பச்சை பயிறு பொரி அப்பளம் கலவை

இனி வருவது பண்டிகை காலம். பலர் தங்கள் இல்லங்களில் கொலு வைப்பர். அத்தகைய தருணம் விருந்தினர்கள், அக்கம் பக்கத்தினர்,நண்பர்கள் என அனைவரையும் அழைத்து தெய்வங்களுக்கு நெய்வேதியம் செய்து வந்தவர் மனமும் வயிறும் குளிரும்படி விருந்தோம்பல் செய்து பரிசு வழங்கி மகிழ்வர். அத்தகையோருக்கு ஒரு எளிய சத்தான ஒரு உணவு. உணவு என்று சொல்வதை விட புரதம் நிறைந்த நொறுக்குத் தீனீ – pachai payaru sundal masala

pachai payaru sundal masala

தேவையான பொருட்கள்

பச்சைப் பயறு – அரை கிலோ
தக்காளி – 4
நிலக்கடலை – 200கிராம் (வேகவைத்தது)
பொரி – அரை லிட்டர்
அப்பளம் – 5 (பொரிந்தது)
கொத்து மல்லி – தேவைக்கு ஏற்ப
எலுமிச்சை – 1

செய்முறை

பச்சைப் பயறை ஊற வைத்து கல் நீக்கி,துணியில் கட்டி முளைக்க விடவும். முளை விட்ட பயறை ஒரு பாத்திரத்தில் கொட்டி சிறிது உலர விடவும். நிலக்கடலைப் பருப்பை வேக வைத்து பச்சைப் பயறுடன் சேர்க்கவும். தக்காளிப் பழங்களை பொடியாக நறுக்கி அதனுடன் சேர்க்கவும். தேவைககேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும். பிறகு பொரியை மேலே தூவவும் – pachai payaru sundal masala.

பொரித்து வைத்துள்ள அப்பளங்களை பெரிய துண்டுகளாக உடைத்து கலவையில் சேர்க்கவும். கொத்து மல்லியை சேர்த்து கலவையை அலங்கரிக்கவும். வண்ணமயான சத்து நிறைந்த பச்சைப்பயறு பொரி அப்பளக் கலவை தயார். தேவைப் பட்டால் எலுமிச்சை பிழிந்து விடவும்.

இதில் உள்ள சத்துகள்

  1. பயறு மற்றும் கடலை (புரதம்)
  2. தக்காளி – வைட்டமின்
  3. பொரி- அரிசி என்பதால் (ஹார்போ ஹடை்ரேட்ஸ்)
  4. அப்பளம் – உளுந்நு என்பதால் புரதம்.
    எளிமையான எதிர்ப்பு சக்தி தரக்கூடிய ஒரு தீனி. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

You may also like...

4 Responses

  1. Rajakumari says:

    சிறுவர் சிறுமியர் கூட அவர்களே செய்து ரசிக்கலாம்

  2. Kavi devika says:

    அருமையான ஆரோக்கியமான ரெஸிபி .. வாழ்த்துகள்

  3. Nachiyar says:

    அருமை…நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவு..

  4. கு.ஏஞ்சலின் கமலா says:

    அன்பு உள்ளங்களுக்கு என் நன்றிகள் பல