கவிதை தொகுப்பு 49 (போட்டி கவிதைகள்)
நீரோடை நடத்திய கவிதை போட்டியில் கலந்துகொண்ட கவிதைகளில் சில,.. இந்த கவிதை தொகுப்பு வாயிலாக கவிஞர்கள் செ.கலைசெல்வன், அனீஸ் மற்றும் லோகநாயகி ஆகியோரை நீரோடைக்கு அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 49
அசைவத்தின்
அரவணைப்பில்
சைவம் இருக்கும்…
பெயரில் மட்டும் தான் என்றிருந்தேன்…
உயிரிலும் இன்று
நிஜமானதோ!!!
அ”சைவம்”
– லோகநாயகி
பிரபஞ்சம் கண்ட பொய்..
காணாத மெய்..!
பசியெனும் நோயற்றுப்போனால்…
பாசமெனும் நோயொட்டிக்கொள்ளும்..!
இதுபோல..
– அனீஸ், நாகர்கோவில்
காடும் நாடும்
பாயும் புலியும்
மருளும் மானும்
இணைந்து நின்றே
உண்மை சொல்லுது!
புலிக்குப் பசித்தால்
புல்லைத் தின்னாது!
பசியே இல்லாது
வேட்டை ஆடாது!
இச்சை அதிகம்
ஐந்தறிவுக்கு இல்லை!
இயற்கை காட்டினிலே!
பகுத்தறிவு படைத்த
மனிதனுக்கு நாட்டில்
எத்தனை ஆசை!
மண்ணாசை பொன்னாசை
பெண்ணாசை மட்டன்றி
பதவி பொறாமை
மதம் இனம்
ஆணவப் படுகொலை
அப்பப்பா!அப்பப்பா!
பட்டியல் இட்டால்
காகிதம் காணாது!
மனதா!மனிதா!
என்று உணர்வாய்!
இதயம் மீள்வாய்!
– ஜோதி பாய்
புலிமான்
அனல் தகித்த அடர்ந்த வனம்…
அண்டம் தொட்ட அகல மரம்……!
வேட்டையாடி கால் பதித்த வழிகள்….
காணும் இடமெல்லாம் கபால எலும்புகள்….!
ஓங்கி ஒலித்த குரல் உறுமலில்….
காடே கதி கலங்கி நடுங்க….
வந்ததே வங்க புலி….!
ராட்சத தோற்றமும்…
ரத்தம் உரையா பள்ளும்…..
உடல் கிழிக்கும் கூர் நகமும்….
பசிக்கு இறை தோடும் விழியும்….
பார்த்தே புள்ளிமானை…..!
வழி மாறி வந்த மான்…
கருசுமந்து கன்று ஈனும் வேலையில்….பதபதைக்க….
பணிகுடம் உடைந்து பிறந்ததே புது கன்று…
பிரிய மனமின்றி பிள்ளையை விட்டு
பின்னங்கால் தெறிக்க ஓடிய மான்……
கலங்க…..!
பால் அறிய பிள்ளை அருகில்
வந்த புலி பசியாற வாய் நீட்ட…..!
தாய் தானே…
எதிர்நிற்பதென்று கண் விழித்த கன்று…..
புலி முகத்தில் தலை நீவ…
அம்மா என்றழைத்தது…..!
அம்மா என்றே மந்திரமே….
அகிலத்தை வென்றிருமே….!
வேட்டை புலியும் ஒரு தாய்யாற்றே….
இறை மறந்து ஈன்ற கண்றேன
கவ்வி சென்றது தாய் புலி…..
புள்ளி மான் புலிமானாய்….
வளர்ந்தே….
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்….!
ஐந்தறிவு ஜீவன் அதற்கு விதி விளக்கா……!
அன்பாலே…. அனைத்தும்….சாத்தியமே……!
– சிவராஜ் மணிவண்ணன்
ஆறாம்!!!! அறிவு!…
எதிரெதிர்!
உயிர்கள்! – இணைந்ததிங்கே…
எதையோ….??!!!
சொல்லிட!…
இரையை!
தேடும்! – புலியின்…
தோளில்…
இரையே!…
இறையாகி!!! …
இன்புற்றே…
இதுதான்…
அன்பென்றே! – இச்சகத்துக்கு…
இன்! சொல்லாய்! – சொல்கிறதோ?!!!…
ஐந்தறிவிங்கே…
ஆறறிவாய்! – ஆலோசனை
சொல்லுதல்…
கண்டு! – பேறறிவெல்லாம்…
பெருமை! கொண்டது…!!!
அஃறிணை …
எல்லாம்! – அறிவிப்பாய்
சொன்னது!….!
காட்டிற்குள்…
நாங்களெல்லாம்! – கண்ணியத்தான்!!!!
யார்!!.!!!
பதிவோ! – பதிவாகி…
பயங்கரம்!!???
நாங்களெல்லாம்! – என்றே…பதிவாகி விட்ட…
பரிணாமத்தை….!!!
போக்கவே!!!…
பொறுப்பாக….
நாங்களிருவரும்! – நாகரீக…
நடத்தையை!…
படமாக்கி! – படைக்கின்றோம்….
நாங்களே!!!!
இப்படி! – என்றால்…
ஆறறிவின்!!!!
ஆசான்களே!!!!….
அப்போ! – நீங்கள்!!!….
– செ.கலைசெல்வன்
கவிதைகள் அனைத்தும் அருமை ..வித்தியாசமான பார்வைகள் ..வித்தியாசமான கற்பனை.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் ..கதம்பமாய் மணக்கிறது கவிமாலை ..
கவிதைகள் அனைத்தும் அருமை ..வித்தியாசமான பார்வைகள் ..வித்தியாசமான கற்பனை.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் ..கதம்பமாய் மணக்கிறது கவிமாலை ..