மதலை – சுவாரசியமான தமிழ் கதை
இருளுக்குள் செல்லும் பொழுதெல்லாம் அதை உணர்கிறேன். என் அறையின் கதவிடுக்குகளின் வழியே கனத்த திரவமாக வழிந்து உள் நுழையும் கருமை.வீட்டின் முன் இருக்கும் விளையில் மண்டிக்கிடக்கும் புதர்களுக்கிடையில் அரவம் போல சுருண்டு கிடக்கிறது. சுவர்க்கோழியின் அகவல், இருட்டுடன்முயங்கும் நொடியில் அடிப்பாதங்களில் ஊறல் போல அதை அறிகிறேன். தெள்ளத்...