குடியரசு தினம் 2020 – சிறப்பு கவிதைகள்
அகிம்சையின் வெற்றி அடையாளம்!
அடிமைத்தனத்தின் முற்று!
சமத்துவத்தின் சான்று!
உதிரம் சிந்தி, உயிர் நீத்து போராடிப் பெற்ற சுதந்திரத்தின் சுகம்!
அனைவரும் சமம் என்ற அரசியலமைப்பின் அடித்தளம்!
தம் சந்ததியின் சந்தோஷத்திற்காக தம்மையே அர்ப்பணித்த
தியாகிகளின் தியாக தினம்! – kudiyarasu thinam 2020
அரசர்தம் கொண்டது முடியரசு!
மக்களால் உண்டானது குடியரசு!
நமக்கான இந்நாளில் சகிப்பின்மை தவிர்த்து,
சகோதரத்துவம் பழகி, சுதந்திரம் உன்னதம் உணர்வோம்!
வேற்றுமையில் ஒற்றுமை எனும் நம்
தனித்துவத்தை மேலும் வலுவாக்குவோம்!
மனிதம் போற்றுவோம்!
இந்தியராய் என்றும் இணைவோம்!!
குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!!
– ஆனந்தி, ஓசூர்
kudiyarasu thinam 2020
இனிய குடியரசு தின நாள்
ஒவ்வொருவரும் நாளை விடியும் என்ற நம்பிக்கையுடன்
இரவை முடிக்கும் அனைத்துநாளும் இனிய நாள்தான்!
தாயின் வயிற்றில் இருக்கும் சிசுகூட
அம்மாவின் வயிற்றில் இன்பமாக இருப்பதால்
அந்த சிசுவிற்கு ஒவ்வொருநாளும் இன்ப நாள்தான்!
பள்ளிக்கு செல்லும் மழலைக்கு அன்புடன்
சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் கிடைத்தால்
பள்ளி செல்லும் அந்தநாள் அப்பிள்ளைக்கு
இனிய நாள்!.. – kudiyarasu thinam 2020
கதிரவன் வரும் எல்லா நாளுமே இனிய நாள்தான்!
ஏழை பணக்காரன் உயர்ந்தவர் தாழ்ந்தவர்
ஆண் பெண் என்ற பேதமறியா
கதிரவனிடம் கற்போம் நாளின் இன்பத்தை!
மனிதனின் மனம் எதை விரும்புகிறதோ
தடையின்றி அது நடந்தால் அவனுக்கு
அந்த நாள் இனிய நாள்!
மனிதர்களே நல்லதை நினைத்தால்
நல்லது நடக்கும்……..நினைப்பில்
களங்கம் இருந்தால் அது பிறக்கும் நாட்களை
களங்கமாக்கி விடும்……
தேவை இல்லாதவற்றை பார்க்காதே!
தேவை இல்லாதவற்றை கேட்காதே!
தேவை இல்லாதவற்றை பேசாதே!
என்ற மூன்று குரங்குகள் சொல்லும்
அறிவுரை நினைவில் கொண்டு
குடியரசு தினம் என்ற நல்ல நாளினை மகிழ்வோடு கொண்டாடுவோம்!
– உஷாமுத்துராமன் திருநகர்