சாதி மத பேதம் சாடும் சித்தர்கள்
உலகில் முதல் முதல் உயிரினம் தோன்றிய இடம் லெமுரியா கண்டம் என அழைக்கப்பட்ட குமரிக்கண்டம் என்னும் தமிழ் பெருநிலப் பரப்பாகும். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி, உலகின் மூத்த குடியில் பிறந்த பன்னெடுங்காலத்திற்கு முன் நமது மூத்த குடியில் பிறந்த பேரறிவாளர்கள், மெய் அறிவாளர்கள், மகான்கள் , ஞானிகள் மாமனிதர்கள் தான் சித்தர்கள். இவர்கள் முக்காலமும் அறிந்தவர்கள் – siddargal oru payanam.
“மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன்” எனத் தொல்காப்பியம் கூறுகிறது.
சித்தர்கள் என்பவர்கள் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நிலையில் அவர்களும் முயன்று தவமியற்றி மெய்யறிவு ஆராய்ந்தறிந்து அனுபவித்த பேருண்மைகளை பேரின்ப நிலையை அறிந்த உணர்வுகளை அனைவரும் அடையவேண்டும் என எண்ணியவர்கள் சித்தர்கள்.
நவகோடி சித்தர்கள்
சித்தர்கள் தாங்கள் கண்ட மெய்யறிவினைஅழகிய பாடல்களாக எழுதி வைத்துள்ளார்கள். அவைகளில் யோகம், ஞானம் , இரசவாதம் , வைத்தியம், சோதிடம் , பஞ்சபட்சி மூச்சுப்பயிற்சி என்னும் நூல் வர்மம் , சாமுத்ரிகா லட்சணம், மனையடி சாத்திரம், வானியல் போன்ற எண்ணற்ற செய்திகளை சித்த நூல்களில் எழுதி வைத்துள்ளார்கள். தமிழ்நாட்டு சித்தர்களை நவகோடி சித்தர்கள் என்றும் நவகோடி சித்தர்கள் மரபு என்றும் கூறுவர் சித்தர்கள் என்றால் சித்தி பெற்றவர்கள் பேரறிவாளனை அறிவாளர்கள் என சங்க இலக்கியங்களில் குறிப்பு உள்ளது.
சித்தர்கள் வாழ்ந்ததால் தமிழ்நாட்டை அறிவன் தேயம் என இலக்கியங்கள் தெரிவிக்கின்றன கருவூரார் எனும் சித்தர் பதினெட்டு சித்தர்களை கீழ்கண்டவாறு வரிசைப் படுத்தி உள்ளார்.
பிண்ணாக்கீசர் காலங்கி
“பார்த்திடவே நந்தீசர் மூலத்தீசர் பண்பான அகத்தீசர் சட்டைநாதர் போர்த்திடவே பதஞ்சலியும் ஊணர்கண்ணர் கோரக்கர் கமலமுனி சண்டிகேசர் கூர்த்திடவே இடைக்காடர் சிவாயசித்தர் கொங்கணவர் தந்தை அவர் போகநாதர் காத்திடவே மச்சமுனி பிண்ணாக்கீசர் காலங்கி சுந்தரரும் காப்பு தானே”.
இந்த வரிசையில் அடங்காத சித்தர்களும் தோன்றியுள்ளார்கள். சித்தர்களின் பாடல் யாவுமே மெய்அறிவியல் நெறிகளை விளக்குவதாக உள்ளன . தமிழ் சித்தர்கள் மரபில் தோன்றியவர்கள் திரு அருள் ஒளி வள்ளலார் அவர்கள் சன்மார்க்க சங்கம் கண்டதுடன் ஆறு திருமுறைகளிலும் அவரது சீரிய கருத்துக்களை பாடல்களாக தொகுத்துள்ளார்கள். சித்தர்கள் சமூக அக்கறை உள்ளவர்கள் – siddargal oru payanam.
உலகம் உய்ய உயரிய கருத்துக்களை அழகிய தமிழ்ப் பாடல்களாக வழங்கியுள்ளார்கள். சித்தர் பாடல்களில் மூடநம்பிக்கைகளை களைவது , சாதி சமய வேறுபாடுகளைச் சாடுவது பெண்ணின் பெருமையை , பெண்ணின் உரிமையை பேணுவது , தன்னை உணர்ந்து மெய் பொருள் காண்பது போன்ற உயரிய கருத்துக்களை உள்ளடக்கிய வாழ்க்கை நெறியாக வடித்துள்ளார்கள்.
பாடல் வரிகள்
தமிழ் சித்தர்கள் சமுதாயத்தில் நிலவிய சாதி சமய வேற்றுமைகளை சாடினார்கள் அத்தகைய கருத்துக்களை விளக்கும் சித்தர்களின் பாடல் வரிகள் இவை
“பறைச்சியாவது ஏதடா பார்ப்பணத்தியாவது ஏதடா இறைச்சி தோல் எலும்புளே இலக்கமிட்டு இருக்குதோ”
“சாதியாவது ஏதடா எல்லாம் பூத வாசல் ஒன்றாலோ பூதம் ஐந்தும் ஒன்றாலோ காதில் வாளி காரை கம்பி பாடகம் பொன் ஒன்றல்லோ சாதி பேத ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ” என்ற சிவ வாக்கிய சித்தர் பாடியுள்ளார்.
“பொய் மதங்கள் போதனை செய்து குழுக்களை புத்தி சொல்லி நன்னெறியில் போகவிருக்கும் மெய்மறந்தான் இன்னதென்று மேவ விளம்பும் குருவின் பாதம் போற்றி ஆடாய் பாம்பே” என பாம்பாட்டி சித்தரும்,
திருமூலர்
“சாதி பேதம் இல்லை அகப்பேய் தானாகி நின்றவர்க்கே” என்று அகப்பேய் சித்தர் “ஒன்றே குலம் ஒருவனே தேவன் நன்றே நினைமின் நமனில்லை நாளுமே சென்ற புகுங்கதி வேறு இல்லை நும் சித்தத்து நின்றே நிலைபெற நீ நினைத்துய்யுமே” என்று திருமூலரும் ,
“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திர சந்தடிகளிலே கோத்திர சண்டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்றீர்”
பன்னெறி சமயங்கள் பதங்கள் என்றிடுமோர் பவநெறி இதுவரை பரவியதால்
செந்நெறி அறிந்திலர் இறந்தகலந்துலகோர்
செறி இருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ புன்னெறி தவிர்த்து ஒரு பொது நெறி எனும் வான் தன்னெறி செலுத்துக” என அருள் ஒளி வள்ளலாரும் சாதி மதங்களைப் பற்றி சாடியுள்ளார் – siddargal oru payanam.
சித்தர்கள் பற்றிய பதிவு மிகவும் அருமை. மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது சித்தர் உலாவிய நாடு நமது என்று எண்ணும்போது மெய்சிலிர்க்கிறது .
அருமையான ஆன்மீக விளக்கம்
சித்தர்கள் பற்றிய செய்திகள் மிக அருமை!