ஆஞ்சநேய சுவாமிக்கு சரீரம் முழுவதும் வெண்ணெய் அலங்காரம்
வெண்ணெய் அலங்காரம் anjaneyar vennai alangaaram
ராமபிரானுக்கும் ராவணனுக்கும் வெகு விமர்சையாக போர் நடந்துகொண்டிருந்த நேரம். ஆஞ்சநேய சுவாமி தோளில் ஒரு புறம் ராமபிரானையும் மறுபுறம் இலட்சுமணனையும் தூக்கி சென்ற பொழுது, ராவணன் எய்த அம்புகளை தானே தன் சரீரத்தில் வாங்கிக்கொண்டு இருவரையும் காத்தார்.
பின்பு காயங்களை கண்ட ராமபிரான் தானே தன் கைகளால் ஆஞ்சநேயசுவாமி காயங்களுக்கு, பசு வெண்ணை கொண்டு மருந்திட்டார். இதனாலே கோவில்களில் ஆஞ்சநேயசுவாமிக்கு வெண்ணையால் ராஜ அலங்காரம் செய்யப்படுகிறது.
வெண்ணையால் ராஜ கிரீடம், வீரவாள் என காலனி வரை ராஜாவாக ஜொலிப்பார்.
தான் செய்த பாவங்களும், துக்கங்களும், இன்னல்களும் வெண்ணையைப்போல உருக வேண்டும் என எண்ணி பக்தர்கள் பிராத்தனை செய்து அருள் பெறுவர்.
ஜெய் ஸ்ரீ ராம் ! ஜெய் சீதாராம்!.
ஆஞ்சநேய சுவாமிக்கு சரீரம் முழுவதும் வெண்ணெய் அலங்காரம்
அனுமனின் திருமணக்கோலம்
கல்வி, இசை, கலை, வேதங்கள் என அனைத்தையும் அனுமனுக்குக் கற்றுத்தந்தார் சூரியன். அனைத்தையும் கற்றுணர்ந்த அனுமன் “நவவியாகரண பண்டிதன்’ என்ற பட்டமும் பெற விரும்பினான். ஆனால், ஒரு குறிப்பிட்ட வியாகரணத்தைக் கற்கவேண்டுமானால் குடும்பஸ்தனாக இருக்கவேண்டும் என்பது நியதி. ஆகவே, அனுமன் மணம் புரியவேண்டும்.
சூரியதேவன், நவவியா கரணத்தை முழுவதும் கற்றுக் கொடுக்க விரும்பினார். அதற்காக தன் மகள் சுவர்ச்சலாதேவியை தன் மாணவனுக்குத் திருமணம் முடித்துவைத்தார் என்கிறது சூரியபுராணம்.
பிரம்மச்சாரி என்று பெரும்பாலோர் போற்றும் அனுமனின் திருமணக்கோலத்தை, சென்னை- செங்கல்பட்டு சாலையில், தைலாவரம் என்னும் திருத்தலத்திலுள்ள ஸ்ரீகல்யாண ஆஞ்சனேயர் கோவிலில் தரிசிக்கலாம். இங்கு மூலவராக சுமார் எட்டடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீஜெயவீர ஆஞ்சனேயர் எழுந்தருளியுள்ளார். இதே கோவிலில் தனிச்சந்நிதியில் உற்சவராக சுவர்ச்சலாதேவி யுடன் பத்மபீடத்தில் தரிசனம் தருகிறார் ஸ்ரீகல்யாண ஆஞ்சனேயர்.
நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம் ஏந்திய திருக்கோலத்தில், சுவர்ச்சலா சமேத சதுர்புஜ சுபமங்களவரத ஆஞ்சனேயர் என்ற திருநாமத்தில் பக்தர்கள் வேண்டுவதை அளித்து மகிழ்விக்கிறார். காணக்கிடைக்காத அரிய ஸ்ரீகல்யாண அஞ்சனேயர்.
Arumai pathivirku romba nanri…..Sri ramajayam