பொது கவிதைகள் தொகுப்பு – 7
கவிஞர் மணிகண்டன் அவர்களின் சிறப்பு பதிவு (கவிதை தூய்மை பணியாளர்கள்), கவிஞர் பிரகாசு அவர்களின் “என்னவளே பாகம் 2” மற்றும் கவிஞர் பிரவீன் அவர்களின் “செப்டம்பர் மாத கவிதைகள்” – pothu kavithaigal thoguppu 7
சேற்றில் பூத்த செந்தாமரை (தூய்மை பணியாளர்கள்)
எனக்கும் அவர்களுக்குமான உறவு ஓர் எட்டாக்கனியே..
திருவிழா காலங்களில் பத்து ரூபாய் கொடுத்திருப்பேன்..
அதுவும் பொத்தாம் பொதுவான ஞாபகமே..!
கொஞ்சம் மீறினால் “ஐயா வணகமுங்க”
என்ற காலை வணக்கத்தை கூட
நான் கண்டுகிட்டதும் இல்லை..
ஆனாலும் ஏனோ அவர்கள் எம் உறவையும் உறைவிடத்தையும் ஆர்ப்பரிப்பில்லாமல் அலங்கரிக்கிறார்கள்..
“சீ” என்று சொல்லாத சிரித்த முகங்கள்..
அருவருப்பை காட்டாத அழகிய மனங்கள்..
அங்கலாய்ப்போடு அறப்பணி செய்யாத அன்புக் கரங்கள்..
மலமுமென்ன..
மக்கிப்போன குப்பையுமென்ன
நல்ல மனமிருக்கு..
மணத்தை யாவும் அவர்கள் தாங்கிச் செல்ல..
நெகிழியென்ன..
தேங்கி நிற்கும் கழிவுமென்ன..
நல்ல குணமிருக்கு..
இந்த சமூகத்தை தூய்மை பாதைக்கு எடுத்துச் செல்ல..
ஆம் அவர்கள் வந்த பிணியோ..
அடுத்து வரும் அணங்கோ..
பயமில்லாமல் பணி செய்வார்கள்..
கவலையில்லாமல் களமிறங்குவார்கள்..
நம்மை துப்பும் உறவே இங்கு நிறைய உண்டு..
ஆனால் பிறர் துப்பலுக்கும் கூட..
முகம் சுளிக்காத துப்புறவாளருக்கு,
ஈடு இணை எவர்தான் உண்டு..!
உங்களைப் பற்றி ஒருவரிக் கவிதையாய் சொல்லிட வந்தேன்..
ஆனால்
ஒருபக்கம் போதாமல் முடிவிலியாய் நிற்றேன்..
வரிகளோடு தொடர்ந்தபடியே
– மணிகண்டன் சுப்பிரமணியம்
செப்டம்பர் மாத கவிதைகள்
கொரோனாவிற்குப்பின்
மனிதனின் அந்தரங்க உறுப்புகளாக புதிதாக சேர்க்கப்பட்டன
வாயும் மூக்கும் கொரோனாவிற்குப்பின்!…
விசிறி
மூவிறக்கைகள்
மூடப்பட்ட கூண்டு மின்சாரப்பறவை
விசிறி!…
முதல் துரோகி
மனிதன் உருவாக்கிய முதல் துரோகி மரக் கைப்பிடி கோடாரி!…
மகள் கேட்டவை
ஒரு அப்பா
மறக்காமல்
வாங்கி வந்த
பொருள்களில் பல, மகளால் கேட்கப்பட்டவையாக இருக்கும்!…
பனித்துளி
சொல்லிய காதலை
நிராகரித்தது நிலா
இரவு முழுவதும்
பசும்புல் சிந்திய
கண்ணீர்
பனித்துளி!…
அப்பாவின் அன்பு
குழந்தை காலை முதல் விளையாடிய பத்துவித
பொம்மைகளில் தேடிக் கிடைக்காத
ஏதோ ஒன்று இரவு 10 மணிக்கு
வரும் பொம்மையிடம் கிடைத்தால்
அதன் பெயர்
அப்பாவின் அன்பு!…
MS Dhoni
100 கோடி இந்தியாவின்
16 வருட ராசி எண் 7
MS Dhoni!…
மெழுகுவர்த்தி
இரண்டு வயது
குழந்தையுடன் சேர்ந்து
இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தது அந்த மின்வெட்டு வீட்டில் மெழுகுவர்த்தி!…
உளி
மனிதன் படைத்த
ஆயுதங்களில்
விதி விலக்கு
உளி!…
கைக்குட்டை
நம் வீட்டிலுள்ள
அனைவரின் கவலைகளையும் அறிந்திருக்கும் ஒரே
ஒரு பொது நண்பன் கைக்குட்டை!…
– பிரவீன், அவினாசி
என்னவளே பாகம் – 2
என் காட்சி திரையில் நீந்திச் சென்றது மீன்கள்
“அது உன் கண்கள்”
மின்னலும் ஒரு நிமிடத்தில் தோற்றுவிட்டது
உன் கண் சிமிட்டலினால்.,
உன் கால் பாதம் பட்ட இடமெல்லாம் ச
ிற்பங்கள் ஆனது மண்ணில்.,
உன் கொலுசு மணிகளும் இசை அமைக்குகிறது
உன் கால் அசைவுகளால்., – pothu kavithaigal thoguppu 7
உன் வருகைச்சேதி சொல்லும் கொலுசின் மணி ஓசை.,
சிவப்புக்கடலில் வெள்ளை நிற ஓடம் உன் நகங்கள்.,
உன் பூவிதழ் தீண்டலில் சிவக்கட்டும் என்
கன்னம் நம் காதல் சாட்சியாக…
கெஞ்சி பேசும் கொங்கு நாட்டு தங்கமே
உன் கொங்கு தமிழ் என்னையும் கவிஞன்
ஆக்குகிறது உன் காதல் தூவலில்
என்னமோ செய்தாய் நீ உன் மாய விழிகள்
என்ன மின்காந்தமா. கண்ணுட அங்கு விழுந்த
நான் இன்னும் எழ வில்லை
நம் இதயம் இடம் மாற்றிக்கொண்டது காதல்
என்ற ஒற்றை சொல்லில்…..
என்னவளுடன் புகைப்படம் எடுக்கும்போது
என் இதய துடிப்பில் இதமாக நடனம் கற்றுக்
கொடுத்தது என்னவளின் கம்மல்…..
மெளனமாக ஆயிரம் ஆயிரம் மொழியில்
என்னிடம் பேச துடித்து எனக்கு உரியவளின் உதடு
ஆயிரம் காட்சிகள் படமாக்கப்பட்டன என்
உரியவளின் கண் சிமிட்டலில்…
புதிதாக பூத்த மலர் போல பூரிப்பு நிறைந்த கண்ணம்
என் எண்ண அலைகள் என் உரியவளை உரிமை கோர..
– பிரகாசு.கி அவனாசி
அனைத்து கவிதைகளும் நன்றாக இருக்கிறது.
அனைத்து கவிதைகளும் அருமை…தேன்கூடு…கவிஞர்களுக்கு பாராட்டுகள்
அனைத்து கவிதைகளும் அருமை… கவிஞர்களுக்கு பாராட்டுகள்
Super…🥰
சேற்றில் பூத்த செந்தாமரை மிக அருமை,
என்னவளே – காதலை நகர்த்தும் பரிசல்,
செப்டம்பர் மாத கவிதைகள் புதுமை..
வாழ்த்துக்கள்