முருங்கைக்கீரை அடை தோசை
இந்த “முருங்கைக்கீரை அடை தோசை” சமையல் பதிவில் வாயிலாக “பகவதி நாச்சியார்” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – murungai keerai adai dosa
தேவையான பொருள்கள்
தோசை அரிசி – 3 கப்
பட்டாணி பருப்பு – 1/2 கப்
பூண்டு – 5 பற்கள்
காய்ந்த மிளகாய் வத்தல் – 10
காயம் ,கறிவேப்பிலை – தேவையான அளவு
முருங்கைக்கீரை – 1/2 கப்
தேங்காய்த் துண்டுகள்- 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் பொடி – 1 மேசைக்கரண்டி
இஞ்சி – சிறிய துண்டு
வெங்காயம் – 3
கடுகு உளுந்தப்பருப்பு – தாளிக்க
செய்முறை
அரிசியையும் பருப்பையும் இரண்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும் ஊறவைத்த இவற்றை மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் மிளகாய் வற்றல் இஞ்சி, பூண்டு, காயம், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து தோசை மாவு பதத்திற்கு எடுத்து வைத்துக் கொள்ளவும் – murungai keerai adai dosa.
முருங்கைக் கீரையை சேர்க்கவும். தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளவும் வெங்காயம் கடுகு உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை இவற்றை தாளித்து இதனுடன் சேர்த்துக் கொள்ளவும் . தோசை மாவு பதத்தில் எடுத்து வைத்துக் கொண்டு தோசைக்கல்லில் தோசையாக ஊற்றி சமையல் எண்ணெய் விட்டு பொன்னிறமாக இரண்டு பக்கமும் நன்கு வேகவைத்து சுடச்சுட பரிமாறவும்.
– பகவதி நாச்சியார்
சுவையான உணவு நன்றி
அருமையான சத்தான பாரம்பரியமான ஒரு உணவு பருப்புகள் சேர்வதால் புரோட்டீனும் முருங்கை கீரை சேர்வதால் கால்சியமும் கிடைக்கும் …பகிர்தலுக்கு சகோதரிக்கு நன்றி
அருமை…ஆரோக்கிய அறுசுவை..
ஆரோக்கியமான உணவு..நன்றி