நீரோடை கடந்து வந்த பாதை 2018

வார ராசி பலன்கள்

இந்த விளம்பி வருட ஆனி மாதம்  (ஜூன்) முதல் வாரம் ஒரு முறை ஆதி நாளான ஞாயிறு அன்று வெளியிட்டு வருகிறோம். மற்ற ஜோதிடர்களின் பாராட்டையும் பெற்றுத் தந்தது. ராசி பலன் கணித்து வழங்கும் எமது தந்தை முத்துசாமி அவர்களுக்கு நன்றி kadanthu vantha paathai 2018. தொகுப்புகளை வாசிக்க

குழந்தைகள் புகைப்படப் போட்டி 2018

புன்னகையில் கடவுளின் தரிசனம் தரும் மழலைகளின் புகைப்படப்போட்டி நடந்து அதில் அதிக வாக்குகள், குழந்தை பற்றிய வரிகள், புகைப்பட நேர்த்தி, விவசாய பின்னணி என ஒவ்வொரு பரிசை ஒவ்வொரு விதமாக தேர்ந்தெடுத்து ஐந்து பேருக்கு தலா ஆயிரம் மதிப்புள்ள பரிசுகளை வழங்கியது பெருமகிழ்ச்சி.

neerodai kadanthu vantha paathai 2018

வாசகர் கருத்து திறன் போட்டி 2018

வாசகர் கருத்து திறன் போட்டி மற்றும் அதில் வென்ற வாசகர் பெயர் வெளியிட விரும்பாதது பெருந்தன்மை. ஒவ்வொரு பதிவிற்கும் கருத்துக்களை மறவாமல் பதிந்த வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றி.  

குருபெயர்ச்சி பலன்கள்

விளம்பி வருடத்திற்கான குருபெயர்ச்சி பலன்கள் வெளியிட்டு பத்தாயிரம் வாசகர்களுக்கு மேல் வாசித்தது மிக்க மகிழ்ச்சி. குருபெயர்ச்சி பலன்கள் ஒரு படி முன்னேற்றம் என்றே குறிப்பிடலாம். 

சமூக வலைதளப்பகிர்வு

தினம் ஒரு குறள், விளக்கம் பகிரத்தொடங்கி பாராட்டுகளை சேர்த்து. டிவிட்டர் மற்றும் வாட்டசாப்பில் தினம் ஒரு குரல், விளக்கமும், பேஸ்புக்கில் அதிகாரமாகவும் (10 குறள்களின் தொகுப்பாக) பகிர்ந்து வருவது சிறப்பு.

சிறப்பு கட்டுரைகள்

நமது பாரம்பரிய பண்டிகைகளை மற்றும் அதன் வரலாற்று பின்னணி தொகுப்பில் கட்டுரைகள் வெளியிட்டு இறைத்தொண்டு ஆற்றியது. குறிப்பாக ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, கந்த சஷ்டி சிறப்ப, தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம், நவராத்திரி விஜயதசமி சிறப்பும் ஒற்றுமையும், காஞ்சி மஹா பெரியவா அருளுரை மேலும் பல  தொகுப்புகள் வெளியிட்டது இறைவன் அருள் பெற்றது பிராப்தமே.

எழுத்தாளர்கள்

நீரோடைக்கு மேலும் வலு சேர்க்க புதிய எழுத்தாளர்களை  அறிமுகம் செய்த நண்பர்களுக்கு நன்றி. சிலர் தானாக முன்வந்து எழுதத்தொடங்கியது மேருமகிழ்ச்சி. குறிப்பாக பதிவுகளை வழங்கி வரும் எழுத்தாளர்களுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது.
வெங்கடாச்சலம் ஐய்யா (எமது பள்ளி ஆசான்), சியாம் பிரசாத், தந்தை முத்துசாமி, நந்தகுமார், ஹேமநாதன், ஸ்ரீராம் பழனிசாமி, வாவி ஸ்ரீநிவாசன், சரவனப்பிரகாஷ் (மேலும் பலர்)  இவர்களுடன் உங்கள் நீரோடை மகேஷ். 

மேலும் பல 

மார்கழி கோலப்போட்டி வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நீரோடையுடன் பிறந்தநாள் தலைப்பில் ஒவ்வொரு மாதமும் அன்பர்களின் பிறந்தநாளை நட்சத்திரப்படி கொண்டாட ஊக்கம் தந்து மின்னஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் ஒவ்வொருவருக்கும் வாழ்த்து கூற மட்டும் சிறப்பு பக்கம் உருவாக்கியது.

You may also like...

1 Response

  1. Sucindran says:

    Congrats team neerodai