சீறி நடப்போமா கவிதை
உழவன் உழத்தி பெருமைகளை உணர்த்தும் மணிகண்டனின் வரிகள் இதோ – uzhavan kavithai
என்பதை தொட்டுச் செல்லும் வயது தான்…
சுட்டெரிக்கும் வெயிலில்
பற்றி எரிகின்ற பொடியினில்…
அனல் பறந்தாலும் மிரண்டு போகாத எருதுகளும்,
துவண்டு போகாத கிழவரின் ஏறினை
பின்தொடர்ந்தே பவ்வியமாய் பாத்தியில் பருப்பை விதைத்துச் செல்கிறாள் கிழவி…
பல மைல்கள் நடந்து களைத்தாலும் அடுத்த கணமே பம்பரமாய் எழுந்து நடந்தது இந்த சுருக்கு விழுந்த முகங்களே…
மரணிக்கும் தருணத்தை கூட மாற்றியமைத்து மறுவாழ்வு கொடுத்தும் பழைய வைத்தியங்களே…
இந்த தேகங்கள் எல்லாம் பழசு தான் ஆனால் தெம்புகள் யாவும் அந்த வெயிலை விட மேலானவையே…
தடுக்கி விழுந்ததற்க்கே தட்டுத் தடுமாறி எழுந்து தண்ணீர் கேட்கிறது இந்த தலைமுறை…
மருத்துவத்தையும் விஞ்ஞானத்தையும் விலை கொடுத்து வாங்குகிறோமல்லவா இனி அப்படித் தான் இருப்போம்…!
வருத்தங்களோடு …..
– மணிகண்டன் சுப்பிரமணியம்
உழவன் உழத்தி பெருமைகளை மிக அழகாக எடுத்துக் கூறி இருக்கும் விதம் பாராட்டத்தக்கது.
கவிதை நன்றாக இருக்கிறது.
மணிகண்டன் அவர்களின் சீறி பாய்வோம் கவிதை அருமை். விவசாயம் நலிந்து வரும் இந்நாளில் இந்த கவிதை படித்தும் மீண்டும் உயிர்த்தெழும் என்ற நம்பிக்கை கொடுத்த வரிகள் அருமை
மணிகண்டன் சுப்பிரமணியனின் சீறி நடப்போமா கவிதை அருமை. சுருங்கிய தோல்கள் பின்னே, சுணங்காத மனமும்,சோர்வடையாத உழைப்பும், இந்தத் தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். அருமை நண்பரே!
வாழ்த்துகள் கவி பெருந்தகைக்கு. மிக அருமை