2020 வல்லரசு

புது காற்றுவந்து சில்லிட
வாகனத்தை இயக்கினேன்…
வீதியில் இறங்கினேன்..
குப்பையில்லா பாதை
குருவிகள் இசைபட
வைத்த செடிகள் வனமாக கண்டேன் – 2020 vallarasu kavithai

விளைநிலமெங்கும் விவசாயிகள் இசைபட
இதில் இன்பமே குடியேற கண்டேன்..
வயலை கடந்து சாலைகள் சீராக
மக்கள் போக்குவரத்தில் நேராக கண்டேன்..
இளைஞர்கள் தொழில் உயர
தன் பண்டம் கரமேற கண்டேன்..
பெண்மையும் உயிராக
அவளே நலமாக கண்டேன்..

வந்தவர் பிணிபோக
மருந்துகள் உருவாக
விலையில்லா மருத்துவம்
அனைவர்க்கும் பொதுவாக கண்டேன்..
ஏற்றத்தாழ்வு இல்லா
சமூகம் உருவாக
பெற்றோர்கள் குணமாக
பிள்ளைகள் வளர்ந்தோட கண்டேன்.. – 2020 vallarasu kavithai

பிஞ்சுகள் நஞ்சாக
பாடமே உருவாக
கல்வி விலைபோக
பள்ளிகள் உயர்வாக கண்டேன்..
பிரிவினைகள் அரங்கேறா
நல்லவர்கள் ஆட்சி மட்டும்
நாடெங்கும் மலர கண்டேன்..
காதலில் கலந்து
பந்தங்கள் உருவாக
சாதிகள் அழிந்தோடி
சாந்தமே நிலைக்க கண்டேன்..

கரமொன்று நீண்டு என்னை
உலுக்கிட கண்டேன்..
வருசப்போறப்பு நாளதுமா
தூக்கமாட இன்னும்
குரலொன்று எழுப்பிட கண்டேன்
அன்று அம்மா
இடையில் மனைவி
இன்று என் மகள்
ஓடிப்போய் வீதியை பார்த்தேன்
குப்பைகள் சூழ்ந்த குப்பைத்தொட்டி
சாலையில் ஓடும் சாக்கடை தண்ணி
இன்றும் அதே குரல் மழலைமொழியில்
இப்படி தூங்கி கனவு கண்டால்
நாடு எப்படி வல்லரசாகும்… 2020 நாடு…..?
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

– அந்தியூரான் (ஸ்ரீராம் பழனிசாமி)


You may also like...