வனமகள் கவியின் கவி
வனமகளை வருணிக்கும் கவியின் கவி வரிகள் – vanamagal kavithai
கோடி கண்களிருந்தாலும்
காட்சிக்குள் அடங்காது
அடவியின் அழகு…
புவியை பாதுகாக்கும்
அரண் அழகு….
அண்டம் வியக்கும்
அழுவம் பேரழகு…
அறிந்திடா நற்பயன்கள்
அறலில் உண்டு….
அதையுணர்ந்து போற்றவேணும்
அரிலை நன்று….
ஆண்டுகள் பல கடந்த
பசுமையான ஆரணி…
அதையழிக்க முற்படும்
செயற்கை காரணி….
இயவின் இயல்பை
இழக்காது… இறும்பை
போற்ற நாளும் இயம்பு…
கால்(ஆ)கிய கானகம்
காலாவதியாகாது காக்கணும்…..
தொடரும் வன பயணம்…
– கவி தேவிகா, தென்காசி.
இயற்கையின் இன்றியமையாமையை இதற்கு மேல் எடுத்து கூறிட முடியாது வாழ்த்துக்கள் கவி…!
வனமகள் கவியின் கவிதையில் வந்த “காலாவதியாகாது கானகம் காப்போம்” என்ற வரிகள் அருமை. கவி தேவிகா அவர்களுக்கு பாராட்டுக்கள்.
கவிதை நன்றாக இருக்கிறது
கோடி கண்கள் இருந்தாலும் போதாது அடவியின் அழகை கண்டு ரசிக்க. வனமகள் மேலும் அழகுறுகிறாள் கவி தேவிகா அவர்களின் கவின்மிகு கவிதையால்.பாராட்டுகள் சகோதரி!
கவிதை மிக அற்புதம் கவிஞரே ! வாழ்த்துக்கள்……….
வனமகளை இந்த மண்மகள் தனக்கே உரித்தான கவிநடையில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்..
அழகு இன்னும் அழகாகிறது..
இவரின் கவி வரிகளால்.!!
அருமை, இயற்கையை போற்றும் நேரத்தில், ஆயிரம் கண் கொண்டு கானும் நேரத்தில் மனித தவறுகளால் கானகம் படும் இன்னல்களையும் சிறப்பாக எடுத்துக்காட்டிய நிறைவான கவிதை.
நேரில் ரசித்ததாய் ஒரு உணர்வு. வாழ்த்துக்கள் சகோதரி..
வனமகளைப் பற்றி மிக அழகாக எடுத்து உரைத்த கவி தேவிகா அவர்களுக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள்!!
வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி.