பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 1

ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 1

bharathiyar puthiya aathichudi

அச்சம்தவிர்

அஞ்சுதற்கு அஞ்சாமை
பேதைமை என்றுரைப்பார்
வள்ளுவர் என்றாகினும்
அச்சமே அடிப்படையான
நாதமென்றேவானால்
வாழ்வதைவிட சாவதே
மேலேயாம்

ஆண்மை தவறேல்

ஆண்மை எனப்படுவது
யாதெனில் உடல் வலிமை
என்றேதான் உரைப்போரே
உண்மையென்பததுவன்று
உலகில் மாதரை போற்றும்
மாண்பறமே ஆண்மை என
உணருவீர்

இளைத்தல் இகழ்ச்சி

இளைத்தல் என்பதன்
பொருளென்பதெனவோ
நம் வளங்குன்றுதலின்
வகையென அறிவீரோ
வளமென்பதுவே நற்பேறு
நல்லறம் என்றே ஏற்றுக் கொள்க

ஈகை திறன்

வகைபாடு என்பது திறன்
ஈகையின் வகைபாடென
இருக்குமெல்லாம் ஈவது
ஏற்போர்கெல்லாம் ஈவது
நாம் இயன்றவரை ஈவது
நமது இறுதி வரை ஈவதும்
என்றே கொள்வீர்

உடலினை உறுதி செய்

அதிகாலை துயிலெழு
நாள்தோறும் நடை பயில்
தினசரி தியானம் யோகா
நல்லதோர் உணவும் எடு
லாகிரி போதை புறந்தள்ளி
உன் உடலை பேணினால்
மனதிலிலும் வலிமைதான்

ஊண்மிக விரும்பு

ஊண் என்பதன் கருத்தை
உணவெனக் கொள்ளாதீர் அதன்
உண்மைப்பொருள்
ஆன்மாவின் இன்ப துன்ப
நுகர்வு எனக் கொண்ட
உணர்வதானால் ஆன்மா
மேல் அவா கொள் – bharathiyar puthiya aathichudi

எண்ணுவது உயர்வு

உள்ளக்களிப்பு ஒன்றுளது
என்றாயின் எண்ணத்தில்
எண்ணுவதை என்றும்
மிகுத்த உயர்வானதொரு
நல்லறத்தின் ஆணிவேர்
அடிவேர் என்றே தான்
ஏற்றுக் கொள்

ஏறுபோல் நட

ஏறு என்பது மாட்டினம்
மட்டுமல்ல ஏறுசேவகன்
என்றொரு பதமுண்டு
அதன் அர்த்தம் உயர்ந்த
வெற்றி கண்ட வீரனின்
நடை பெருமிதம் கொண்ட
பீடு நடையதுவாகுமே

ஐம்பொறி ஆட்சிகொள்

பூமியில் பிறந்தோரிடை
புலன் ஐந்து உண்டேயாம்
கண் காது மூக்கு செவி
இவற்றோடு தொடுதல்
உணர்வுமே ஆமாயின்
அவை யாவும் அடக்குதல்
அவசியம் தானே

ஒற்றுமை வலிமையாம்

தனித்தே செயல்பட்டால்
தனித்தன்மை உடையது
என்பது உண்மையாயினும்
ஒற்றுமை எனும் உணர்வே
ஒரு படி அதற்கும் மேலே
பலன் தரும் என்பதையும்
உணர்ந்து கொள்

– மா கோமகன்

You may also like...

1 Response

  1. Kavi devika says:

    அருமை.வாழ்த்துகள்