என் மின்மினி (கதை பாகம் – 21)
சென்ற வாரம் – கண்களின் ஓரங்களில் அவளையும் (ஏஞ்சலின்) அறியாமல் கண்ணீர் வழிந்து அவனது விரல்களில் விழுந்தது… – en minmini thodar kadhai-21.
அவனது விரல்களில் விழுந்த கண்ணீரை துடைப்பது போலே வந்து அவனது கைகளை இறுக்கமாகப்பற்றி கொண்டாள்
ஏஞ்சலின்…
ஹே என்ன ஆச்சு???கண்ணீர் மூலமாக உன்னோட உணர்ச்சிகள் எல்லாம் ததும்பி வழியுதோ.இப்படியே போனால் இங்க
வெச்சே என்ன கட்டிப்பிடிச்சுக்குவே போலே என்று கிண்டல் அடித்தான் பிரஜின்.
ம்ம் அப்படியெல்லாம் இல்லை என்றவாறே பிடித்திருந்த அவனது கையினை லாவகமாக விலக்கினாள் ஏஞ்சலின்.
ஓய் என்ன கைய விட்டுட்டே.இன்னும் கொஞ்சம் நேரம் பிடிச்சே வெச்சுருக்கலாம் இல்லையா. நான் வேற சும்மா இருக்காம கிண்டல் பண்ணிட்டேன்.இல்லைனா இன்னும் கொஞ்சம் நேரம் என் கை உன்னோட பூபோன்ற கையில் புகுந்து கொண்டவாறே தூங்கியிருக்கும் என்றான் பிரஜின்.
அடடா ஆசைதான் உனக்கு.அதெல்லாம் முடியாது.நான் சோகத்தில இருந்தேன்.அப்போது நீ பேசின ஆறுதலான வார்த்தைகள் உன்னோட கையினை பிடிக்க வைத்தன.ஆனால் என்னை பற்றியும் என்னோட குடும்பப்பின்னணி பற்றியும் நீ தெரிந்து கொண்டு அப்பறமா என் கையினை விடாம பிடிச்சுக்கோ. யாரு வேணானு சொல்ல போறாங்க என்றபடி சிரித்தாள் ஏஞ்சலின்.
ஒண்ணு சொல்லட்டா.உன் வாழ்க்கையில் எவ்வளவு சோகம் துன்பங்கள் வந்தாலும் அதை இப்படி புன்னகைத்தவாறே எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்.அதை விட்டுட்டு சோகமா கவலையா இருக்குறது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.எனக்காக நீ சிரிச்சுகிட்டே இருப்பீயா.உன் அழகான சிரிப்புக்காகத்தான் நான் உன் கூடவே இருக்க ஆசைப்படுகிறேன்.ப்ளீஸ் என்றான் பிரஜின்.
ம்ம்ம் ஓகே ஆனால் எனக்கு அப்பா அம்மா நினைவு வந்து அவர்கள் பிரிவை தாங்காமல் அழுகை வந்தால் நான் என்ன பண்ணுவேன்,எனக்கு அழதான் தோன்றும் என்றாள் ஏஞ்சலின்.
ஏன் நான் இல்லையா உனக்கு., என்னை நினைத்துக்கொள் என்றவாறே காதல் கனிரசத்தை அவள் காதுகள் வழியே அவள் நெஞ்சுக்குள் ஊற்றினான் பிரஜின்.
அமைதியாக அவனையே பார்த்து கொண்டிருந்தவள் கடைசி வரை நான் என்ன சொல்ல வந்தேனோ அதை சொல்லவிடவே இல்லை.அப்புறம் எப்படி என்னை பற்றி உனக்கு தெரியும் என்றாள் ஏஞ்சலின்.
ஓ….நீ இவ்வளவு சொன்ன பிறகும் நான் உன்னைப்பற்றி கேட்கல அப்படினா நான் ஒரு மனுசனே இல்லை.,அதனால இப்போ நீ சொல்லு நான் கேட்குறேன் என்றான் பிரஜின் – en minmini thodar kadhai-21.
பி ரஜினிக்கு என்ன பதில் வரப்போகிறது ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
கதை மிகவும் சஸ்பென்ஸ் ஆக உள்ளது
கதை அழகாக நகர்கிறது…வாழ்த்துகள்
அருமையான எழுத்து நடை!