கவிதை தொகுப்பு – 30
இந்த சிறப்பு கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் “ராஜிஏஞ்சல்” மற்றும் “நிலா” அவர்களை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம். மேலும் கவிஞர்கள் கவி தேவிகா, ஜாகிர் உசேன், பொய்யாமொழி மற்றும் பிரவீன் அவர்களின் கவிதைகளும் இந்த தொகுப்பை அலங்கரிக்கின்றன – kavithai thoguppu 30
தமிழருவி
ஆசையோடும் துள்ளலோடும்
ஆர்ப்புடனே மலையிலிருந்து
ஆர்பரித்து வீழ்கிறேன்…..
ஆரணியம் முழுவதிலும்
ஆசிபெற்று தவழ்கிறேன்….
“ஆயி”யாகிய அவள்மடிதனில்…
இறுதியில் இணைந்திட…..
கடலன்னையோடு கலந்திட…..
வாழ்வில் வீழ்வதும்
ஒருவித சுகமாகும்……..
விழுகின்றயிடம் சொர்க்கமாயிருந்தால்…..
– கவி தேவிகா, தென்காசி
உறக்கம் உதிர்ந்த
நள்ளிரவில்..
வலியாற்ற வந்த அப்பாவின்
ஆன்மாவை…
பிடித்து வைக்க நினைத்திருந்தேன்..
ஆதுர சொல் தடவலில்
நினைவு தப்பிய பொழுதொன்றில்..
வாஞ்சையாய் கைவிடுத்து சென்றவரை..
இருத்தி வைக்க இயலவில்லை..
– ராஜிஏஞ்சல்
அவதானிப்புகளை
புறம் தள்ளி
அடவுச் சொல்லடுக்கி
நேர்த்தியாய் விரவிய
நெருப்புப் பூக்களென
நினைவின் கிளர்வுகள்..
அவியக் காத்திருக்கும்
கங்குரசி உயிர்த்தெழச் செய்து
இழைய விழைகின்ற
திந்த நேசஞ் சுமந்துவந்த
ஈரக் காற்று… – kavithai thoguppu 30
– நிலா
கவலைகள்
வாசல் தோறும் ஏதோஒரு வடிவில்
வந்து நிற்கும் கவலை…
மீண்டுவர நினைக்கும் போதெல்லாம்
மீண்டும் மீண்டும்
முன்னைவிட அதிவேகமாக
அருகில் நெருங்கிவரும் …
கவலைகள்
சுகமா?
சுமையா?
இல்லை சுகமான சுமையா?
இங்கே பெரும்பாலானவ்ரகள்
கவலையையே வாழ்க்கையில்
கை கொண்டிருக்கிறார்கள்
கைக்கு எட்டுவது வாய்க்கு எட்டுவதற்கு
கணநேரமும் போராடுகிறார்கள்
மகிழ்ச்சி என்பது
மின்மினிப் பூச்சிகள் போல்
மனதில் மின்னி மறைகிறது
கவலைகள் எப்போதும் நம்மை
கைப்பற்றிக்கொள்கிறது
வேண்டாமென்று விலக்கி வைத்தாலும்
விடாத கருப்பைப்போல்
ஒட்டிக்கொள்கிறது
வரவேற்காமல் வருகின்ற
தவிர்க்க முடியாத
விருந்தாளி போல்
தக்க நேரத்தில் துளிரத்து
பெருமரமாய் கிளை விரித்து
நிரந்தரமாய் நிழல் கொடுக்கும்
ஒருமரமாய் கவலை
ஓங்கார வளர்ச்சி பெருகிறது
வருத்தம் என்பது
வாழ்க்கையில் வாய்க்கால் தகராறு
போல்
தீர்ந்திடாமல் நீள்கிறது
பணத்தில் கருவாகி
மனத்தில் உருவாகிறது
நினைத்தாலும் வெளியேறிட
நிலையான வழியேதுமில்லாமல்
உள்ளத்தை உருக்கி
உயிரை நெருக்கி
உடலைத்துரும்பாக்கும்
இனம்புரியாத பெருங்குணம்
செயலில் அறிவிக்க இயலாது
சொல்லில் வடிக்க முடியாது
உள்ளில் மறைந்தே இருந்திடும்
ஒருவராலும் பார்த்திட முடியாது…
– ஜாகிர் உசேன்
புகைவண்டி வள்ளல்கள்
ரயில் புகையில்
கரிந்துகொண்டிருந்தது
கரிசனமற்றவர்களின்
எண்ணக்குவியல்..
தடம் பதிக்க
பார்வை தேடலோடு
குரலுயர்த்தி வேண்டி
நின்றாள்..
தடக் தடக் என
நெஞ்சம் படபடத்த
அந்த ரயிலின் மனம்
பயணிகளுக்கு இல்லை.
– பொய்யாமொழி
இது ஒரு கொரோனா காலம்!…
2020 20/20
ஆட்டமாக இல்லாமல்
ஒரு டெஸ்ட் ஆட்டமாகச் செல்கிறது!…
எஸ்பிபி வசந்தகுமார்
என தினமும் உயிரைக் கொல்கிறது!…
1945 களில் ஹிட்லர்
2020 களில் கொரோனா!…
18ம் நூற்றாண்டு –
டெங்கு
19ம் நூற்றாண்டு – மலேரியா
20ம் நூற்றாண்டு –
எய்ட்ஸ்
21ம் நூற்றாண்டு – கொரோனா…
கைகளைக் கழுவக் கற்றுக்கொண்டோம்
கைகளைக் குலுக்க
மறந்தே போனோம்
ஆயுள் ரேகை
அழியாமல் இருக்க!…
முகக்கவசம் அணிந்து கொண்டோம்
உணர்வுகளை அதனுள் ஒளித்துக் கொண்டோம்
உயிர்க்காற்றை நாமும்
வடிகட்ட!…
சமூக இடைவெளி
பழகிக் கொண்டோம்
இதுதான் முதல்முறை
என நினைத்துக் கொண்டோம்
அலைபேசி தொழில்நுட்பம்
செய்ததை மறந்து விட்டு!…
வேண்டுதல் நிறைவேறினால்
செலுத்தலாம் என்று வைத்திருந்த
அந்த நூறு ரூபாய்
அஜாக்கிரதையால் தெருவில்
எங்கோ தொலைந்துபோனது
கோவில் உண்டியலை
அது சேரவில்லை ஆனால் புண்ணியம் என்னைச்
சேர்ந்தது… – kavithai thoguppu 30
ஊரடங்கில் உணவின்றி
அலையும் யாரேனும் ஒருவனுக்கு அது
ஒரு வேளை
பசியைத் தீர்த்து வைக்கும் என்று எண்ணும் போது!…
மனிதனின் அந்தரங்க உறுப்புகளாக
புதிதாக சேர்க்கப்பட்டன
வாயும் மூக்கும் கொரோனாவிற்குப்பின்!…
கடவுள் மறுப்பாளன் கூட
பெண் கடவுளும் உண்டு
ஆண் கடவுளும் உண்டு
என்று உணரத் தொடங்கினான்
கொரோனா தொற்றில்
சிகிச்சை பெறும் போது!…
என் மகனுக்கு நான் தரும்
முத்தத்தின் பாசத்தில்
பயத்தைக் கலந்த உலகே துடிக்கும்
கொடிய நொடியே நீ மடியும் நொடிக்கு
விடியும் பொழுதுகள் விடை சொல்லுமா!…
காத்திருக்கிறோம் இன்னும் நம்பிக்கையுடன்!…
– பிரவீன் அவிநாசி
காலையை சோலையாக்கி கவிதை படித்ததும் மனதிற்கு உற்சாகமாக இருந்தது.
அறிமுக கவிஞர்களுக்கு நீரோடை சார்பாக பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்
கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது
கவிதைகள் நன்று..
வாழ்த்துகள் 💐💐
புதுமுக கவிஞர்கள் ராஜி ஏஞ்சல், நிலா அவர்களை நீரோடை வாசகர்கள் சார்பாக வரவேற்கிறோம் … கவிதைகள் அனைத்தும் அருமை.. கவிகளுக்கு எனது வாழ்த்துக்கள்!
ராஜி மற்றும் நிலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மற்ற அனைவரின் கவிதைகளும் அருமை.
கைகளைக் கழுவக் கற்றுக்கொண்டோம்
கைகளைக் குலுக்க
மறந்தே போனோம்
ஆயுள் ரேகை
அழியாமல் இருக்க!…
முகக்கவசம் அணிந்து கொண்டோம்
உணர்வுகளை அதனுள் ஒளித்துக் கொண்டோம்
உயிர்க்காற்றை நாமும்
வடிகட்ட!…
சமூக இடைவெளி
பழகிக் கொண்டோம்
இதுதான் முதல்முறை
என நினைத்துக் கொண்டோம்
அலைபேசி தொழில்நுட்பம்
செய்ததை மறந்து விட்டு!…
வேண்டுதல் நிறைவேறினால்
செலுத்தலாம் என்று வைத்திருந்த
அந்த நூறு
அஜாக்கிரதையால் தெருவில்
எங்கோ தொலைந்துபோனது
கோவில் உண்டியலை
அது சேரவில்லை ஆனால் புண்ணியம் என்னைச்
சேர்ந்தது… –
ஊரடங்கில் உணவின்றி
அலையும் யாரேனும் ஒருவனுக்கு அது
ஒரு வேளை
பசியைத் தீர்த்து வைக்கும் என்று எண்ணும் போது!…
மனிதனின் அந்தரங்க உறுப்புகளாக
புதிதாக சேர்க்கப்பட்டன
வாயும் மூக்கும் கொரோனாவிற்குப்பின்!…
கடவுள் மறுப்பாளன் கூட
பெண் கடவுளும் உண்டு
ஆண் கடவுளும் உண்டு
என்று உணரத் தொடங்கினான்
கொரோனா தொற்றில்
சிகிச்சை பெறும் போது!…
என் மகனுக்கு நான் தரும்
முத்தத்தின் பாசத்தில்
பயத்தைக் கலந்த உலகே துடிக்கும்
கொடிய நொடியே நீ மடியும் நொடிக்கு
விடியும் பொழுதுகள் விடை சொல்லுமா!…
காத்திருக்கிறோம் இன்னும் நம்பிக்கையுடன்!…