திருமுருகாற்றுப்படை படிக்கச் சொன்ன காஞ்சி முனிவர்

சென்னை எண்ணூருக்கு சற்றுத் தொலைவில் உள்ளது காட்டுப்பள்ளி என்னும் சிறு கிராமம். கடலின் கழிமுகப் பகுதியில் உள்ளது. அந்தக் கிராமத்தை அடைய வேண்டும் என்றால் தரை மார்க்கமாக வழியில்லை. படகு வழியாக கடலில் ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணித்து அந்தத் தீவான கிராமத்தை அடைய வேண்டும். காஞ்சி மகான் ஒரு சமயம் அங்குதான் பரமாச்சார்யார் தனது பரிவாரத்தோடு முகாமிட்டிருந்தார். படகில் போய் அவரைப் பார்த்துவிட்டு வர பக்தர்கள் தவறவே இல்லை thirumugaatrupadai padikka sonna kaanji munivar.

அந்த சமயம் வானதி திருநாவுக்கரசின் தங்கை மீனாளுக்கு உடல் நலம் மன நலம் இரண்டுமே குன்றியிருந்தன. எதையும் சாப்பிடாமல் பிரமை பிடித்தவர் போல் எப்போதும் காட்சியளிப்பாள். எதற்கும் காஞ்சி மஹானைப் பரிபூர்ணமாக நம்பும் திருநாவுக்கரசு, தன் தங்கையை அழைத்துக் கொண்டு தாயார் மற்றும் குடும்பத்தாருடன் படகின் மூலமாக காட்டுப்பள்ளி கிராமத்துக்குச் சென்றார்.சென்றவுடன் மஹானின் தரிசனம் கிடைக்க தனது தங்கையின் உடல் நிலையைப் பற்றி அவரிடம் மெதுவாகச் சொன்னார் திருநாவுக்கரசு.

thirumugaatrupadai padikka sonna kaanji periyavaa

தீர்வு

எல்லாவற்றையும் கேட்ட பின் மஹான் தங்கை மீனாளைப் பார்த்தார். பிறகு அவரது பார்வை அவரது குடும்பத்தார் பக்கமும் திரும்பியது. மஹான் சிறிது நேரம் மெளனமாக இருந்து விட்டு பிறகு பேசினார்… “அவளைத் தினமும் ‘திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு. எல்லாம் சரியாகி விடும் என்றார்.

“அவளுக்கு அதிகம் படிக்கத் தெரியாதே” என்று மெதுவாக மஹானிடம் திருநாவுக்கரசு சொன்னார். அதனாலென்ன ? தெரிஞ்சவரை படிக்கச் சொல்லு… இல்லன்னா யாராவது தெரிஞ்சவா படிச்சுக் காட்டட்டுமே! திரு முருகாற்றுப்படை பாடல்கள் அவள் காதில் விழுந்தால் போதும்” என்று சொல்லி தன் கையை உயர்த்தி மீனாளுக்கு அருளாசி வழங்கினார்.

அவர்கள் எல்லாரும் வணங்கி மஹானிடம் விடை பெற்றுக் கொண்டு திரும்ப முயன்றார்கள். சற்று தூரம் வந்தவுடன் மடத்தின் ஆட்கள் அவர்களை அழைத்தார்கள். உங்கள் அத்தனை பேருக்கும் சாப்பாடு போட்டு உபசரித்து அனுப்பணும்னு பெரியவா உத்தரவு என்று சொன்ன போது திருநாவுக்கரசு வியந்து தான் போனார்.

மகான்களின் மகிமை

அந்த மாதிரி ஒரு தீவில் எதுவுமே சாப்பிடக் கிடைக்காது. இவர்களும் ஊர்ருக்குத் திரும்பி தான் சாப்பிட வேண்டும். இது அவருக்கு தெரியாதா என்ன? தன் பக்தர்களை எப்போது அவர் பட்டினியோடு அனுப்பியிருக்கிறார் மஹானின் கருணையை வியந்து வியந்து போற்றி விட்டு திருநாவுக்கரசு தன் குடும்பத்துடன் வடை பாயசத்துடன் விருந்து சாப்பிட்டு விட்டு ஊர் திரும்பினார்.

மஹான் சொன்னவாறே மீனாளிடம் திருமுருகாற்றுப்படை புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள். ஒரே மாதம் தான், மீனாள் பூரண குணமடைந்தாள். மனக் கோளாறு முழுமையாக விலகி இயல்பு நிலைக்கு அவள் வந்தது காஞ்சி மஹானின் பேரருள் தான் என்கிறார், பதிப்பக ஜாம்பவான் திருநாவுக்கரசு.

இவர் போன்ற பல மகான்களை தரிசிப்பதால் துன்பம் விலகுவதை பற்றி இந்த கட்டுரையில் வாசிக்கலாம் – மகான்களை தரிசிப்பதால்நமக்கு நன்மை கிடைக்குமா ?

You may also like...

1 Response

  1. Pavithra says:

    nice story…