இராப் பொழுது – கவிதை
நீரோடையின் இளம் கவிஞர் மணிகண்டன் அவர்களின் கவிதைகளின் தொகுப்பு – iraappozhuthu kavithaigal
கண் சொக்கியதும் கட்டிலை தேடும் பல கண்களை யாம் அறிவோம்…!
ஆனால் இன்றோ இமைக்காத சில கண்களின் கதைகளையும்
கொஞ்சம் கதைப்போமே…!
இழுத்துப் போர்த்திக்கொள்ள எனக்கும் ஆசையே ஆனால்
அளவு இவ்வளவு தான் என ஏக்கத்தோடு பார்க்கும் நடைபயண படுக்கையாளன்…!
நிழல்வுலக மனநோயாளிகளுக்கு மத்தியில் எந்தவொரு போட்டி
பொறாமையும் இல்லாமல் மனம் போன போக்கில் நடந்துகொண்டிருக்கும்
மனநோயாளியாக்கப்பட்டவர்…!
ஊர் பெயரை உரக்க உச்சரித்து உள்ளிழுக்கும்
உத்தியோடு நடத்துனர் அண்ணா…!
பசிக்காத வயிற்றைக் கூட பரபரக்க வைத்துவிடும்
பாசக்கார பஜ்ஜிக்கடைக்காரர்…! – iraappozhuthu kavithaigal
விடியற் பொழுதை விரும்பாத இளசுகள் பந்தயத்திற்க்கு
தயாராகிக் கொண்டிருக்கும் பதைபதைக்கும் நிமிடங்கள்…!
கடைசி இரு முழங்களை விற்று விட்டு வீடு செல்ல
காத்திருக்கும் பூக்கடைக்காரக்கா…! – pothu kavithaigal
வேலை முடிந்தும் மனைவி தூங்கட்டும் என வீடு
செல்ல மனமில்லாத சில கணவன்மார்கள்…!
மணி அடித்ததும் ஏதோ ஓர் மூலையில் ஓர் உயிருக்கு ஆபத்து என்பதை
உணர்ந்து அரக்கபறக்க தயாராகும் ஆம்புலன்சு அண்ணா…!
கடைசி நொடியிலாவது ஏதாவது சவாரி கிடைத்திடாதா
என்ற தேடலோடு ஆட்டோகாரன்னா…!
இளையராஜாவின் இசையோடு பாரம் ஏற்றிக்கொண்டு
பாதி தூக்கத்தோடு பறக்கும் நெடுஞ்சாலை ஓட்டுனர்கள்…!
பனியிலும் பணி செய்யும் பல காவலாளி தாத்தாக்கள்…!
என்ன இரவு இது என அங்கலாய்த்த போதெல்லாம் இதை
அனுபவித்து ஆராய வாய்ப்பு கிடைக்கவில்லை…
ஆனால் இன்று விளங்குகிறது இது இரவல்ல கனவை தொலைத்து
கண்ணீரோடு கரையேற நினைக்கும் பல கண்களின் கலங்கிய நினைவென்று…
மீண்டும் பயணிப்போம் ஓர் இரவோடு ……
– மணிகண்டன் சுப்பிரமணியம், கோபிசெட்டிபாளையம்
கவிதை மிகவும் யதார்த்த மாக இருக்கிறது பழைய நாட்கள் எப்போது திரும்பும் என ஏங்க வைக்கிறது.
அருமையான கவிதை வரிகள்
தூங்கப் போகும் போது.தூங்கா இரவு காட்சிகளை வகைப்படுத்தி தூக்கம் தொலைய வைத்துவிட்டீர் கவிஞரே! மதுரையின் .தூங்கா இரவுக்கடைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்…நன்று ..வாழ்த்துகள்
அருமை. வாழ்த்துகள்
அருமையான வரிகள்….
நல்ல யதார்த்தமான வரிகள்.பாராட்டுக்கள். கவிஞர் அவர்களுக்கு மீண்டும் பாராட்டுக்கள்.
வாழ்த்து கூறிய அனைத்து கவிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்
இராப்பொழது கவிதை
நன்றாக உள்ளது