குதம்பை சித்தர் வரலாறு மற்றும் பாடல்கள் விளக்கம்

பதினெண்-சித்தர்களில் ஒருவர் குதம்பைச்சித்தர். குதம்பை என்பது மகளிர் காதுகளில் அணியும் வளையம். குதம்பை அணிந்த பெண்ணைக் “குதம்பாய்” என விளித்து இவர் தம் கருத்துக்களைச் சொல்லியுள்ளதால் இவரைக் குதம்பைச்சித்தர் என்கிறோம் – kuthambai siddhar

kuthambai siddhar

இவர் யாதவர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர்களால் சீராட்டி வளர்க்கப்பட்டவர். தமக்கு பெண் குழந்தை இல்லாததால் இவரது தாய் இவரை பெண்ணாக அலங்கரித்து மகிழ்வாராம். பெண் குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் குதம்பை என்ற காதணி இவருக்கு அணிவிக்கப்பட்டதால், இவர் குதம்பை என அழைக்கப்பட்டு இவரது இயற்பெயர் மறைந்தே போனது.

குதம்பைச்சித்தர் பெண்களை முன்னிலைப் படுத்தி மகடூஉ இலக்கணப் முறைப்படிபாடியுள்ளார். இவருடைய பாடல்கள் எண்ணிக்கை கடவுள் வாழ்த்து சேர்த்து 246 ஆகும். இவரது பாடல் உலக வாழ்வைப் போற்றியும் வெறுத்தும் பாடப்பட்டவை. இறுதியில் மயிலாடு துறையில் இறையொளி எய்தினார்.

பட்டயம், முத்திரை, உத்தியம்(இலக்கு), ஆசை, மோகம், ஏகாந்தத் துறவு, ஞானம், பல்லாக்கு-ஊர்தி, கோலம்(ஒப்பனை), கைத்தாளம்(மகிழ்ச்சி), – போன்றவை வீண் ஆடம்பரங்கள் என்று இவர் குறிப்பிடுகிறார் – kuthambai siddhar.

கடவுளைப் போற்றுவோம்

பூரணங் கண்டோர்இப் பூமியி லேவரக் காரணம் இல்லையடி குதம்பாய்!காரணம் இல்லையடி!
விளக்கம்
காதிலே குழையணி அணிந்த பெண்ணே! நான் சொல்லும் பாடத்தைக் கேளடி!
இந்த உலகத்திலே பேரொளியான முழு முதற் கடவுளைக் கண்ட மெய்யறிவோர், மீண்டும் பிறவியெடுக்க மாட்டார். ஏனென்றால் அவர் விருப்பும் வெறுப்பும் அற்றவர் என நீ அறிக!


போம்காலம் நீங்கநற் பூரணம் கண்டோர்க்ச் சாம்காலம் இல்லையடி குதம்பாய்! சாம்காலம் இல்லையடி
விளக்கம்
காதில் குண்டலம் அணிந்த பெண்ணே! அழியும் காலம் நீங்கும்படி முமுதற் கடவுளைக் கண்டோர்க்கு சாகும் காலம் என்பது ஒருநாளும் வராது. அம்மா!


“செத்துப் பிறகின்ற தேவைத் துதிப்போர்க்கு முத்திதான் இல்லையடி குதம்பாய்! முத்திதான் இல்லையடி”
விளக்கம்
குதம்பாய்! இறந்து மீண்டும் பிறக்கும் சிறு தெய்வமான தேவர்களை, வேள்வியால் வழிபடுகின்ற மக்களுக்கு மீண்டும் பிறக்கக் கூடிய நிலை இல்லாது முத்தி என்பது உண்டென அறிவாயம்மா!

குறிப்புகள் வழங்கிய கோமகன் அவர்களுக்கு நன்றி !

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    குதம்பை சித்தர் பற்றிய அறிய தகவல்கள் அருமை ..தொகுப்புக்கு நன்றி