கவிதை தொகுப்பு 62

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக சுதாபரமசிவம் அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 62

kavithai neerodai kavithai thoguppu

இமை மூடி
மெய் மறந்து
கண் அசறும் வேளையில்
உன் பொன் கரங்கள்
என் கன்னத்தை வருதுகிறது
அம்மா அம்மா என்று ஆசையாக!!!!
(அன்பு மகன்)


எதிர்பார்க்கும் ஆட்களும்
எதிர்பார்த்த நாட்களும்
ஏணிப்படியில் எட்டாத உயரத்தில் இருந்தாலும்
எதிர்பாராது கிடைக்கும்போதுதான்
எல்லை இல்லாத ஆனந்தம்!!


மாலை மங்கும் நேரம்
மலைகளோடு மேகங்கள்
முட்டி மோதும்போது
அங்கே அசைந்தாடும்
மரங்களின் இளங்காத்து இதமாய்
வயல்வெளிகளை வருடிவந்து
வாசனைவீசிச் செல்கிறது!!!!


அதிகாலை

சின்னஞ்சிறு சிட்டுக்குருவியின்
சிங்கார சினுங்கள்களும் !!
செவ்வானம் பார்த்து கூவும்
சேவலின் அழைப்பும்!!
கார்மேகம் பார்த்து கரையும்
காகத்தின் ஒலியும்!!
பரந்த வானத்தில் சுற்றும்
பறவையின் பாசக்குரலும்!!
இதமான மெல்லிசை காற்றில்
மெதுவாக கரைந்து வந்து
என்னை இனிமையாக வருடி
என் துயில் களைய வைக்கிறாய்!!


மண்வாசனை

தாயின் தாகம்
குழந்தை முகம் பார்ப்பதிலே தீரும்!!
நிலத்தின் தாகம்
நீர்த்துளியை கான்பதிலே தீரும்!!
மழைச்சாரல் மண்ணில் கலந்து
வரும் மண்வாசனையில்
மறுத்து கிடக்கும் என் மனம்
மயங்கி விடுகிறது!!


நினைவலைகள்

கண்ணே!!
நீ என்னோடு இருக்கும் நிமிடங்களைவிட
நீ என்னோடு இருந்த நிமிடங்களே
என் நெஞ்சோடு வருகிறது!!

kavithai thoguppu 62


தொடுவானம்

தொடுவானம் தொலைதூரத்தில் இருந்தாலும்
உன்னை நினைத்து உன்முகம் பார்க்கையில்
தொடுவானமும் தொடும்தூரத்தில் வந்துவிடுகிறது!!


அம்மா!!!

நீ எப்போது வேலை முடித்துவிட்டு
வருவாய் என்று
அன்போடு ஆவலடுடன் எதிர்பார்த்து
காத்திருக்கும் நீ
உன் பூவிரல் கொண்டு
என்னை தழுவையில் நான்
பூலோகம் மறந்து போகிறேன்!! – kavithai thoguppu 62


என் கை பிடித்து நடந்த உன் கால்கள்
இன்று பம்பரமாய் சுழல்கிறது!!
கை அசைவில் பேசிய
உன் இதழ்கள் இன்று கதை சொல்கிறது!!
எனக்காக காத்திருந்த உன் நாட்கள்
இன்று என்னோடு சாய்ந்து விட்டது!!
அழவில்லாத சந்தோசத்தை
அள்ளிக் கொடுக்கும்
அமிழ்தே நீ என் வரமல்லவா!!

– சுதாபரமசிவம் அரவகுறிச்சி

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *