மழலை புகைப்பட போட்டி 2018 முடிவுகள்

மழலைச் செல்வத்தின் அழகைப் பார்த்து பரிசளிக்க வேண்டும் என்றால், கலந்து கொண்ட அனைத்து மழலைகளுக்குமே பரிசளிக்க நேரிடும். அதனால் தான் வேறு சில நிபந்தனைகளை பொறுத்து பரிசளிக்கப்படும் என்று போட்டியை ஆரமித்தோம்.

பெரும்பாலானோர் சிறப்பான பங்களிப்பை தந்தனர். வாக்களித்த அனைவருக்கும், குழந்தைகளை தேர்வு செய்ய உதவிய நடுவர்களுக்கும் நன்றி.

கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கும்விதமாக ஒவ்வொரு குழந்தைக்கும் நீரோடை சிறப்பு பக்கத்தை உருவாக்க உள்ளது. தாங்கள் பகிரும் செய்தி மற்றும் குழந்தை புகைப்படம் சிறப்பு பக்கத்தில் வெளியிடப்படும். குழந்தையின் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும் வார்த்தை வடிவத்தில் பகிர்ந்தால் அதையும் வெளியிடுகிறோம்.

மேலும் தேர்வுசெய்த ஐந்து குழந்தைகளைத் தவிர மற்ற குழந்தைகளை பற்றிய வரிகளுக்கென சிறப்பு போட்டி அடுத்த மாதம் நடைபெற உள்ளது. குழந்தைகளுக்கென உருவாக்கப்படும் சிறப்பு பக்கத்தில் வெளியிடப்படும். சிறந்த வரிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

மீண்டும் வரிகளை அனுப்ப விரும்புவோர் info@neerodai.com க்கு அனுப்பவும்..

You may also like...