என் மின்மினி (கதை பாகம் – 47)

சென்ற வாரம் அவன் கண்களில் பொங்கி பெருகும் மகிழ்ச்சியை பார்த்தவாறே கேள்விக்கு கூட செவி சாய்க்காமல் அவன் நினைவுகளில் மூழ்கி மகிழ்ச்சியில் திளைத்து நின்றாள் ஏஞ்சலின் – en minmini thodar kadhai-47

en minmini kathai paagam serial

என்ன கனவா? ஹே ஏஞ்சலின் என்று கனவில் நின்றவளை தோளைத்தட்டி நினைவுக்கு கொண்டு வந்தான் பிரஜின். வெடுக்கென்று கனவில் இருந்து மீண்டவள் ம்ம்ம் சொல்லு, என்ன ஆச்சு, டிரஸ் புடிச்சுருக்கா, மறக்காம நாளைக்கு போட்டுட்டு வா என்று செல்லமாக அவனது மார்பிலே தட்டிவிட்டு நான் கிளம்புறே என்றவாறே அவள் சொன்ன மறுகணம்..,

இதயத்தின் பிறந்தநாளோ

நாளைக்கு ஒரு நாள் மட்டும் லீவ் போட்டுட்டு எங்கேயாவது போயி ஊர் சுத்தலாம்னு இருக்கேன். கூட நீயும் வந்தா நல்லா இருக்கும்… ப்ளீஸ் என்கூட வரீயா என்று செல்லமாக கெஞ்சினான்.

கொஞ்ச யோசிச்சிகிட்டே ம்ம் வரே,ஆனா எங்க கூட்டிட்டு போவேனு சொல்லு என்றாள் ஏஞ்சலின்… பதிலுக்கு அவன்,அது சஸ்பென்ஸ் நாளைக்கு நீ பார்க்கத்தானே போறே என்றவுடன்., சரி சரி அப்போ நான் இப்போ கிளம்புறேன் நாளைக்கு பார்க்கலாம் என்று டாட்டா சொல்லிவிட்டு கிளம்பினாள் ஏஞ்சலின்…

இரவுநேரம் அவரவர்களின் நினைவுகளின் கனவுகளோடு முடிந்து மெதுவாக விடிந்தது. கண்களை தன் கைகளால் கசக்கியவாறே கைபேசியின் முகப்புத்திரையில் உள்ள பிரஜினது புகைப்படத்தை பார்த்து மெல்லியகுரலில் குட்மார்னிங் மை டியர் ஸ்வீட் ஹார்ட், வெரி வெரி ஹாப்பி பர்த்டே.., என்றவாறே அரைதூக்கத்தில் கண்அடித்தாள் ஏஞ்சலின்…

மீளமுடியாதவனாய்

தூக்கம் முழுதும் கலையாத நிலையில் அவனது புகைப்படமும் அவளை பார்த்து கண் அடித்து விட்டு தேங்க் யூ மை டியர் என்று சொல்வது போலே தோன்றியது அவளுக்கு…

உடனே அடே படவா கண்ணா அடிக்குறே, வா வா நேரில் பார்த்துக்குறே என்று தன் கைப்பேசியின் முகப்புத்திரையின் பொத்தானை ஆஃப் செய்து விட்டு படுக்கையினை விட்டு எழுந்து அவனை பார்க்க தயாரானாள் ஏஞ்சலின்…

அதே நேரத்தில் அயர்ந்த தூக்கத்தில் இருந்து மீளமுடியாதவனாய் தேங்க் யூ மை டியர் என்று பேசியபடி மெதுவாக கண்களை திறந்தான் பிரஜின்.. – en minmini thodar kadhai-47

– அ.மு.பெருமாள்

பாகம் 48-ல் தொடரும்

You may also like...