உணவே மருந்து – முத்தான முருங்கை
ஒரே கீரை சத்துகள் ஏராளம்
முருங்கை – தளை முதல் வேர் வரை எல்லாப்பொருட்களும் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது.மற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை சுத்தப்படுத்திய பிறகே சமைக்க வேண்டும். ஆனால், முருங்கைக்கீரை மரத்தில் வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை health benefits of drumstick in tamil.
ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமைக்கலாம்.அதிலும் குறிப்பாக கொழுந்து தளையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
தினமும் எடுத்துக்கொண்டால் சத்து குறைபாடுகளில் இருந்து தப்பிக்கலாம்.அல்லது வாரம் மூன்று முறை எடுத்துக்கொள்ளலாம்.
பெண்கள் – 100 கிராம்
ஆண்கள் – 40 கிராம்
10 வயதுக்கு மேலான குழந்தைகள் – 50 கிராம்
மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத 8 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இறைச்சியில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.
ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு எகிறும்.
குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுவதுண்டு. முருங்கைப்பூவை பொடிமாஸ் மாதிரி செய்து சாப்பிடலாம்.
அரைவேக்காடு வேக வைத்த பாசிப்பருப்புடன், முருங்கைப்பூவையும் பொடியாக நறுக்கிய வெங்காயமும் சேர்த்து சமைத்து சாப்பிடுவது குழந்தையின்மைப் பிரச்னை தீர உதவும். கர்ப்பப்பைகோளாறுகளை சரி செய்யும்.
முருங்கை முன்னூறு நோய்களை விரட்டும்
ஒரே ஒரு கைப்பிடி பருப்பு சேர்த்து வைக்கிற தண்ணி சாம்பாரில், கொதிக்கும் போது நான்கைந்து கொத்து முருங்கைக்கீரையை அப்படியே கொத்தாகச் சேர்த்து ஒரு கொதி விடவும். பிறகு அந்தக் கொத்தை அப்படியே எடுத்து சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, நுரையீரலில் கட்டிக் கொண்ட கபத்தை வெளியேற்றும். அடிக்கடி சளி, இருமல், அலர்ஜியால் அவதிப் படுவோருக்கும் இது அருமையான மருந்து.
முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் சியும், வாழைப்பழத்தில் உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில் உள்ளதைப் போல 4 மடங்கு அதிக வைட்டமின் ஏ -வும், பாலில் உள்ளதைவிட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம்.
மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் மாபெரும் மகத்துவம்.
முருங்கை முன்னூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. அதனால் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் மட்டும் இன்றி அனைவரும் முருங்கையை பல்வேறு விதத்தில் பயன்படுத்தி நோய் இன்றி வாழவேண்டும்.