பொது கவிதைகள் தொகுப்பு – 4

நீரோடையின் இளம் கவிஞர் மணிகண்டன் அவர்களின் கவிதைகளின் தொகுப்பு – pothu kavithaigal

வாழை வெச்சேன்

வாழை வெச்சா நல்லா வாழலாம்னு…
நம்பி வெச்சேன்
நானும் நானூறு வாழைதாங்க…
வெச்ச வாழை தான் சொல்லுச்சுங்க…
நான் வாழ நீ ராவு பகலா உழைக்க வேனுமுனு…

அப்படி என்னத்த உழைக்கனும் காது குடுத்து நானும் கேட்ட…
ஆடிக்கொன்னு அம்மாவாசைக்கொன்னு
வெயிக்கும் உரமெல்லாம் பத்தாதைய்யா…

ரெண்டு தண்ணிக்கொரு உரமேனும்…
காஞ்ச சறுகத்தான் மட மடனு அறுக்கனும்…
வெயிலடிச்சா தண்ணிய நிறையா நிறுத்தி கட்டனும்…

அல்லக்கன்னுங்கள அடியோட அரக்கி வைக்கனும்…
வந்த களைகள வளரவிடாம கட கடனு களையெடுக்கனும்…
காத்து அடிச்ச தாங்கி புடிக்க எனக்கொரு துணை வேனும்…

சல்பேட்டு பொட்டாசு எல்லாமெனக்கு வேனாமய்யா…
மாட்டுச் சாணமும் வீட்டு குப்பையும் போதுமய்யா…
மள மளனு நான் வளர நினைச்சு
மருந்த தெளிக்க வேனாமய்யா…
அப்புறம் மளடியாவேன் உன்
அக்கறையின் விளைவிலைய்யா…!
வாழையின் வார்த்தைகளை கேட்டபடியே…


நகரமயமாதலின் விளைவுகள்

பழையசோறும் கேப்பக்களியும் எப்பவோ இங்கு
மாண்டு போயாச்சு…
ஆனா சூடு பண்ணத ஆவி பறக்க கொண்டு
வந்து delivery பண்ணும் traditional trend ஆகி ரொம்ப நாளாச்சு…

அஞ்சாங்கல்லும் கண்ணாம்பூச்சியும் ஆடிய
அறும்புகளெல்லாம் காணாமயே போயாச்சு…
ஆனா இன்றைய சிறுசுங்க எல்லாம் அடுக்குமாடியில
ஆண்ட்ராய்டுக்குள்ளேயே ஒளிஞ்சு போயாச்சு…

அரைகால் சட்டை எல்லாம் அழகு ஜீனாக மாறி போயாச்சு..
ஆனா பாவாடை தாவணி பாதியா குறைஞ்சு
அதுவே Fashionஆகி போயாச்சு…
அட நிழலுக்கு கூட நிம்மதியா நிக்க மரமில்லாம
மனம்வாடி போயாச்சு…
ஆனா AC வெச்ச கார் என்பதே இப்போ ரொம்பவே
சாதாரணமாகி போயாச்சு…
பர்லாங்கு பாக்காம நடந்து போய் சொந்தபந்தத்தை
பாத்த காலமெல்லாம் மலையேறி போயாச்சு… – pothu kavithaigal.

ஆனா இரண்டாவது மாடிக்கே Liftல போற
அளவுக்கு வயசாகி போயாச்சு…
ஆஹா சொன்ன வளர்ச்சி எல்லாம் இப்போ
ஐயையோ சொல்லறது என்னவோ ரொம்பவே புதுசாச்சு…!
மறத்து போன மனித மனத்தோடு…

– மணிகண்டன் சுப்பிரமணியம், கோபிசெட்டிபாளையம்

You may also like...

10 Responses

 1. Kavi devika says:

  சிந்திக்க தூண்டும் வரிகள். வாழ்த்துகள் கவிஞருக்கு

 2. Rajakumari says:

  கவிதை படிக்க படிக்க பரவசமாக இருக்கிறது

 3. R. Brinda says:

  வாழை பயிர் செய்வதை மிக அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். அடுத்து நகரமயமாதலின் விளைவுகளை எடுத்துச் சொல்லி இருக்கும் விதமும் அருமை! பாராட்டுக்கள்!!💐💐💐

 4. தி.வள்ளி says:

  இளம் கவி மணிகண்டனின் கவிதைகள் இரண்டும் அற்புதம்.உழைத்தால் பலன் காணலாம் என்றும் சொல்லும் வாழையின் அற்புத வரிகள் …நகரமயமாதலால் மாறிப் போன நம் நடைமுறை வாழ்க்கையின் அவலம்…அருமை கவிஞரே!!!

 5. கதிர் says:

  கவிதை பாஷை அருமை.. பாராட்டுக்கள் மணி அவர்களுக்கு..

 6. மாலதி நாராயணன் says:

  அருமையான கவிதை
  இன்றைய காலகட்டத்தை அவல நிலையை கண் முன்னே நிறுத்துகிறார்
  பாராட்டுக்கள்

 7. Sakthivelayutham says:

  வாழைவச்சு வாழையை வாழ வைத்து விட்டீர்கள்

 8. மணிகண்டன் சுப்பிரமணியம் says:

  வாழ்த்துக்கள் கூறிய அனைத்து கவிகளுக்கும் நன்றிகள்.. 🙏

 9. N.கோமதி says:

  நகர மயமாதலில் தபால்காரன் சைக்கிள்மணியும் மறந்தே போயாச்சு …
  கவிதை யதார்த்தத்தை செப்பியது.

 10. R.S.BALAKUMAR says:

  அருமை பதிவு ……வாழ்த்துக்கள்