பாரதியாரின் புதிய ஆத்திசூடி – 2
ஒவ்வொரு வாரமும் இலக்கிய சனி பகுதியில் “பாரதியாரின் புதிய ஆத்திசூடி“ பத்து வரிகளுக்கு சிறப்பான விளக்கம் (ஏழு வரிகளில்) தருகிறார் கோமகன் – bharathiyar puthiya aathichudi 2
ஓய்தல் ஒழி
ஓய்தல் ஒழித்தல் என்பதே
உயர்வடையவே ஒருவன்
தேர்த்தெடுக்க வேண்டிய
வழியில் உயர்வழியேயாம்
ஓய்வறியா சூரியனை
உணர்ந்தே நீயும் அதன்
செயல் போல் நின்றிடு
ஔடதம் குறை
ஔடதம் குறை என்பதுவே
மருந்தில்லா பெருவாழ்வே
நற்சிந்தனை நல்லுணவு
நடைபயிற்சி இவற்றை
நாளும் மேற்கொள்வாயின்
நலமே நீ உள்ளத்தாலும் உடலாலுமேயாம்
கற்றது ஒழுகு
கல்வியென கற்பதுவே
கௌரவத்திற்கு அன்று
என்றேதான் நீ உணர்ந்து
கற்ற நற்செயல்களையே
நாள்தோறும் கடைபிடித்தல்
உயிரென உயர்த்தியே நீ
சிக்கெனப்பிடி
காலம் அழியேல்
சென்ற ஒருநொடி பொழுது
மீண்டு வராதென தெரிந்து
செப்பியதோர் வார்த்தை
பொருளுணர்ந்து சோம்பித்
திரியாது சுறுசுறுப்பு கற்க
எறும்பை உற்று நோக்கு
தேனீயை துணைகொள்
கிளைபல தாங்கேல்
உன்னால் ஒரு நேரத்தில்
ஒருசெயல் மட்டுமே செய்ய
முடியுமென தெள்ளெனவே
தெரிந்தால் ஓன்றே செய்
ஒன்றும் நன்றே செய்
நன்றும் இன்றே செய்
இன்றும் இன்னே செய்
கீழோர்க்கு அஞ்சேல்
கீழோர் செயலதன் இறுதி
தீமையே விளைவெனவும்
நல்லன ஏதுமில்லை என
உணர்தல் எளிதேயாம்
என்பதால் கீழோர் செயல்
கண்டு அச்சப்படுதல்
அவசியமில்லையன்றோ
குன்றென நிமிர்ந்து நில்
குன்றென நிமிர்ந்திருக்க
குறைவரா நற்செயல்கள்
வேண்டும் என்பதனையும்
அன்றி குன்றுதல் என்பதே
யாவருக்கும் எளிதெனவும்
கண்டு கொள்ளவதூஉம்
அரிதென்பேன்
கூடித் தொழில் செய்
செய்யும் தொழிலதனால் நான்கு
பேருக்கு மட்டும்
நன்மை என்பதுவாயின்
அதனையே கூட்டுறவாய்
செய்வதானால் பல்கியே
பலனடைவோர் பெருகுதல்
கண்கூடனென தெரியுமே
கெடுப்பது சோர்வு
சோர்வு என்பதுயாதெனில்
சோம்பலெனும் கீழ் குணம்
என்பதன்றி அதன் இறுதி
அத்தனையும் நட்டமென
சொல்லவும் வேண்டுமோ
என்பதானல் சோம்பலை
அழிக்க பயிற்சி கொள் – bharathiyar puthiya aathichudi 2
கேட்டிலும் துணிந்து நில்
கேடு என்பதன் விளைவே
கெட்டதென பார்க்காமல் வறுமை
என மற்றோர் அர்த்தமுள்ளதென
அறிந்து வறுமையிலும்
துணிந்து
நற்செயலாற்றலே நன்றாம்
மானுடர் அழகிற்கழகென
– மா கோமகன்