மாடப்புறா (அடுக்குமாடி)
தருமபுரியை சேர்ந்த கவிஞர் பொய்யாமொழி அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – adukumadi madapura kavithai.
பறக்க எத்தனித்து
குனுகிக் கொண்டிருந்தது..
சிறகுகள் முழுக்க
ஊசி பொத்தல்கள்
நெருங்கினால்
மது புகை இன்னபிற
வண்ண பொடிகள்
காகிதம் ஒட்டப்பட்ட
சிறு சிமிழ்களில்
புறாவின் கண்கள்
சிவந்து ஒருவித
மிரட்சியில் தொய்விழந்து
இமை மூடியும் மூடாமலும்
படபடத்தது
கட்டுக்கோப்பிழந்த
புறாவின் மூளை
தன் சிறகுளில் உள்ள
விரலிறகை கொண்டு
சிதறிய பொடிகளை
துழாவியது
நிலையுணராமல்
தடுமாறியதை
இருகைகளில் ஏந்தி
போதை தடுப்பு
மருத்துவமனையில் சேர்பித்து
புறாக்களின் கூடுகளை
எண்ணி வருந்தினேன்..
ஆம் அவைகள்
மாடப்புறாக்கள்தான்..
பணத்தை பிரதானபடுத்தும்
அவல அடுக்குமாடிகளால்
சுயம் இழந்த மாடப்புறாவாக
வாழும் மனிதர்கள்..
– பொன்.பொய்யாமொழி, பாப்பாரப்பட்டி, தருமபுரி
மாடப் புறா கவிதை நன்றாக இருக்கிறது
நல்ல சிந்னை. கவிஞருக்கு பாராட்டுகள்
மாடமிழந்த புறாக்கள்….. நம்மைப்போல…
அழகு ஒப்பீடல் சொல்லாடல் வாழ்த்துகள்….மேலும் தங்கள் தமிழ் கவி சிறக்க….
சுயமிழந்த மாடப்புறாவாக வாழும் அவலத்தை அழகுற எடுத்துரைக்கிறார் கவி. பொய்யாமொழி அவர்கள்.மனவலியை ஏற்படுத்தும் வரிகள்.வாழ்த்துகள் கவிஞரே!
“பணத்தை பிரதானபடுத்தும்
அவல அடுக்குமாடிகளால்
சுயம் இழந்த மாடப்புறாவாக
வாழும் மனிதர்கள்” சொல்லாடல் அருமை
மாடப்புறாவையும் மனிதனையும் ஒப்பிட்டு
எழுதப்பட்டுள்ள கவிதை நன்று .. வாழ்த்துகள்
மாடத்தில் வாழ்கிற புறாக்களும்
பலவீனத்தின் மடியில் மண்டியிட்டு கிடக்கிறது
ஏதோ ஒரு வகையில் எங்கோ ஒரு மூலையில் சோரம் போய் சோர்ந்து கிடக்கிறது
புத்துணர்வோடு புவியை சுற்றி வரவேண்டிய புறாக்கள்
போதைகளின் மடி புகுந்து வேதனைகளில் விழுந்து கிடக்கிறது
மாடத்தில் வாழ்கிற புறாக்களும் ஒரு வகையில் மண்டியிட்டு தான் கிடக்கிறது
புத்துணர்வோடு புவியில் பறந்து திரிய வேண்டிய புறாக்கள்
போதையின் பிடியில் சிக்கித் தவித்து
பொலிவிழந்து
வேதனையில் வீழ்கிறது
தங்கள் விமர்சனங்களை பதிந்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
“மாடப்புறா” மனிதம் இழந்த மனிதனின் துயல்உரிக்க வந்த புறா..
நீரோடையில் இணைந்த கவிஞருக்கு வாழ்த்துக்கள்..
சுயம் இழந்த மாடப்புறாவாக வாழும் மனிதர்கள்……..அருமையான வரிகள்…..உண்மைநிலை உணர்த்துபவை.