ரவா லட்டு செய்முறை
ரவா லட்டு rava laddu preparation
தேவையானவை :
வெள்ளை ரவை: 1 கிலோ,
அஸ்கா சர்க்கரை: 1 கிலோ,
முந்திரி: 50 கிராம்,
திராட்சை: 100 கிராம்,
ஏலக்காய் இருபது,
நெய்: 250 கிராம்,
பால்: 250 மில்லி காய்ச்சியது.
செய்முறை :
முந்திரியை வெறும் வானலியில் லேசாக வருத்து எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
ரவையை வெறும் வானலியில் போட்டு லேசாக நிறம் மாறும்வரை வறுத்தெடுத்து அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக அறைத்துக் கொள்ளவேண்டும்.
மிதமாக காய வைத்த நெய்யில் முந்திரி மற்றும் திராட்சையை நன்றாக பொறித்து அதை அப்படியே அறைத்த ரவை மற்றும் சர்க்கரையில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். வறுத்து வைத்த ஏலக்காயை நுனுக்கி கொதிக்க பாலுடன் சேர்த்து கலக்க வேண்டும். மிதமான பதம் வந்தவுடன் இறக்கி வைத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து உருண்டை பிடிக்கலாம் அல்லது அப்படியே பரிமாறலாம். உருண்டை பிடிக்கும் போது கைகளில் நெய் தேய்த்து பிடித்தால் வடிவமாகவும் பளபளப்பாகவும் கிடைக்கும்.