மதுரை – ஊளி மீன் குழம்பு

ஏஞ்சலின் கமலா அவர்கள் வழங்கிய சுவையான அசைவ உணவு செய்முறை – madurai meen kuzhambu

madurai meen kuzhambu

தேவையான பொருட்கள்

ஊளி மீன் – 1 கிலோ
புளி – ஒரு பெரிய எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் – 30
வெள்ளைப்பூண்டு – 25 பற்கள்
தக்காளி – 1 நறுக்கியது.
மல்லிப் பொடி – 3 தேக்கரண்டி
மிளகாய் பொடி – 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
வெந்தயம் – சிறிதளவு (தாளிக்க)
கடுகு – சிறிதளவு
கறிவேப்பிலை
கொத்துமல்லி இலை
நல்லெண்ணெய் – 2 குழிக் கரண்டி
கல் உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள் பொடி

செய்முறை

மீனை மஞ்சள் தூள் கல் உப்பு போட்டு இரண்டு முறை கழுவி சுத்தப்படுத்தவும். பிறகு மஞ்சள் தூள் உப்பு அதனோடு சிறிதளவு மிளகாய் பொடி சேர்த்து ஒரு அரை மணிநேரம் ஊற வைத்துவிடவும். புளியை கெட்டியாக கரைத்து வடிகட்டி அதனுடன் நீர் சேர்க்கவும். கல் உப்பு, மல்லி மிளகாய் பொடி சேர்த்து கலக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து நல்-எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து உடன் வெந்தயம் சேர்த்து பொரிந்த பின் வெங்காயம் பூண்டு தக்காளி சேர்த்து வதக்கவும் – madurai meen kuzhambu.

நன்கு வதங்கிய பின் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். பிறகு மசாலா கலந்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும். கொதி வந்தவுடன் கறிவேப்பிலையை தூவவும். மீன் குழம்பை மூடி போடாமல் கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து குழம்பு வற்றி வரும் போது மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து குழம்பில் சேர்க்கவும்.

கரண்டி போடாமல் ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு, மல்லி இலைகளைப் போட்டு அலங்கரிக்கவும்.

சுவையான எளிமையான மீன் குழம்பு தயார்.மீன் உடையாமல் இருக்க கரண்டியை தவிர்க்கவும் இட்லி மற்றும் தோசை சப்பாத்திக்கும் பயன்படுத்தலாம். மீதமுள்ள மீன் துண்டங்களை வழக்கம் போல் பொரிக்கவும்.
சூடான சாதத்தை வாழை இலையில் பரிமாறி குழம்பை ஊற்றி பிசைந்து உண்ண ருசி அபாரம்.

குறிப்பு: மண் சட்டியில் வைத்தால் மணமும் ருசியும் அருமை.

– ஏஞ்சலின் கமலா, மதுரை

You may also like...

3 Responses

  1. V.Innocent sasikumar says:

    அருமை கமலி..செய்முறையிலேயே மீன்குழம்பு வாசனை வருகிறது.அருமையான தயாரிப்பு.. நன்றி.

  2. தி.வள்ளி says:

    அசைவ பிரியர்களுக்கு ஆனந்தத்தை கொடுக்கும் ஒரு ரெசிபி. சகோதரி ஏஞ்சலின் கமலாவுக்கு வாழ்த்துக்கள்

  3. Anitha says:

    Simple and Easy recipe super