சத்தான சிற்றுண்டிகள்

சிறுகதை, சமையல் குறிப்புகவிதை மேலும் தற்பொழுது நீரோடைக்காக புத்தக விமர்சனம் என பன்முகம் கொண்ட எழுத்தாளர் தி.வள்ளி அவர்கள் எழுதிய சமையல் செய்முறை – masala pori thayir semiya

masala pori thayir semiya

வெஜிடபிள் மசாலா பொரி

தேவையானவை

 1. பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளை ,குடைமிளகாய் – 1 கப்
 2. நறுக்கிய பெல்லாரி – 1
 3. நறுக்கிய தக்காளி – 1
 4. அரிசி பொரி 2 கப் (100 கி)
 5. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்,
 6. கரம் மசாலா அரை ஸ்பூன்,
 7. மிளகாய்வற்றல் பொடி கால் ஸ்பூன்
 8. பொடி உப்பு(சால்ட்) தேவைக்கேற்ப
 9. தக்காளி சாஸ் 2 ஸ்பூன்
 10. எலுமிச்சை சாறு அரை ஸ்பூன்..
 11. நறுக்கிய மல்லி தழை சிறிது.

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு, நறுக்கிய காய் மற்றும் வெங்காயத்தை வதக்கவும், சற்று வதங்கியதும், தக்காளியை சேர்க்கவும்… தக்காளி வதங்கியதும்… அத்துடன் பொடிகள் மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்…

பொரியை தண்ணீர் விட்டு அலசி கொள்ளவும்.ஊற விட வேண்டாம். அலசிய பொரியை வதக்கிய மசாலில் போட்டு கிளறி விடவும்.பின் தக்காளி சாஸ் சேர்க்கவும்… ஐந்து நிமிடம் பச்சை வாசனை போன பிறகு, எலுமிச்சைச் சாறு, மல்லித்தழை போட்டு கிளறி இறக்கவும். விருப்பப்பட்டால் வறுத்த வேர்க்கடலையும்( தோல் நீக்கி) வதக்கும்போது சேர்க்கலாம். சுவை கூடும் – masala pori thayir semiya.

இதே முறையில் அவல் கொண்டும் இதை சிற்றுண்டியை செய்யலாம். குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி உண்பர் மேலும் சிறந்த சத்துணவு. பொரி என்பதால் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.


தயிர் சேமியா

தேவையானவை

 1. சேமியா ஒரு கப்
 2. தயிர் அரை கப்
 3. பால் கால் கப்
 4. மாதுளை முத்துக்கள் நாலு ஸ்பூன்
 5. கருப்பு திராட்சை 10
 6. மல்லி தழை நறுக்கியது சிறிது .

தாளிக்க

கடுகு, உளுத்தம் பருப்பு கால் ஸ்பூன்…
நறுக்கிய பச்சை மிளகாய் 1…
இஞ்சி ஒரு சிறுதுண்டு துருவியது… .

செய்முறை

சேமியாவை கொதிக்கும் தண்ணீரில் போட்டு, கால் ஸ்பூன் உப்பு சேர்த்து வேக விடவும். சேமியா வெந்ததும், வடிகட்டியில் போட்டு தண்ணீரை வடிய விடவும். பிறகு ஆறியதும், உப்பு, பால், தயிர்,மாதுளை முத்துக்கள், திராட்சை, மல்லித் தழை சேர்த்து கிளறவும், பின் தாளித்ததை சேர்த்து நன்றாக கிளறி விடவும். மல்லித் தழையும், துருவிய கேரட்டையும் மேலே தூவி அலங்கரிக்கவும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சற்று குளிர்ச்சியாகவும் பரிமாறலாம்.

– தி.வள்ளி, திருநெல்வேலி.

You may also like...

3 Responses

 1. R. Brinda says:

  அருமையான, ருசியான உணவு!

 2. Rajakumari says:

  குழந்தைகள் மட்டுமல்ல பெரியோர்கள் கூட மிகவும் விரும்பும் சத்தான சுவையான உணவு இரண்டுமே

 3. Kavi devika says:

  அருமை, எளிமை… வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *