கவிதைக்கு நீரூற்றி உருவம் கொடுத்த காதல்
நெடுநாட்களாக தொலைத்திருந்தேன் என்றிருந்த,
மாயபிம்பமாய் போன என் கவிதை ஆற்றலை
நீரூற்றி உருவம் கொடுத்து, என்னை கைது
செய்த அந்த கண்கள் (பேருந்து பயணத்தில்).
பேருந்தை விட்டு இறங்கியும்
“ஏதோ ஒன்றை தொலைத்தாய்” மனம் பாடுபட்ட கணம்
சாலையோர நாற்காலியில் அமர்ந்தேன்.
பூங்காவனமோ,
வாசனைத்திரவியமோ,
தேவலோக சாகுந்தலமோ
பரிசம் போடாத இடம் அதில்,….
என் சுவாசத்தை பறிக்க வந்த மலராக
அவளே என் காட்சித்திரையில்.
பார்வை பிம்பத்தின் பிழையோ என்று கண்களை தேய்த்து
மீண்டும் நோக்கிய நிமிடம்,
நான் பேருந்தில் தொலைத்ததாக இருந்த அதே கண்கள்
என்னை விடுதலை செய்தது. Happy Christmas 2013
நீரோடை-ன் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
– நீரோடைமகேஷ்