடித்தே வீட்டில்
ஆரோக்கியமாக வாழலாமே!
குழந்தைகள் கர்ப்பிணிகள் வயதானவர்கள்
சர்க்கரை ஆஸ்துமா நோயாளிகள்
கூடுதல் எச்சரிக்கை கொள்ளல் வேண்டும் பொதுவெளியில்
கூடுதலைத் தவிர்த்தே கவசம் அணிதல் வேண்டும்!
வீட்டுக்குள் இருந்துவிட்டால் மருந்தின்றி நாமே
பெருந்தொற்றுக் காலத்தைக் கடந்திடலாமே!
கொரானா இல்லாத காலமாக இவ்வுலகைப்
புதிதாய் மீட்டுமே நாம் படைத்திடலாமே!’
என்றன் குருவே வாழ்க
பாவலர் கருமலைத்தமிழாழன்
தாயாக அன்புகாட்டித் தந்தை யாகத்
தட்டியெனை வளர்த்திட்ட குருவே வாழ்க
நாயாக நான்மாறிக் குரைத்தி டாமல்
நற்பண்பை எனில்விதைத்த குருவே வாழ்க
பேயாக நானலைந்து திரிந்தி டாமல்
பெருமையுற வழிவகுத்த குருவே வாழ்க
தூயமன ஒழுக்கத்தை அறிவை ஊட்டித்
துயர்வெல்லும் உறுதிதந்த குருவே வாழ்க !
பள்ளிதன்னில் நான்நுழையும் போது நல்ல
படம்வரையும் ஓவியஆ சிரிய ராக
பள்ளிவிட்டு வெளியேறும் போது நன்றாய்ப்
பாடத்தைக் கற்பிக்கும் ஆசா னாக
வெள்ளத்தை அடக்குகின்ற கரையாய் நின்று
வெளியுலகப் பொதுவறிவைப் பாடத் தோடே
அள்ளியள்ளி எனக்களித்தே என்வாழ் விற்கே
அடித்தளத்தை அமைத்திட்ட குருவே வாழ்க !
திருக்குறளின் வகுப்புதனை வாரந் தோறும்
திருக்கோயில் தனில்நடத்தி என்றன் நெஞ்சுள்
அருங்குறளின் மீதுபற்றை வளர வைத்தே
அதில்தோய்ந்து தமிழ்படிக்கும் ஆர்வ மோங்க
அருந்தமிழின் சுவையறியக் காப்பி யங்கள்
ஆழ்ந்தறியப் புலவரெனும் கல்வி கற்கக்
கருவாகத் திகழ்ந்தென்னைத் தமிழா சானாய்க்
கற்பிக்க எனைவளர்த்த குருவே வாழ்க !
குடிசையெனும் தம்வீட்டில் இடம ளித்துக்
குளிர்ந்தநிழல் மரம்சூழ்ந்த தோப்பிற் குள்ளே
படிப்படியாய் நான்படித்து வளர்வ தற்குப்
பக்கத்தில் அமர்ந்துநாளும் தூண்டி விட்டே
அடிமனத்துள் புதைந்திருந்த கவிதை தன்னை
அகழ்ந்தெடுத்து வைரத்தைத் தீட்டல் போன்று
வடித்தெடுத்துக் கவிஞனாக என்னை ஏற்றி
வான்புகழைப் பெறவைத்த குருவே வாழ்க !
கிருட்டினகிரி உயர் நிலைப் பள்ளியில் 10,11 ஆம் வகுப்புகளில் எனக்கு ஆசிரியராக இருந்து என்னை சிறந்த கவிஞனாகவும், சிறந்த குடிமகனாகவும் உருவாக்கியவர் என்னுடைய ஆசிரியர் தத்துவக் கவிஞர் இரா. பெருமாள் ராசு அவர்கள். அவர்களுக்கு இந்தக் கவிதையை காணிக்கை யாக்குகிறேன்.
பாவலர் கருமலைத்தமிழாழன்
கவிதை போட்டி:7
அப்பா……
மரத்தை தாங்கிப் பிடிக்கும் வேர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை.. அதுபோலவே குடும்பத்தை தாங்கி பிடிக்கும் அப்பாவின் உழைப்பை பலரும் உணர்வதில்லை… !
அப்பாவின் கண்டிப்பை பார்த்து அச்சமும் வெறுப்பும் கொள்ளும் குழந்தைகளுக்கு புரிவதில்லை
அதுதான் நம்மை நல்வழிப்படுத்தி வாழ்க்கையின் உயரத்தை அடைய வைக்கும்….
இன்பத்தினை இருமடங்காக நம்முடன் பகிர்ந்து துன்பத்தினை மறைத்து வைத்து சிரித்திடுவார்….!
அக்கறையும் பாதுகாப்பும் தருவதில் தந்தைக்கு நிகர் தந்தையை….
நம்மை தோளிலும் மனதிலும் தூக்கி சுமக்க கூடிய தெய்வம் ஒன்று உண்டென்றால் அது அப்பா மட்டுமே…..
லோகநாயகிசுரேஷ்குமார்
அப்பா நம் சொத்து
___________________
சாக்கடை அள்ளும் அவனுக்கு
சாக்கடையின் நாற்றத்திலே
நறுமனமாகிய குடும்பநன்மையே
ஞாபகத்திற்கு வரும்…
வீட்டிலோ பிள்ளைகளின்
வேண்டா வெறுப்பு பார்வையில்
தீண்டாமையின் நிழல்
தித்திப்பையே தரும் அவனுக்கு
காலண்டரில் கிழிக்கப்பட்ட
காகிதங்களோடு காலமும்
கரைந்து போயிற்று மெல்ல..
நாய்விற்ற காசு குரைக்காது என்றால்
சாக்கடை அள்ளிய காசுமட்டும்
நாறவா செய்யும்? அவர்களுக்கு
அந்தப்பணத்தில்
ஆளான பிள்ளைகளின்
என்ன சேர்த்து வைத்தாய்?
என்ற கேள்விக்கு
புன்னைகையை பதிலாக்கிவிட்டு
புதிராக சென்று விடுவான்…
ஒருநாள்,
மருத்துவமனையின் அழைப்பு கேட்டு
மூவரும் அங்கே சென்றபோது
வெள்ளை உடையில் ஒரு தேவதை
இறைவனாய் நின்று இயம்பிற்று….
உன் தந்தையின் சிறுநீரக த்திற்கு
ஒருகோடி ருபாய் விலை என்று..
தந்தையின் தியாகத்தில்
உருகினார்கள் பிள்ளைகள்..
சரியாகி வந்த அப்பாவின்
தோளில் சாய்ந்த போது அங்கே
தீண்டாமை விலகி விடை
பெற்றுக்கொண்டது..
அவன் அள்ளிய சாக்கடையின்
நறுமனம் மட்டும் மிச்சமிருந்தது
பணத்தைப்பங்கிட்டுக் கொள்ள
அவன் கூறியபோது
முத்தான பிள்ளைகள் மூவரும்
அப்பாவே எங்கள் சொத்து என்று
இருபது வருடங்கள் சேமித்து வைத்த
முத்தங்களை முத்தாரமாய்
பொழிந்தனர் அவன் மீது…
_________________________________
புது நிலவின் பூச்சுடறாய் – இப்
பூமியில நீ பிறந்தபோதும்
மேதினியில் வந்த வாழ்க்கை – உன்ன
பாதியில பறிச்சதேனோ….?
உனக்கு ஒன்னும் சேர்த்திடாம
ஊருக்கு நீ ஆக்கிப்போட்ட – ஓம்
ஒடம்பு கொஞ்சம் நோகுதுனு
ஒருநாளும் சொல்லலையே
நீ பட்ட கஷ்டமெல்லாம்
நீர் தடுச்ச நெருப்பப்போல
நிரந்தரமாய் தீருமுன்னு
நெனச்சு நீயும் வாழ்ந்திருப்ப
அத்தன பெறுங் கஷ்டத்திலும் – எங்கள
ஆளாக்கி வளத்துப்புட்டு – நாங்க
ஆளான நேரம் பாத்து – நீ
அழ விட்டு போனதேனோ….?
உயிரோடு இருந்த போது – நீ
உனக்காக வாழலயே – இந்த
உலகம்விட்டு போன பின்னே
உந்தன் வாழ்க்கை புரியுதம்மா
உன்னோட நெனப்பு எல்லாம் – எங்க
நெஞ்சோட நெருங்கும்போது
கண்ணோட நீர்த்துளியும்
கரைபுரண்டு ஓடுதம்மா
அடுத்த ஜென்மம் ஒன்னு வேணும்
அதில்-நீ பிள்ளையாக பிறக்க வேணும்
ஆரத்தழுவி உன்ன நாங்க
அள்ளி தூக்கி வளக்க வேணும்
ஏற்றுக்கொண்ட என் இறைவா
எந்தன் தாயை மண்ணறையில்
கருவிலுள்ள கண்மணிபோல்
காத்து நீயும் தந்திடுவாய்….
அம்மா…….
அந்த ஒரு நிமிடம்
அவளும் நானும்
ஒரு பேருந்து
பயணத்தின் போது ,
நெற்றியில் இட்ட பொட்டு
நிற்காமல் ஊஞ்சலாடுது ,
கருத்துப்போன பாசிமணி
கழுத்த போட்டு கடிச்சு எடுக்குது ,
உலர்ந்து போகாத ஈரக்கூந்தலும்
காற்றாட காத்திருக்குது ,
அந்த
கன்னத்தில் வழியும்
எண்ணெய் பிசுபிசுப்பும் ,
பிஞ்சு கால்களால் தேய்ந்த
கால் செருப்பும் ,
சொல்லவே தேவையில்லை
அவளோ
களத்து மேட்டில் வேலை செய்து
வியர்வையில் நீராடியவள் போல் ,
இதெல்லாம் கண்டு கொள்ளாமல்
ஓடாத கை கடிகாரத்தை மணிக்கொரு முறை
ஓயாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறாள்
நானோ விடாமல்
மேலும் கீழுமாய்
அவள்
சதைப்பரப்பை நோட்டமிட்டுக்கொண்டிருந்தேன்
திடீரென்று
அவள் கண் பார்வை
என் மீது வீச ,
விலகி போன துப்பட்டாவை இழுத்துப் பிடித்த கையோடு
என்னை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தாள் ,
நான் நால் அடி பின்னால் வைத்து
பேருந்தின் கடைசி
படியை இறுகப் பற்றிக்கொண்டேன்
பின் தொடர்ந்து வந்தவள் ,
என்னை பார்த்து
சகோதர வாஞ்சையாக
அண்ணா விலகி கொள்ளுங்கள் என்றாள்
அதோடு , பேருந்து நிறுத்தம் வந்து
அடுத்து சொல்ல முடியாத இரண்டுக்கும்
ஒரு நிறுத்தம் தந்து விட்டு போனது.
*அப்பா என் சொத்து*
சமீபத்தில் என் தந்தை காலமானார்
அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை
அவருடைய லட்சியங்கள் குழந்தைகளே
பணம் காசில்லை
நல்லதை நினை
நல்லதை செய்
நல்லதை பேசு
நல்லதே நடக்கும்
உதவும் மனப்பான்மை
சேமிக்கும் பழக்கம்
பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்.
உண்மைக்காக உழை
யாருக்காகவும் மாற்றிகொள்ளாதே
அதிகாலை விழி
நேரத்தில் உணவு உண்
தெய்வபக்தி முக்கியம்
உறவினர்களை மறவாதே
கடன் வாங்காதே
மண்ணை விட்டு மறைந்தாலும்
மனதை விட்டு மறையவில்லை
எஸ் வீ ராகவன் சென்னை
2020-ம் கடந்தானது….
21-ம் பிறந்தானது…..
என்னவானது கலாமின் 2020???
வேளாண்மையில் தன்னிறைவு…
தண்ணீர் இன்றி தவிக்குதோ????
விவசாயிகளின் போராட்டம்….
வேலையில்லா திண்டாட்டம்….
பள்ளிகள் எல்லாம் ஏராளம்…..
கட்டணங்கள் கூட தாராளம்…..
தரமான கல்வி என்பதெல்லாம்
தவிடு பொடி ஆகிடுமோ???
விஞ்ஞானி கனவெல்லாம்
வீணாகி போகிடுமோ???
ஒருபுறம் மருத்துவ துறையில் சாதனையாம்….
மறுபுறம் பல நோய்களுக்கு
மருந்தில்லா வேதனையாம்…..
“வறுமையற்ற இந்தியா”
வெறும் வார்த்தையோடு நின்றிடுமோ???
“வல்லரசு இந்தியா”
வெறும் சொல்லரசாக சென்றிடுமோ???
இருந்தும்…ஏதோ ஒருமூலையில்
சிறிதாய் ஒரு நம்பிக்கை…
“ஆனந்த சுதந்திரம்” அன்றோர் கனவு….
கண்டான் பாரதி….
இன்றோ அது நனவு…..
“வல்லரசு இந்தியா” இன்றோர் கனவு…
நிச்சயம் ஓர்நாள்
இதுவும் ஆகும் நனவு…..
2020- போனால் என்ன???
இன்னும் கூட காலம் இருக்கு…
கலாமின் கனவை நனவாக்குவோம்…
கலாம் கூட காலமாகலாம்…
அவர் விட்டுச் சென்ற
கனவு காலமாக கூடுமோ!!!!
-loganayagi mohankumar
நீரோடைப்போட்டிஎண்7
_______________________
உடல் கூட்டிற்குள் உயிர் பூவாய்
மலர செய்து என்னை
பத்தியத்தோடு பக்குவமாக
வளர்த்து என்னை
கல்வித் தேனை பருக செய்து
கணவனோடு வாழ்க்கை
அரியணை ஏற செய்து
பேரன் பிறக்குமுன்னே
நீ போய் சேர்ந்ததென்ன?
அவசரம்உன்னை ஆகாயத்திற்கு
அழைத்துக் கொண்டதோ?
நீ மாயம் கொண்டு
மறைந்ததென்ன?
ஆதியில் வந்த சொந்தம்
பாதியில் முடிந்ததென்ன?
சொந்தங்கள் வேண்டாமென்று
சொர்கத்திற்குப் போனதென்ன
பந்தங்கள் வேண்டாமென்று
பாடை கட்டி போனதென்ன?
அவசரம் உன்னை ஆகாயத்திற்கு
அழைத்துக் கொண்டதோ?
கடல் அலைகளில்
கரைந்துபோகும் மணலை போல
துயர் வெள்ளத்தில் கரைந்துபோக
இது வெறும்
தொட்டில் கொடி உறவல்ல
தொப்புள்கொடி உறவல்லவா!
உன்மரணம் பாதித்த
அந்த நிமிடம் என் வாழ்நாளின்
நிமிடங்களாயின…
முகக்கவசம்:
கவசம் கவசமுன்னு..
இருக்குற காசும் கவசம்
வாங்கி போய்டுமோ??
முகக்கவசம் வாங்கி போய்டுமோனு….
ஏழையின் ஏமாற்றம்!!!
என்ன செய்ய அவசியமாயிருச்சே..
கவசம் அவசியமாயிருச்சே…
அதனால என்னவோ??
அத்தியவாசியத்தை நினைக்கல..
இந்த ஏழை அத்தியவாசியத்தை
நினைக்கல!!!
இப்படி, இந்த கவசம்
ஏழைக்க வாழ்வில ஒரு புறம்!!
துப்பரவு ஊழியர,
மருத்துவர,
இதர இதர பணியாளர…
கும்பிட வைச்சது…
இந்த முகக்கவசம் போடக் காரணமான
கொரோனா!!!
கொரோனா வரும் முன்,
உலக நடப்பு நிகழ்வப்ப..
துப்புரவு ஊழியர்,
நாட்டுக்காக துணிஞ்சு
அசுத்தம்னு பாக்காம,
கிருமி சீறும்னு நினைக்காம
வேலை பாத்த நிமிடங்கள் மாறி…
வைரஸினால முகக்கவசம்
அணிஞ்சு வேலை பாக்குறத
நினைச்சா ஆறுதலா இருக்குதுங்க!!
முகக்கவசம் மூஞ்ச காக்குதுங்க..
மருத்துவருக்கும் கவசம்,
காவலுக்குள்ள மாதிரி தோணுது!!
இருந்தாலும் உயிர்க்கொல்லியினால,
உயிர ஊசலாட வைச்ச மாதிரி…
உயிர் ஊசல கவசத்துல,
அடக்குனமாதிரி ஆச்சாங்க!!!
இவ்வளவு இருந்தாலும்,
சுதந்திரமா மூச்ச விட்டு
இப்ப இந்த கவசத்தை போட
என்னவோ??
எரிச்சலாத் தான் இருக்கு…
எரிச்சலாத் தான் இருக்கு!!
குதிரைக்கு கடிவாளம்
போட்ட மாதிரி,
மனுசனுக்கு,
ரெண்டு காதுலயும் கயறு…
வாய்க்கோ வாப்பூட்டு….
இப்படி ஒரு மனநிலை…
குழந்தைங்க கிட்ட
நம்ம குழந்தைங்ககிட்ட!!!
இவ்வாறு, நம்ம கவசம்,
அதாங்க நம்ம முகக்கவசம்
ஒவ்வொரு, உள்ளங்களிடமும்…
ஒவ்வொரு மனநிலைய
காட்டுவனவாக உள்ளதோ!!!!
– லூவியா.
நீரோடைப்போட்டி எண்7
_______________________
பிரமைபிடித்தவனின்
சூன்யப்பார்வையைப் போல்
நிச்சலனமற்று இருக்கும்
எனக்குள் வந்த நீ! என்னைப்பார்த்து
தலை சீவிக்கொள்கிறாய்!
மீசையை முறுக்கி விட்டுக்
கொள்கிறாய்!
உன் காதலின் கவித்துவ
மொழிகளை தேர்ந்த நடிகன்
வசனம் பேசுவது போல் வசனம
பேசிவிட்டு செல்கிறாய்!
அவளும் அப்படிதான்
அவ்வப்போது வந்து
தலை சீவி, பொட்டிட்டு
பூச்சூடிக்கொள்கிறாள்..
உனக்கான கொஞ்சுமொழிகளை
என்னிடம் வீசிவிட்டு செல்கிறாள்
எல்லாவற்றையும் உள்வாங்கி
உள்வாங்கியே கண்ணாடியாகிய
நானும் உணர்வாகிப்போனேன்
உங்களைப் போலவே!
அதனால்தான் அந்த
உன் மாமன் மகள் ஊர்
மாற்றலாகிப்போனபோது
நொறுங்கிய உன் இதயம்
போல நானும் கீழே விழுந்து
நொறுங்கிப்போனேன்!
உன்னை பாதித்த
அந்த ஒரு நிமிடம் அது
என்னையும் பாதித்தது!
___________________________________
முகக்கவசம் :
அச்சுறுத்திலின் உறுதுணையாய்!
அங்கீகாரத்தின் வழிதுணையாய் !
ஆரவாரத்துடன் வலம் வந்தாய் !
அவ்வப்போது இடம் பெயர்கிறாய்! இவ்வுலகில்…
நீ இருக்கும் இடமெல்லாம் பயமில்லையே!
நாங்கள் போகும் இடமெல்லாம் உன்
துணை வேண்டுமே! இப்பொழுது…
ஒவ்வொரு நாளும் விதவிதமாக ,வண்ண வண்ணமாக
மாற்றப்படுகிறாய்!
ஒரு நாள் பயனாய் மனிதர்களுக்கு பலன் அளிக்கிறாய்!
பயமே உனை கண்டு தைரியமாகிறது!
மானிட உலகமும் உன் துணையை ஒவ்வொரு நாளும் தேடுகிறது!
உன் உதவியினால் மட்டும் தான் அச்சமில்லாத உலகை காண முடிகிறது இன்று!
இன்றைய காலகட்டத்தில் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க உன் உதவும் மனப்பான்மை மிக சிறப்பு!
வேல்…
கவிதைப் போட்டி 2021 _ 7
அப்துல் கலாமின் 2020 என்னவாயிற்று?
‘இந்தியா இவ்வுலகில் வல்லரசாகுமென்றே
இனிய கனவு கண்டீரே அய்யா!
இளையோர் துணையுடன் எறும்பென உழைத்து
தளைகளாம் ஊழலை தவிடுபொடியாக்கி
வெளிப்படை நிர்வாகத்தை களிப்புடன் அளித்தால்
வெற்றித் திருமகள் வாழ்த்துவாள் என்றீரே!
வல்லரசாம் நல்லரசில்,
நகரம் கிராமம் என்ற நாகரீகத் தகரம் தகர்க்கப்படும்!
குடிநீரும் மின்சாரமும் குறையிலாது கிடைக்கும்!
விவசாயமும் தொழிலும் சேவைத்துறையுடன் சிறக்கும்!
கண்போன்ற கல்வியும் பல்கியேப் பெருகும்!
உலகிலே உயர்வான மருத்துவம் கிடைக்கும்!
கறுமையாம் வறுமை ஒளிந்துவிடும், ஒழிக்கப்படும்!
பெண்ணினமும் குழந்தைகளும் பூப்போல காக்கப்படும்!
சமுதாயத்தில் அனைவருக்கும் சகலமும் கிடைத்துவிடும்!
திறமையும் அமைதியும் அமைந்திட இந்தியா
அனைவரும் வசிக்க ஆசைப்படும் நாடாக
அவனியில் அமையுமென அவதானித்தீரே அய்யா!
எங்களை மன்னியுங்கள்!
குறைகளும் சில கறைகளும்
எம்மிடம் உள்ளன!
உறக்கம் கொண்டுவிட்டோம் இனி
இரக்கம் இல்லாது உழைப்போம்!
மக்களின் ஜனாதிபதியே!
வானத்தின் விண்மீனே!
எமக்கு ஆசிகள் வழங்குங்கள்!
நீங்கள் எண்ணியதை முடித்தோம் என்ற
நல்ல செய்தியை நாங்கள்
விரைந்தே உங்களுக்கு வழங்குவோம்! இறையருளால்
இரைந்தே வெற்றியை முழங்குவோம்!’
அப்பா நம் சொத்து
……………………………….
ஆறு பிள்ளைகளை பெற்றெடுத்தாய்….
அன்பாய் அவர்களை வளர்த்தெடுத்தாய்…
கஷ்டத்தில் கண்களில் நாங்கள் பட்டதில்லை……
வேலியென காத்து நின்றாய்….
உன் போல் எங்களுக்கு யாருமில்லை….
பகலெல்லாம் கூலி வேலை….
இரவெல்லாம் இஸ்திரி வேலை….
லாந்தர் விளக்கும் கண் அயரும்…
அப்பா உன் கண் அயர்ந்து
நான் பார்த்ததில்லை…
ஓலை வீட்டில் ….
ஒழுகும் மழையில்….
குடையென நீ நனைந்து
குழந்தைகளை தூங்க வைப்பாய்…
எங்கள் ஆசை என்னவென்று
நிறைவேற்ற நீ தவறியதில்லை…
உனக்கென்ன ஆசை என்று
இன்று வரை நான் அறிந்ததில்லை…
உன் அகம் அதன் வலிகளை
இன்றுவரை
உன் முகம் அது காட்டியதில்லை….
நிலவும் கூட நித்திரை கொள்ளும்….
உன் நிழல் கூட ஓய்ந்து
நான் கண்டதில்லை…
காசு கொடுத்து
பொம்மை வாங்க…
கையில் ஏனோ வசதியில்லை…
களிமண் பொம்மை செய்து கொடுப்பாய்….
அதற்கு இணை ஏதுமில்லை….
உயிர் மட்டும் தான்
அந்த பொம்மைக்கு இல்லை…
உன்னால் இயன்றிருந்தால்
அதையும் கொடுத்திருப்பாய்….
அப்பா..
உன் அன்பிற்கு ஈடு இல்லை…
இருப்பவருக்கு என்ன தெரியும்??
இல்லாதவனிடம் கேட்டுப்பார்….
அவன் சொல்வான் அதன் பெருமை…
அத்தனை சொத்தையும் சேர்த்து
வைத்தேன் அப்பா…
அத்தனையும் விற்றாலும்…
“அப்பா” என்ற சொத்தை
எங்கு சென்று வாங்குவேன்???
மீண்டுமாய் பிறந்து வா…
என் மகனாக …
நான் உன்னை
வளர்ப்பேன் மகிழ்வாக….
மறுபிறவி என்னோடு சேர்ந்திருக்க…
அப்பா நீ மீண்டும் ஒருமுறை
திரும்பி வா…..
-loganayagi
அப்துல்கலாமின் 2020 என்னவாயிற்று :
இளைய தலைமுறையினரின் கனவை
நினைவாக்க
இன்றைய உலகம் வியப்புடன்
காண்பதற்கும்
இயலாமையை தகர்த்தெறிந்து
இனிமையான எதிர்காலம் நோக்கி
அடியெடுத்து வைக்க
விஞ்ஞானம் வளர்ந்து நாமும்
அதனோடு
வளர்ச்சியின் பாதையில் பயணித்திட
வேண்டும் என்றும்
இளையோரின் கல்வி செல்வத்தினை
தூண்டும் கோலாக வடிவமைத்த வித்தகர்
ஆலோசனையின் வழியில் சிறந்த
வழிகாட்டியாக
அகில உலகமும் போற்றும்
முன்னோடியாக
ஊக்கத்தின் வழியில் நம்மை
வழிநடத்தி
இந்திய பாரதமும் தலை வணங்கிடும்
சத்தியம் வெல்லும் ஒரு நாள்
கலாமின் கனவும் நினைவாகும்
நிச்சயம் ஒரு நாள் ….!
வேல்…
முகக்கவசம்
===========
விழி அறிந்த பகையுடன் வழி நடத்திய வருடம் கண்டிருக்க ,
விழி விளங்கா பகையுடன் வழி எதுவென்று அறியா கடந்தோமே !!
முகமே விழி விளங்கா கவசம் ஏற்ற நாமோ,
புறமே விழி விளங்கிய கவசமதை ஏற்றோமே !!
எங்கோ பிறந்த கிருமி ஒன்று , நாளைய பிறக்கும் உயிர்க்கென அறியா இருந்தோமே !!
இன்றைய விதி அது , நாளையும் இருமோ வருமோ ,
வந்தனன் விருந்தாய் அது படருமோ ?
விளங்காமல் , நித்தம் நித்தம் கரம்தனை நீரில் நினைத்தோமே !!
விருந்துண்ண நாம் எண்ண ,
பிறர் நம்மால் வருந்திய விருந்ததற்கு விலை தந்தோமே ,!!
சாதி பார்த்து , குலம் சேர்ந்து ,வளம் காண நாம் எண்ணி ,
நிலம் புதைக்க நம் சாதி இனமே நமை வெறுக்க கிடந்தோமே !!
வருடம் சொல்லிய பாடமதை கற்க ,கேட்க செவி இலையேல் ,
வருடும் வருடம் படரும் முன்னே
உயிர் இருந்தும் உய் இலையே !!!!!
முகக்கவசமதை ஏற்போமே !!!
எனது பகல் கனவு!!
எனைப் பாதித்த அந்த ஒரு நிமிடமாக….
உரு, உருப்பெறும் முன்னிருந்து,
உருவேற்றம் பெற்று, முழுஉருவமாக,
உலகை எட்டிப்பார்க்கும் வரை…..
எட்டி உதைத்தால்,
எறும்பின் குறும்பு போன்றும்…
உலகை எட்டும் முன்னே,
உள்உலகில் தொப்புள்கொடியின்
தோரணம்!!!
தொப்புள் கொடியிட்டு,
தொட்டியினுள் தண்ணீர் போன்ற அமைப்பில்,
ஓர் உள்உலகில் என் உருவம்….
என் ஒவ்வொரு அசைவிலும்,
அன்னைக்கு கொடுப்பது அழுத்தமாகிலும்,
அன்னைக்கு அது ஆனந்தமே!!
என என் மனதையே ஏய்த்து,
எனை இவ்வுலகில், ஏற்றி வைத்த
தாய்க்கு, எதை தானமாக கொடுப்பது??
என யோசித்த அந்நேரப்பொழுதில்,
அதிர்ச்சிகரமான செய்தி,
அன்னையின் ஆரோக்கியம் பற்றி,
அரசல் பரசலான பேச்சு!!
ஒவ்வொரு நாளாக,
நாட்கள் நகர,
பாதித்த மனது,
எனை மாற்றும் பாதையாக,
ஆரோக்கியம் குறைந்த உடல்நலம்,
ஆரம்ப ஆரோக்கியத்தைப் போலானது….
ஒரு பகல் கனவு!!
பாதித்து, மாற்றிய அந்த நிமிடம்…
அது கனவா?? நிஜமா???
ஆனால், அது அன்னையின் அன்புகலந்த,
ஆரோக்கியம் பற்றியே!!!!
– லூவியா.