சுமை தாங்கிகள்

ஒர் அழகான மார்கழி மாத காலை பொழுது,பனியை ரசித்து போர்வைக்குள் முகத்தை மூடி ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை விழிப்போமா வேண்டாமா என உறங்கி விழிக்கும் இளைஞனை போல மேகத்து போர்வைக்குள்ளிருந்து உதயமாவோமா இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து விழிப்போமா என பொறுமை காக்கும் சூரியன் sumai thaangi tamil story.

ஆறாம் நூற்றாண்டில் உதித்த ஓர் தீர்க்க தரிசியின் தீர்க்க தரிசனம் பெற்ற ஓர் நாட்டின் சிறு நகரத்தில் நடுத்தர குடும்பத்தை கொண்ட வீட்டின் மாளிகையின் சிறு கடைசி பகுதியின் விலை உயர்ந்த நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அறையை விட சிறியதும் வசதிகள் குறைந்ததுமான ஓர் அறை. ஒரு மனிதனின் சராசரி உயரம் ஆறு அடி என்றால் அந்த அறையின் நீளம் ஓர் 12 அடி இருக்கும் எனொள்ளலாம். அந்த அறையினுள் உள்ளேயே குளிப்பதற்கும் கழிப்பதற்க்கும் சேர்த்து 3அடிக்கும் குறைவான ஓர் அறை.இந்த 12 அடியில் 5அடிக்கு நீளமான கட்டில்.12அடியின் பாதிக்கு அகலம்.

கருப்பு வெள்ளை தொலைக்காட்சி

அந்த அறையின் உயரம் மட்டும் அதிகம்.எந்த மனித மனதிற்க்கும் இல்லாத உயரம். அந்த அறையில் மாளிகையில் குடியிருக்கும் குடும்பத்தார் உபயோகித்த பழைய கருப்பு வெள்ளை தொலைக்காட்சி பெட்டி அங்கு அது தொல்லைதான் அதில் எதுவும் பார்த்து கேட்டு ரசிக்க முடியாது இருந்தும் அது அங்கு இருந்தாக வேண்டிய கட்டாயம்.மேலும் வசதிக்காக தொலைக்காட்சி பெட்டிக்கு துணைக்கு ஓர் குளிர்சாதனை பெட்டி ஓர் ஐந்து அடியில் சமைப்பதற்கு ஓர் மின்சாதன அடுப்பு அதில் சமைப்பது என்பது ஒரு சாதனையே குளிர் கால உபயோகமாய் இருக்கும் கம்பி சுருள் வெளியே தெரியும் படி உள்ள அடுப்பு.அதன் அருகில் மீந்து தேதி முடிந்த சில பண்டங்கள் மற்றும் பொடிகள் எல்லாம் கொண்ட இந்த அறையில் ஓர் மனித உயிரும் ஐந்தடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது.

அந்த உயிரின் தூக்கதை கலைக்க ஏதேனும் சேவலோ அல்லது கானக்குயில்களோ என்றேனும் பாடும் என அந்த உயிரும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தது.ஆனால் நடப்பது எல்லாம் அந்த உயிர் நினைக்காதது தான்.ஆம் அன்றும் அவ்வுயிரோடு இருக்கும் செல்லிடை பேசி அலைத்தது.

மறுமுனையில் சில கிராமங்களில் சாதிக் கலவரங்கள் நடந்துவிடுமோ என பயந்து தலைவர்களின் சிலையை துணியால் முழுவதும் மூடி வைப்பார்கள்.இந்த நாட்டில் காமக்கலவரங்கள் நடந்து விடுமோ என என்னி பொன்னாய் இருக்குமோ என என்னும் பெண்களையும் தங்க சிலையாய் என்னி உச்சி முதல் கால் நகம் வரை அனைத்தையும் கருப்பு அங்கியால் மறைத்து கொள்வர்.அப்படி உடை அணிந்த பெண்ணிடம் இருந்து வாயின் உதடுகள் விரிந்ததோ என தெரியாது கருப்பு துணியை கிழித்துக்கொண்டு அந்த சத்தம் வந்தது சாமி எல்லா தால் தால் சூர்ரா சூர்ரா(சீக்கிரம் வா) அது அந்த தொலைபேசியின் ஓர் ஆணையாய் தூங்கிகொண்டுருந்த வண்டி ஓட்டுனர் ராமசாமியின் காதுகளை அடைந்தது.

ராமசாமி தமிழ் நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகராட்சி பேருந்துகள் கூட செல்ல முடியாத ஓர் குக்கிராமத்தின் மூன்று மகன்களை பெற்ற தாய்க்கு நான்காவது மகனாய் பிறந்தார்
சிறு வயதிலேயே தாயை பரிகொடுத்து தந்தையின் அரவனைப்பில் பலகாலமும் சித்தியின் கொடுமையில் சில காலமும் வளர்ந்தார்.நாளும் காலமும் அதன் போக்கில் சுழன்றன.ராமசாமிக்கு திருமணம் நடந்து இரண்டு பெண் குழந்தைகள் திருமண வயதை அடைந்து கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த நேரம்.

அவர் வசித்தது நகரமும் கிராமும் அல்லாத ஓர் ஊர் சொந்தமாக அம்பாசிடர் கார் வைத்து வாடகைக்கு விட்டு இவரே ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார்.கடின உழைப்பாளியும் கூட.

ராமசாமி வேலைக்கு செல்லாமல் ஊதாரிதனமாக சுற்றும் தந்தை அல்ல.வேலைக்கு செல்வார் நல்லா சம்பாதிப்பார்,சம்பாதித்த பணத்தை குடித்து தீர்ப்பார்.அவர் அந்த பகுதி டாக்சி ஓட்டுனர் சங்கத்தின் தலைவர் ஆவார்.அதனாலயே குடிமகன்களுக்கு கொடையளிக்கும் கர்ணனும் அவரே.போன பாராளமன்ற தேர்தல் நேரத்தில் அவர் வண்டிதான் வேட்பாளரின் வருகையை தெருவுக்குள் அறிவித்து சென்றது.அதில் அவர் சம்பாதித்த பணத்தை சேர்த்து வைத்திருந்தால் அடுத்து வரும் ஊராட்சி தேர்தலில் வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்கு வாங்க செலவு செய்திருக்கலாம்.

என்ன செய்ய காலம் நம்மை வைத்து ஆடும் ஆட்டம் தான் எத்தனை எத்தனை.

அன்று ஒரு நாள் தன் மைத்துனர் வெளிநாட்டிலுருந்து வந்ததை காரணம் காட்டி வீட்டில் அவருக்கு விருந்து வைத்து குடித்து தீர்தார்.குடும்பத்துடன் வந்த மைத்துனர் ராமசாமி வீட்டில் இரண்டு நாட்கள் தங்க திட்டம் இருந்தது.ஆனால் முதல் நாளே தான் கிளம்புவதாக மைத்துனர் கூறினார்,என்ன காரணம் என்று விசாரிக்க வெளிநாட்டில் ட்ரைவர் வேலைக்கு ஒரு விசா தன்னிடம் உள்ளதாகவும் அது சம்பந்தமாக ஒரு ஆளை பார்க்க போகவேண்டும் என்று மைத்துனர் கூறினார்.சிறிய மின்னல் கீற்றுதான் அடர்ந்த இருட்டையும் ஒரு நொடி பிராகசிக்க செய்யும்.அப்படி ஒரு மின்னல் வெட்டுதான் ராமசாமியின் மூத்த மகளுக்கு ஏற்பட்டது.மாமா அந்த விசாவை அப்பாவுக்கு கொடுங்க அவரு வெளிநாட்டுக்கு போகட்டும் என்ற வார்த்தை நொடி நேர பிராகசமாய் படர்ந்தது அந்த வீட்டில்.பின் அந்த வார்தையை ராமசாமியின் மனைவி பிடித்துக்கொண்டார்.ஆமா தம்பி இவரு இங்க இருந்து எல்லாப் பிரச்சனையிலும் மூக்க நுலச்சுருராரு,வேலை முடுஞ்சா ஸ்டாண்டுல இருந்து வீடுக்கு வரதில்லை,மொத்தமா குடுச்சு தீர்துட்டு வந்தா என்ன பன்றது.கல்யாண வயசுல ரெண்டு புள்ளைக இருக்குனு மனுசனுக்கு கவலை இருக்கா நீயே பாரு தம்பி என கண்ணீர் துளிகளுடன் வார்த்தைகளை உதிர்தார் ராமசாமியின் மனைவி.நீண்ட சண்டை சச்சரவுகுளுக்கு பின் ராமசாமி வெளிநாடு செல்ல சம்மதித்தார்.

அழகான ஓர் காலை பொழுதில் பல வண்ணக்கனவுடன் முதல் விமான பயணம் திருச்சியிலுருந்து புறப்பட்டது பின் இலங்கையில் 3மணி நேர வேறு விமான இணைப்பிற்கு பிறகு சூரியன் மறையும் ஓர் இரவில் விமானம் தரையிரங்கியது ராமசாமியின் கனவுகளும்.ஆறு முதல் ஏழு மணி நேர குடியேற்றம் மற்றும் பாதுகாப்பு சோதனைகளுக்கு பிறகு விமான நிலையத்தை விட்டு வெளியேற நல்லிரவை கடந்தது.பிறந்தது முதல் பார்த்து கொண்டுருக்கிற வானமும், நிலவும், நட்சதிரங்களும் ஏனோ இன்று தனிமையில் அழகாய் தெரிந்தது. வந்து சேர்ந்த செய்தியை மெல்ல நகரும் நிலவிடம் சொல்லிச்சொல்வோமா என எப்போதும் தோனாத கற்பனையெல்லாம் அந்த இரவில் தோன்றியது.

இந்த இரவினில் யாரையும் தொந்தரவு செய்யவேண்டாம் என்ற கிராமத்து எண்ணம் விமான நிலைய இருக்கையிலையே இரவு உரக்கம் உரங்காமலே இரவு முடிந்தது. யாரையோ எதிர்பார்த்து இருண்டு போன மணம் சூரிய உதயத்தின் போது தெம்புடன் துளிர்த்தது இந்திய மதிப்பிற்கு ஈடாய் மாற்றி வந்த இந்நாட்டு நாணயத்தை கொண்டு தன் மச்சானை தொலைபேசியில் அழைத்து தூக்கம் தொலைத்த துக்கத்தை சொல்லி அழுதார். மைத்துனர் முதலாளிக்கு தகவல் தெரிவிக்க முதலாளி வந்தார் விமான நிலையத்திற்கு ராமசாமியை அழைத்து செல்ல மைத்துனர் சொன்ன இடத்தில் நின்று முதலாளிக்கு காத்திருந்தார். முதலாளியும் வந்து ராமசாமியின் முதல் பாதியை நீக்கி சாமி என பெயரிட்டார்.

முதல் இரண்டு நாள் வண்டியில் முதலாளியுடன் சென்று இடங்களை தெரிந்து கொண்டு பின் இந்த நாட்டில் தங்குவதற்கான உரிமம் மற்றும் வாகன உரிமம் பெறப்பட்டது. எங்கு சென்றாலும் அந்த உரிமம் இல்லாமல் செல்லக்கூடாது, காவல்துறை சோதனைகள் அடிக்கடி ஆங்காங்கே நடைபெறும் என சாமிக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. எதை பார்தாலும் ஊரின் ஞாபகமாய் தெரிந்தது.

புது மக்கள், தெரியாத மொழி அனைத்தும் சேர்ந்து பயத்தை அதிகரித்தது.

எல்லாம் முடிந்து ஒரு வாரம் ஓடியது. அடுத்த வாரத்தின் ஓர் மாலை பொழுதில் நல்ல மழை பெய்தது, சாலை முழுதும் தண்ணீர், சேர், சகதி. எப்போதோ பெய்யும் மழையில் ஓடி ஆடும் சின்ன குழந்தைகள் போல இங்குள்ள இளைஞர்கள் நான்கு சக்கர வாகனத்தில் சீறிக்கொண்டு போட்டி போட்டு வண்டி ஓட்டி விளையாடுவர். இதில் சாமி வேலை செய்யும் வீட்டின் முதலாளியின் மகனுடைய வண்டி விலை உயர்ந்த வெள்ளை நிறம் கொண்டது. ஆசை தீர முழுதும் விளையாடிவிட்டு இரவு ஒரு மணிக்கு மேல் வீடு திரும்பினான் முதலாளியின் மகன்.   சாமி வேலை பார்க்கும் வீட்டில் ஒரு வயதான விதவைத்தாய் இரண்டு மகன்கள் மூன்று மகள்கள் இதில் இருவருக்கு திருமணம் முடிந்தது. இளைய ஒருவர் கல்லூரி சென்று கொண்டிருக்கும் மாணவி. அந்த தாய் ஒரு ஆரம்ப பள்ளியில் ஆசிரியை.

வயதான தாய், மாணவி, தாய்பாசத்தால் நாளுக்கு இரண்டு மூன்று முறையெனும் தாய் வீடிற்கு வந்து செல்லும் திருமணம் ஆன இரு பெண்கள். இவர்களையெல்லாம் பள்ளி கல்லூரிக்கு வண்டியில் அழைத்து செல்வது, முடிந்ததும் கூட்டிக்கொண்டு வருவதும், தாய் வீட்ற்கு வரும் இருவரையும் அவர்கள் அழைக்கும் நேரம் போய் கூட்டிக்கொண்டு வருவது கடை தெருவுகளுக்கு கூட்டி செல்வது பின் அவர்கள் போக நினைக்கும் நேரம் மீண்டும் அவ்ர்களது வீட்டிற்கு அழைத்து செல்வது அனைத்தும் சாமியின் கடமை.

இப்படி சென்று கொண்டிருந்த ஒரு நாளில் அவர் வேலை செய்த வீட்டின் பக்கத்தில் இருந்த ஒரு முருங்கை மரத்தில் பிடுங்கிய முருங்கை இலைகளை ஆசை ஆசையாய் உருவி தனக்கு தெரிந்த பக்குவத்தில் கம்பிசுருள் சுற்றப்பட்ட அடுப்பில் ஒரு பகுதியில் சாம்பாரும் இன்னொரு அடுப்பில் சோரும் வெந்து கொண்டிருந்த நேரம் வந்தது தொலைபோசி அழைப்பு சாமியின் ஆசைக்கும் பசிக்கும் தீங்கு செய்யும் நோக்கோடு தால் தால் சூரா சுரா சாமி என்ற வார்த்தைகள். இன்னும் 15 நிமிடம் காத்திருந்தால் அனைத்தும் வெந்து விடும் பிறகு எந்நேரமேனும் வந்து சாப்பிட்டுக்கொள்ளலாம், எல்லாம் சரிதான் அங்கு அவர்கள் காத்திருக்கனுமே.

அது நடக்காத ஒன்று.

அடுப்பின் நெருப்பை தன் வயிற்றில் மாற்றிக்கொண்டு அவசரமாய் நடந்து போய் வண்டியை திறந்தார். 15 நிமிடம் கழித்து ஊர் சுற்றப்போகும் சந்தோசத்தில் வந்தார்கள் குடும்ப பெண்கள் நால்வரும். அனைத்தும் முடிந்து நடுனிஷிக்கு அரை நாளிகைக்கு முன் வீடு திரும்பினார்கள், பின் திருமணமான இருவரை அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு திரும்பி வந்த சாமிக்கு பசியால் வரும் தூக்கமும் சுகம்தான் என்ற எண்ணமும் இன்னும் 15 நிமிடத்தில் சமையல் முடிந்துவிடும் என்ற எண்ணமும் மாறி மாறி அழைக்கழித்தன. இரண்டையும் நிறைவேற்றும் பொருட்டு பசிபோக்க நினைத்து சமைத்து முடிக்காத சோற்றை உண்டு,சொல்ல முடியாத சோகத்தை பிறரிடம் பகிரவும் வழியில்லாமல் மனதிற்குள்ளேயே கிடந்து உழன்று கொண்டே கண் அயர்ந்தார் சாமி.யாரும் பார்க்காத சாமியின் கண்ணீர்த்துளி தலையனையை நனைத்தது.

துட்டு இல்லாதவர்களின் துக்கத்தை போக்கும் மருந்தே தூக்கம் தான் என்று பணக்காரர்களுக்கு தெரிவதில்லை. சாமியின் அறை கதவு தட்டும் சத்தம் கேட்டது, அடுத்தடடுத்து படபட வென்று பலத்த சத்தம் என்னமோ ஏதோ என்று தூக்கதிலிருந்து பதட்டத்துடன் அறை கதவை அரை மனதோடு திறந்தார்.

அந்த நடு இரவிலும் ஏளன புண்ணகையோடு முதலாளியின் மகன் சேறு மற்றும் சகதியில் முக்கப்பட்ட விலை உயர்ந்த சொகுசு காரின் சாவியை கொடுத்து நன்றாக சுத்தம் செய்ய சொல்லிச்சென்றான். உள்ளிருந்து வெளிப்பட வேண்டிய கோபமும், ரோசமும் அருகில் யாரும் தெரிந்தவர்கள் இல்லாததால் வெளிப்படவில்லை. சாமியின் மனக்கண்முன்னே தன் மகள்களின் வாழ்க்கை தெரிந்தது. ஊரில் அனைவரும் நிம்மதியாய் தூங்கிக்கொண்டிருக்கும் நேரம்.

தெருக்களில் சுற்றித் திரியும் சில பூனைகளின் முனங்கள் சத்தம்

கொடுத்த வேலையை செய்ய அந்த குளிரிலும் வாளியில் தண்ணீர் பிடித்து துடைப்பதற்க்கு ஆயத்தமானார்.தெருக்களில் சுற்றித் திரியும் சில பூனைகளின் முனங்கள் சத்தம் அந்த முழு இரவையும் ஆக்கிரமித்திருந்தன. வேடிக்கை பார்த்துக் கொண்டு வேலை செய்யக்கூட ஒரு சிறு நடமாட்டமும் அந்த தெருவில் இல்லை. அவரும் அதையே விரும்பினார் தனக்கு தெரிந்தவர்கள் தன் நிலையை இப்பொழுது பார்த்து விடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தார். இந்த நிலையை கண்டு தன்னுடைய மனமும் வானத்து நிலவும், நட்சதிரங்ககளும் எள்ளி நகையாடின.

எல்லாம் முடிந்தது தமிழனின் தொழில் சுத்தம் அந்த வண்டியின் பளபளப்பில் தெரிந்தது. கொடுத்த வேலையை செய்த பெருமிதத்துடன் படுக்கச்சென்றார் சாமி. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் முதல் நம்பிக்கையை தருவதே சூரியன் தான். காலையில் கண் விழிக்கையில் சூரியன் இருந்தால் நாமும் வாழ்கை ஓட்டதில் ஓடிக்கொண்டிருகிறோம் என நம்பிக்கை கொள்ளலாம். அப்படிப்பட்ட நம்பிக்கையை அழிக்கும் சூரியன் மறு நாள் காலை பொழுதில் உதித்தது. வழக்கம் போல் தொலைபேசியில் அழைப்பு மணி எழுப்ப வந்ததது sumai thaangi tamil story.

தன்னிடம் வேலை பார்க்கும் நபர் பற்றி எதுவும் அவர்களுக்கு தெரியாது, தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றே முதலாளிகளும் கருதுகிறார்கள். அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் சாமி என்ற பெயர், அவர்கள் கொடுக்கும் சம்பளம், சாமியின் செல்போன் நம்பர் மற்றபடி முதல் நாள் இரவு நிகழ்ந்தது கூட தெரியாது. செல்போனிலிருந்து நீண்ட முழு அழைப்பு எதிர் முனையில் சாமியிடமிருந்து பதில் இல்லை.

இரண்டாம் மூன்றாம் அழைப்பும் வந்தது பதில் இல்லை. அடுத்து 5 நிமிடம் கழித்து மீண்டும் அழைப்பு வந்தது பதட்டத்துடன் கண் விழித்தார் சாமி. மறுமுனையயிலிருந்து அவசரமாய் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி வர ஆனை பிறந்தது. விழித்தெளிந்த அவசரத்திலும் தூக்கம் தொலைத்த கோபத்திலும் தனக்கு பழக்கமான அந்த கடையின் பாதையில் கால்கள் நடக்கத் தொடங்கின. பெரிய வீடுகள் அல்ல மாளிகைகள் கொண்ட தெரு. சாமி வேலை செய்யும் வீட்டிலிருந்து 100 அடி தூரம் சென்று வலது கைபக்கம் திரும்பினால் புராதன சாலை அதை கடந்தால் மறுமுனையில் கடை.

அந்த சாலையை கடக்கும் ஒரு நிமிடத்தில் வந்தது அந்த வண்டி. எத்தனையோ மனிதர்கள் அந்த சாலையை கடந்து செல்லும் போது பாவம் சாமிக்கு மட்டும் ஏனோ இந்த நிலை.சாலையை கடக்கும் அடி எடுத்து வைக்கும் அந்த தருணத்தில் ரோந்து சுற்றிக்கொண்டிருந்த காவல்காரனின் வண்டி சாமி முன் நிறுத்தி குடியுருப்பு உரிமை அட்டையை காண்பிக்கச்சொன்னான். எந்த பாக்கேட்ல தேடியும் கிடைக்கவில்லை,இருந்தால் தானே கிடைப்பதற்கு.சாமியின் அறையில் வேரோரு பேன்ட் பாக்கெட்டில் அட்டை சுகமாய் தூங்கிக்கொண்டிருந்தது.

sumai thaangi tamil story

யாதொரு பாரபட்சமும் இன்றி கம்பிகளால் பின்னப்பட்ட நாலு சக்கர வண்டிச்சிறையினில் ஏற்றப்பட்டார்.அங்கேயே காவல்காரர்கள் அடுத்தடுத்து வந்தவர்களிடம் சோதனை செய்து அந்த வண்டியில் ஏற்றினர்.அந்த நொடி தன்னோடு பழகிக்கொண்டிருபவர்கள் பார்த்த பார்வை வெட்கி தலை குனிய வைத்தது.

பதட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் நடுக்கத்துடன் கால்சட்டை பாக்கெட்டுக்குள் துளாவினார் செல்லிடை பேசியில் தன் முதலாளியை கூப்பிடலாம் என நினைத்து.பாவம் அதுவும் அந்த அட்டைக்கு துணையாய் அங்கே உறங்கிகொண்டிருந்தது.வண்டியில் ஓட்டுனராய் இருந்த போது முன் இருக்கையில் அமர்ந்து சாமியை கண்னோடு கண் முட்டி கடந்து செல்லும் காட்சிகலெல்லாம் இப்போது பின் இருக்கையில் அமர்ந்திருக்கையில் நெருங்கி வராமல் தொலைவினிலேயே செல்கிறது.கூட இருந்தவர்கள் எல்லாம் தத்தமது முதலாளிகலுக்கு தகவல் சொல்லினர்.

சாமி என்ன செய்வார் யாரிடம் எப்படி தகவல் சொல்ல நான்கு சக்கர சிறை ஒரு பெரிய கட்டிடதின் இரண்டாவுது வாசலில் நிருத்தப்பட்டு அனைவரும் இறக்கிவிடப்பட்டனர்.அவர்களிடம் பெயர் முகவரி பதிவு செய்யப்பட்டது.இது போல் நகரின் பல இடங்களில் அனுமதி இன்றி சுற்றியவர்கள் அழைத்துவரப்பட்டனர்.சாமியின் கண்களில் நீர் துளிர்தது,நம்ம ஊர்ல கூட ஸ்டேசனுக்கு சிறைக்கு போனது இல்லையே என வருத்தப்பட்டார்.மிக பெரிய அறை முகப்பில் 10 உயரம் 5 அடி அகலத்திற்கு இரும்பு கதவு,அதில் 5 அடி உயரத்தில் சிரிய சதுர வடிவ இடைவெளி.அந்த பெரிய அறையின் 20 அடி உயரத்தில் சின்ன ஷன்னல்,வெளிச்சம் வருவதர்கு.தனிமையில் அமர்ந்த அந்த சிறையினுள் யார்யாரையோ கூப்பிடும் போது தன் பெயரை கூப்பிடுவது போல் தோன்றியது சாமிக்கு.

தவம் செய்தால் தானே கடவுளே காட்சி கொடுப்பார்,தகவல் சொன்னால் தான் முதலாளி வாருவார்.இதையும் அவர் மனதில் நினைத்துக்கொண்டார்.நேரம் சென்றது.சூரியன் உச்சி வானத்துக்கு சென்று கொண்டிருந்தது,பசியும் அதன் கோரத்தை காட்டிக்கொண்டிருந்தது.இறைவன் தன்னை நினைக்காதவரையும் அன்பால் அரவனைப்பார்.

எப்படியோ தகவல் தெரிந்து சாமியின் முதலாளி சாமியின் மாத சம்பளத்தில் பாதியை அபராதமாக கட்டிவிட்டு சிறைசாலைக்கு வந்து சாமியை மீட்டுச் சென்றார். மாலை நேரம் பசி மயக்கம் முதல் நாள் இரவு சாப்பிட்ட வேகாத சாப்பாடு ஞாபகம் வந்தது.பசி என்று ஒன்று இல்லையெனில் மனிதனின் வாழ்க்கையில் எத்தனையோ தவறுகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.சூரியன் மறைந்த அந்த நொடி அவரின் கண் முன் எப்பொழுதாவுது சாப்பிடும் சேட்டா கடை மாயயையாய் தெரிந்தது.வயிற்றில் பசி,கண்களில் தேக்கிய கண்ணீர்,பத்தடியில் கடை உள்ளே நுழைவதற்குள் கூட்டு பிராத்தனைக்காக கடைகள் மூடப்ப்பட்டது.

வாழ்கையின் கடைசி தருனமாக இது இருந்து விட கூடாதா?

இனிமேலும் இங்கு வாழத்தான் வேண்டுமா? நம் நாட்டில் என்ன தான் இல்லை அங்கேயே ஏதாவுது வேலை செய்து பிழைக்கலாம் என்ற கற்பனையும்.சாப்பிட்டியா என்று ஒரு வார்தை கேட்க கூட ஒரு நாதி இல்லை இந்த ஊரில்.என்ன வாழ்க்கை இது என்ற ஆதங்கமும் சாமியை வாட்டியது .கண்களில் தேக்கிய கண்ணீர் அருவியாய் கொட்டியது.

நல்ல வேலை அதை பார்பதற்கு கூட அங்கு ஆள் இல்லை.பிராத்தனை முடியவதற்கு 10 நிமிடதிற்கு முன் தொலைபேசி அழைப்பு வந்தது.இங்கு இவரை யார் அழைக்கப்போகிறார்கள் ? அவசரமாய் பசியோடு வண்டியை ஓட்டச்சென்றார்.அவருக்கு இருக்கும் பசிக்கு சட்டி சோரு கூட பத்தாது.முதலாளி அம்மா ஒரு உணவு விடுதிக்கு சென்றார் தன்னிடம் வேலை செய்பவனிடம் நீயும் சாப்பிட்டியா என்று கேட்ககூட மனமில்லை.இரவு வந்தது வேலை முடிந்தது.சமைக்க நேரமில்லை – sumai thaangi tamil story.

என்ன நாடுப்பா இது அப்பப்ப்பா போதும்டா

நேர சேட்டா கடைக்கு சென்றார்.அங்கு இருந்தவர்களிடம் தன் வேதனையை கொட்டி தீர்த்தார்.அவ்வளவு தானப்பா இன்னும் ரெண்டு மாசம் ஓட்டிட்டு இந்த பக்கமே வறக்கூடதப்பா. என்ன நாடுப்பா இது ரொம்ப கொடுமையா இருக்கு அப்பப்ப்பா போதும்டா சம்பாதுச்சது இவங்கிட்ட இப்படி அடிமையாய் நாய் மாதிரி வேலை பாக்கிரதுக்கு நம்ம ஊர்ல போய் ஏதாச்சும் தொழில் செஞ்சு கௌரவமா இருக்கலாம் என்று முனுமுனுத்தபடியே புரோட்டா உள்ளே சென்றது.

இவ்வளவு கஷ்டத்திலேயும் அவருக்கு ஒரு ஆறுதலான விசயம் சொந்த ஊரில் சாமியின் மகளுக்கு திருமணம் நிச்சியம் அடைந்து இரண்டு மாதம் இவரின் வருகைக்காக காத்திருந்தார்கள்.சாமியும் இரண்டு மாதம் கழித்து ஊருக்கு சென்று திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்தார்.அங்கு ஒரு குரல் என்னையா ராமசாமி வெளிநாடு போய் ஒரு மகளை கரைசேர்துட்ட,அப்பறம் எப்போ திரும்பி போகப் போர ரெண்டாவுது மகளுக்கு வரண் பார்கனும்ல.மீண்டும் ஒரு கனத்த இதயத்துடன் ஓர் காலை பொழுதில் விமானம் ஏறினார்.

 – ஹேமநாதன்

hemanathan

You may also like...