பிரதோஷ பலன்களும் மந்திரமும்
பிரதோஷ தரிசனம் பெரும் பாக்கியமும் புண்ணியமும் தரும். இந்த நாளில் சிவாலயங்களுக்குச் சென்று சிவனாரையும் நந்தியையும் வணங்குவது நன்மை பயக்கும். இந்த நாளில் பிரதோஷ விரதம் இருந்து சிவனை வழிபட்டால் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள் இதோ pradosham palangal mantram tamil,
1. பால் – நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்
2. தயிர் – பல வளமும் உண்டாகும்
3. தேன் – இனிய சாரீரம் கிட்டும்
4. பழங்கள் – விளைச்சல் பெருகும்
5. பஞ்சாமிர்தம் – செல்வம் பெருகும்
6. நெய் – முக்தி பேறு கிட்டும்
7. இளநீர் – நல்ல மக்கட் பேறு கிட்டும்
8. சர்க்கரை – எதிர்ப்புகள் மறையும்
9. எண்ணெய் – சுகவாழ்வு
10. சந்தனம் – சிறப்பான சக்திகள் பெறலாம்
11. மலர்கள் – தெய்வ தரிசனம் கிட்டும்.
விளம்பி வருட (2018-2019) பிரதோஷ நாட்கள்
சித்திரை 14 (27-04-2018) | சித்திரை 30(13-05-2018)
வைகாசி 13 (27-05-2018) | வைகாசி 28 (11-06-2018)
ஆனி 11 (25-06-2018) | ஆனி 26 (10-07-2018)
ஆடி 9 (25-07-2018) | ஆடி 24 (09-08-2018)
ஆவணி 7 (23-08-2018) | ஆவணி 22 (07-09-2018)
புரட்டாசி 6 (22-09-2018) | புரட்டாசி 20 (06-10-2018)
ஐப்பசி 5 (22-10-2018) | ஐப்பசி 19 (05-11-2018)
கார்த்திகை 4 (20-11-2018) | கார்த்திகை 18 (04-12-2018)
மார்கழி 5 (20-12-2018) | மார்கழி 19 (03-01-2019)
தை 5 (19-01-2019) | தை 19 (02-02-2019)
மாசி 5 (17-02-2019) | மாசி 19 (03-03-2019)
பங்குனி 4 (18-03-2019) | பங்குனி 19 (02-04-2019)
பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம்
1. ஓம் பவாய நம பகவானே என்னைக்காப்பாற்று
2. ஓம் ருத்ராய நம என் குற்றங்களைச் சிந்தனையிலிருந்து மறைய வேண்டுகிறேன்
3. ஓம் மிருடாய நம என் துன்பங்களைப்போக்கி சுகம் தரும்படி கேட்கிறேன்
4. ஓம் ஈசானாய நம நல்ல வழி, நற்புகழ் அடைவதற்கு வழிகாட்ட வேண்டுகிறேன்
5. ஓம் சம்பவே நம எனக்கு உயர்வு அடைய வழி காட்டுதல்6. ஓம் சர்வாய நம கொடியவர்களைத்தண்டிக்க தாங்கள் முன்வர வேண்டும்
7. ஓம் ஸ்தாணவே நம பகவான் சிறிதும் அசைவின்றி நிலை பெற்றிருப்பவர்
8. ஓம் உக்ராய நம ஆசை, பாசம், எதிலும் நிலையான ஆட்சி செய்பவர்
9. ஓம் பர்க்காய நம பகவானின் சிறப்பான உருவம் தருமாறு கேட்டல்
10. ஓம் பரமேஸ்வராய நம பகவானுக்கு ஒரு ஒளிமயமான திருவுருவம் தோன்றுதல்
11. ஓம் மஹா தேவாய நம பகவானுக்கு ஒரு ஒளிமயமான திருவுருவம் தோன்றுதல்
Pradosa dates are very useful, Thanks