மச்சமுனி சித்தர்

பதினெண் சித்தர்களில் ஒருவரான மச்சமுனி சித்தர் வரலாறு பற்றி வாசிக்க – machamuni siddhar

machamuni siddar

மச்சமுனி காகபுசுண்டரின் சீடராவார். மச்சமுனி பிறந்தது ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர். 300 வருடம் 62 நாட்கள் வாழ்ந்தார் என்ற குறிப்பும் உண்டு. ஒரு சமயம் தடாகம் ஒன்றின் கரையில் சிவபெருமான் “காலஞானத்தை” உமாதேவியாருக்கு உபதேசிக்கும் போது இடையில் அவர் தூங்கி விட்டாராம்.

ஆனால் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் கேட்டுக் கொண்டிருந்த மீன் ஒன்று, மீதி ஞானத்தை தெரிந்து கொள்ள பூமியில் பிறந்ததாகவும் அதுவே மச்ச முனி என்கிற புராணகால கதை ஒன்றும் சொல்லப் படுகிறது. இவர் போகரின் மாணவர் என்றும் அகத்தியரின் சம காலத்தவர் என்றும் கூறப்படுகிறது.

ஜீவா சமாதி

இவர் சமாதி குறித்து முரணான கருத்துக்கள் சொல்லப் படுகின்றன. திருப்பரங்குன்றத்தில் சாமாதியடைந்ததாக ஒரு குறிப்பும், மற்றயது திருவானைக்காவில் சமாதியடைந்ததாகவும் கூறப் படுகின்றது. மலைமீது இருக்கும் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பின்பக்கம் இருக்கும் சுனை நீரில் மச்சேந்திரர் மீன் உருவில் இன்றும் நீந்துவதாக ஓர் ஐதீகம் – machamuni siddhar.

திருப்பரங்குன்றம்

மதுரைக்குத் தென்மேற்கே அமைந்துள்ள திருப்பரங்குன்றம் கோயில் பல்வேறு புராண வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது. மச்சமுனி சித்தர் மீனாக நீந்தும் தலம் என்றும் சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள் என்றும் போற்றப்படுகின்றது. ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடு இதுவே, தேவயானை என்னும் தெய்வானையை முருகன் மணந்த இடமும் இதுவே.
“பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை
உன்னிய சிந்தை உடையவர்க்கு
இல்லை உறுநோயே”

என திருஞானசம்பந்தர் பாடிய சிறப்புமிகு சிவத்தலம் திருப்பரங்குன்றம். ஞான சம்பந்தரோடு சுந்தரரும், வள்ளலாரும், அருணகிரிநாதரும், கச்சியப்ப சிவாச்சாரியாரும் இந்த ஆலயத்தைப் பாடி சிறப்புச் செய்திருக்கின்றனர்.

எழுதிய நூல்கள்

மச்சமுனி சூத்திரம் 21
மச்சமுனி தூல சூக்கும காரண ஞானம் 30
மச்சமுனி பெரு நூல் காவியம் 800
மச்சமுனி வைத்தியம் 800
மச்சமுனி கடைக் காண்டம் 800
மச்சமுனி சரக்கு வைப்பு 800
மச்சமுனி திராவகம் 800
மச்சமுனி ஞான தீட்சை 50
மச்சமுனி தண்டகம் 100
மச்சமுனி தீட்சா விதி 100
மச்சமுனி முப்பு தீட்சை 80
மச்சமுனி குறு நூல் 800
மச்சமுனி ஞானம் 800
மச்சமுனி வேதாந்தம் 800
மச்சமுனி திருமந்திரம் 800
மச்சமுனி யோகம் 800
மச்சமுனி வகாரம் 800
மச்சமுனி நிகண்டு 400
மச்சமுனி கலை ஞானம் 800
மாயாஜால காண்டம்

You may also like...