கவிதை போட்டி 2021_6

நீரோடை கவிதை போட்டி நான்கு மற்றும் ஐந்து சிறப்பாக நடைபெற்றது, மேலும் முடிவுகளும் வெளியிடப்பட்டன – kavithai potti 6

kavithai potti 6

சமீபத்தில் தங்களை பாதித்த ஏதேனும் ஒரு தலைப்பில் கவிதையாக 20 வரிகளுக்குள் எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம்.

[Comment your Tamil poems to participate] Admin ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வெற்றி பெரும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்

தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 6.

போட்டி ஜூன் 30 வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். ஒரு கவிதைக்கும் இரண்டாம் கவிதைக்கும் ஓரிரு நாட்களாவது இடைவெளி இருக்க வேண்டும். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து ஜூலை முதல் வாரத்தில் அறிவிக்கப்படும்.


குறிப்பு: 1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் 99XXXXX@neerodai.com என்று தங்களின் அலைபேசி (mobile) எண்ணை குறிப்பிட்டு மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும்.

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.

You may also like...

51 Responses

  1. Ushamuthuraman says:

    வைரசும் வாழ்க்கையும் 
    (கவிதைப் போட்டி) 

    வைரசு நம் எதிரி தான் 
    நேற்று இறந்த காலம் 
    இன்றைய நிகழ் காலம் 
    நாளை எதிர்காலம் 
    என்ற முக்காலமும்  சுத்தமான
    வாழ்க்கையில் பயணித்தால் 

    வைரசு நம் எதிரி தான் 
    இயற்கையை  நினைத்து
    செயற்கை மறந்து 
    நாம் நம் வாழ்க்கைப் பாதையில் பயணித்தால் 

    வைரசு நம் எதிரி தான் 
    அது வாழ்வில் அடுத்தவருடன்
    இடைவெளி விட்டு 
    தனி வாழ்க்கைப் பாதையில் பயணித்தால்!

    வைரசு நம் எதிரி தான் 
    அவை நம் இழப்புகளை உணர்ந்து சுத்தத்தமான வாழ்க்கையில் 
    பாதையில் பயணித்தால்! 

    வைரசு நம் எதிரிதான் 
    மாஸ்க் அணிந்து 
    கைகளை அடிக்கடி கழுவி 
    சமூக இடைவெளியை 
    வாழ்க்கையில் கடைப்பிடித்து பயணித்தால் !

    உஷாமுத்துராமன்

  2. Loganayaki says:

    அவன்/ அவள் தோள் சாயும் ஆசை கொண்டேன்…
    அவன்/ அவள் தலை பிடித்து விளையாடும் ஆவல் கொண்டேன்…
    அவன்/ அவள் அன்பு எனக்கு மட்டுமே என்ற எண்ணம் கொண்டேன்…
    அவன்/ அவள் என் மீது காட்டும் பொய்யான கோவத்தை கூட ரசித்தேன்…
    அவன்/ அவள் என் தந்தையின் / தாயின் மற்றொரு உருவமாய் நினைத்தேன்…
    அவன்/ அவள் மடி சாய்ந்து அழ நினைத்தேன்…
    அவன்/ அவள் தாயாய் அல்ல குழந்தை போல் மாறிவிட நினைத்தேன்…

    அவன்/அவள் யார் என கேட்போருக்கு அவன்/ அவள் என் அண்ணன்/ அக்கா என்று சொல்ல நினைக்கிறேன்…
    சொல்லி கொள்ள உறவுகள் கிடைத்தாலும்
    சொந்தம் கொள்ளும் உரிமை எப்போதும் கிடைத்ததில்லை….

    என்னை போல் கூட பிறந்தவர்கள் யாரும் இல்லாதவர்களுக்கு மட்டும் சமர்ப்பணம்

  3. கிளி
    ******

    வார்த்தைகளற்ற
    உன் ஓசையை
    கவிதையாய்
    மொழிபெயர்க்கிறேன்
    உதறிவிடாமால்
    அணைத்துக்கொள்…!
    அருகில் வருவதும்
    விரல்தொடும் தொலைவில்
    விலகி நீ விரைவதும்..!
    விண்ணைமீறி
    நீ விரிவதும்…
    உருகி நான் கரைவதும்..!
    என் கொய்யாமரக்
    கனிகள் பெருகுவதும்
    அதைக்கண்டு நீ
    திணருவதும்..!
    அர்த்தஜாமத்திருடன்
    போல் அத்துமீறி
    நீ நுழைவதும்..!
    அத்தனை கனிகளையும்
    தின்று நீ தீர்ப்பதும்
    என அவ்வளவும்
    அழகாய் நீ செய்யும்
    பகற்கொள்ளை
    ஆமாம்…
    எத்தனை தின்றாய்..!
    எப்படி தெரியும்…!
    சாவகாசமாய்
    அமர்ந்து
    தின்றுதீர்த்த
    கனிகளின்
    கதையை எங்கேனும்
    சொல்லுமா எந்தக்கிளியேனும்..!
    கோலக்கிளி
    கொத்தித்தின்னும்
    அழகிலும்…!
    கொஞ்சும்மொழி
    பேசும் தருணத்திலும்…!
    என் தமிழும் நிலவும்
    தள்ளாடி மயங்குதடி…!
    நீ சுவைத்து
    சுவையேறிய கனியை
    தினம் தினம்
    நான் சுவைத்து
    உன் கோலமொழி
    எனக்கும் வந்ததடி…!
    இனி
    நீ செய்யப்போகும்
    களவுத்தனத்தை
    ரசிக்க நான் இங்கு
    இல்லை என்ற
    உண்மையை
    யார் உனக்கு
    மொழிபெயர்ப்பார்கள்…!
    இனி நான் மெய்யாகவே
    இடைவிடாது கரைத்தபடி
    உனக்காக காத்திருக்கும்
    என் அன்பை
    மெய்யெனக்கொள்வாயாக…!

  4. Srriam Raja says:

    உள்ளே பொதுநலம் வெளியே சுயநலம் இரண்டும் கலந்த கலவை நான்

    அடைக்கலம் தேடும் அண்டை கிருமியை தடுத்து நிறுத்தும் கவசம் நான்

    தனித்து இருக்கும் காதை, மூக்கோடும் வாயோடும் இணைக்கும் பாலம் நான்

    என்னை தந்து உன்னை காக்கும் வீட்டு கருவெப்பேபிள்ளை நான்

    மகனே .. என்னை அணி ; அரை முகம் காட்டு ; நிறை வாழவு உண்டு நிச்சயம்..

    இப்படிக்கு

    முகக்கவசம்

  5. கண்ணீர் துளிகள்…
    🌹🌹🌹🌹🌹🌹
    அன்பாய் யாருமில்லை அழகானபூமியில்..

    வாழும் நாட்களில் இன்பம் இல்லை…

    வாழவேண்டுமென்ற ஆசையும் இல்லை…

    உண்மையாய் வாழ்ந்தாலும்
    எந்த பயனுமில்லை..

    உலகமே ஒருமாயை எனஉணர்த்தி விட்டனர்…

    ஏழைஎன நினைத்து ஏமாந்து போகிறேன்…

    கானல்நீர் உண்மை என நினைப்பவன்…

    அழகான பூமியில் வாழ தகுதியில்லை …

    உள்ளத்தில் உயர்ந்தாலும்
    ஊர் மத்தியில் விழ்ந்துவிட்டேன்..

    உயிர்வாழ ஆசைதான்
    பிறருக்கு உதவியாக…

    கடல் அலைகள் தன்னம்பிக்கையை கற்றுத்தந்தது…

    உளிகள் கொண்டு வறுமையை உடைத்தெறிய ஆசை…

    உயிருடன் இருக்கவும் உறவுகள் மத்தியில்…

    வானளவு உயர்ந்து நிற்க வேண்டும்..

    வசந்தமே எனது வழிகாட்டியாய் வந்துவிடு..!!

    என் பிரபஞ்சத்தின் வானமே எல்லை..!!!

    க.தனபால் மதுரை

  6. A.Umar farook says:

    மனிதம்
    ————
    இறைவன், மனதை கொஞ்சம்
    கண்களால் காணும்படி படைத்திருக்கலாம்…

    இரக்கமற்றவர்கள் ஏற்படுத்திய
    காயங்கள் தெரிந்திருக்கும்,
    காயங்களால் உண்டான
    வலிகளும் புரிந்திருக்கும்.

    சுருங்கச்சொன்னால்
    மனிதன் எடுத்துரைக்காமலேயே
    “மனிதம்” வளர்ந்திருக்கும்…

    – ஏழை மாணவன்

  7. ஞானதேசவி says:

    வருமுன் காத்திடுங்க
    ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
    என்னத்த செய்வேன் நானும் சொல்லுமய்யா/
    நுண்கிருமியாலே ஆத்தாஅப்பனை இழந்துட்டானே
    எந்தோழன் /
    காத்தாயி பெத்த புள்ளையும் போச்சே/
    சேமியா புடிக்கும் வேலை பார்த்த
    நல்லம்மாள்/
    கோலமாவு வித்து சோலிபார்த்த
    கோகிலா /
    கீர வித்து காசுபார்த்த கன்னியம்மா/
    சோப்பு க் கட்டி வித்துத் திரும்புன/
    கடை வீட்டுப் பொண்ணு சோலையம்மா/
    ஆருக்கு ம் இங்கே வேல யில்லயே/
    அரசாங்கப் பணம் மாசத்துல காலி/
    மணியக் காரர் தந்த அரிசியும் காலி/
    உதவும்கரம் தந்த பருப்பும் பத்தலே/
    நோய்நொடி தீர்ந்து போனா சொல்லிடுங்க/
    உழைச்சி நாலு காசு பார்ப்போம்/
    நிம்மதியா பாயில படுத்ததும் தூங்கிடுவோம்/
    இலவசம் வேணாம்னு சொல்லிடுங்க அரசுக்கிட்ட/
    வீட்டுக்கு ஓரு வேல தந்திடுங்க/
    படிக்கற புள்ளைகளுக்கு
    இலவச
    தொலைக்காட்சிப் படிப்பு தந்திடுங்க/ மிஞ்சின உசிரை காப்பாத்தித் தந்திடுங்க
    வருமுன் காத்திடுங்க/
    ஞானதேசவி கடலூர். 607002

    .
    +

  8. வேல் says:

    வெறிச்சோடிய சாலை :

    சாலையோரம் கேட்கும் சத்தம்
    அங்கும் இங்கும் திரியும் யுத்தம்
    கூட்ட நெரிசலில் சிக்கி கொண்டு
    குலுங்கும் பேருந்தில் பயணம் செய்யும் பாதையும் மறந்து போனதே இன்று ….!

    நகர்புற கடைகளில் வாங்கும் பலசரக்கு
    நியாயமான விலையில் பேரம் பேசி வாங்குவது இன்றைய மணிக்கணக்கின் படியே ….!

    வார விடுமுறை நாட்களில் பெறும் சந்தோசத்தின் ஒளி விளக்காய்
    அணி வகுப்பின் போது செல்லும் பயணத்தின் தொடர்ச்சியாய் மகிழ்ச்சியில் மழலை மனதை மயங்க வைக்கும் நாட்களை எண்ணி பார்ப்பது அன்றைய சந்தோசத்தின் கனவு அலைகளாய் ….!

    பாதையை கடந்து செல்ல ஒரு அழகான
    பச்சிளங் குழந்தை
    பட்டு போல் மென்மையான குரலின் ஓசையை கேட்ட ஞாபகம் நெஞ்சில் விதைந்த தருணமாய் இன்று….!

    கல்வி பயில பாடகச்சாலை இல்லை என்ற நிலையின் போது
    நிகழ் நிலை வகுப்பு அறிமுகம் ஆனது
    இன்று அதுவும் இடைவெளியின் தூரமாய் பயணம் தொடர்கின்றதே…!

    வேல்…

  9. Ragavan says:

    *உலக சுற்றுப்புற சூழல் தினம்*

    புகையிலை புகை நச்சு
    ஆலை வெளியிடும் புகை கேடு
    வாகனம் வெளியிடும் புகை மாசு
    புழுதி பரவல் தரும் தூசு

    ஏசி வெளியிடும் அமோனியா
    தூசால் வரும் நோய் ஆஸ்துமா
    ஓசோன் படலத்தில் ஓட்டை
    ஆக்சிஜன் பற்றாக்குறை அவதி

    ஆற்றில் குப்பையை கொட்டாதே
    கடலை கழிவுநீரால் நிரப்பாதே
    வயல் வெளிகளை விற்காதே
    நீர்நிலைகளை வீணாக்காதே

    மரங்கள் நட ஊக்குவிப்போம்
    இயற்கை காற்றை சுவாசிப்போம்
    ஏரி குளங்களில் நீர் தேக்கி
    விவசாயம் வளர உதவுவோம்

  10. வீரமணி says:

    கனவு வியாபாரி

    கவிதைக்கு பதில்
    கனவுகளை தரும் வியாபாரி
    கனவில் வந்தான்
    என் கவிதைக்கு விலை பேசுகிறான்
    ஒரு கவிதைக்கு பத்து கனவுகள் தா என்கிறேன்
    அவனோ பத்து கவிதைக்கு ஒரு கனவு என்கிறான்
    இறுதியில் ஐந்து கவிதைக்கு ஒரு கனவு என்று பேரம்பேசி முடிக்கிறேன்
    அந்த ஒரு கனவு
    நல்ல கனவா?
    கெட்ட கனவா?
    என்பதை கேட்க மறந்துவிட்டேன்
    இனி உறங்கி தான் பார்க்க வேண்டும்….

  11. வீ.ராஜ்குமார் says:

    ‘அருகில் செல்லவே அஞ்சும்
    அரிமாவுக்கே கொரானாவைப் பரப்பினாரெனில் ஆங்குள்ள
    அப்பாவி விலங்குகளின் நிலையாதோ! தப்பாது
    தடுப்பூசி போட்டிடவும் வகையிலையே! அய்யகோ
    தமிழக அரசின் தர்மசங்கடம்!

  12. மா கோமகன் says:

    போட்டிக் கவிதை *ஆண்னென்ன பெண்னென்ன?*

    அன்று
    பிறப்பின் முடிவறிய பேருவுவகையாய் காத்திருந்த காலம் மாறி
    இன்று
    கள்ளிப்பால் ஊற்றிய
    காலமழிந்ததால்
    ஆண்னென்ன பெண்னென்ன

    அன்று
    சாத்திர சம்பிரதாயம் கூறி மறுக்கப்பட்ட கல்வி சுதந்திரத்தில்
    இன்று
    மாற்றம் பல வந்திட்ட
    காரணத்தாலே
    ஆண்னென்ன பெண்னென்ன

    அன்று
    அத்துணை பணிகளிலும் சமத்துவமற்ற நிலை இருந்த காலம் மாறி
    இன்று
    எல்லாப்பணிகளும் ஏற்றே
    நடத்தும் காரணத்தாலே
    ஆண்னென்ன பெண்னென்ன

    அன்று
    சாதிய கோட்பாட்டை உயர்த்திப்பிடிக்க கல்யாண காட்சிகளென்ன இருந்த காலம் மாறி
    இன்று
    காதல் திருமணங்கள்
    வரவேற்பு பெற்றதாலே
    ஆண்னென்ன பெண்னென்ன

    இவ்வாறாய் இன்னும் பல பிரிவினைகள் அங்கொன்று இங்கொன்றாய் இன்னும் மறைமுகமாய் இருந்திட்டாலும்

    அன்றும் இன்றும் என்றும்

    இயற்கை சீற்றம் வந்து அழியும் போதும்

    ஆழிப்பேரலை ஒன்று எழுந்த போதும்

    கொடுந்தொற்று கொரோணா போல நோய் நொடிகள் வந்தபோதும்

    இறைவனவன் எழுதி வைத்த இறுதி என்னும் முடிவினை அடையும் போதும்

    ஆண்னென்ன
    பெண்னென்ன

    எல்லாம் ஒர் நிறைதானே

    மா கோமகன்

  13. ஸ்டாலின் ஆண்டனி says:

    சமீபத்ய துயரம்

    கெஞ்சிய கைகலுக்கு விடை சொல்லாமல்
    சென்ற தருனம்
    அவ்வப்போது நெருடலுடன் கடக்கிறேன்
    அந்த நினைவை.

    மனிதம் மாறியதா? என் மனம் மாறியதா?
    புலப்படவில்லை.

    இரு வினாடி காட்சி, இன்றளவும்
    வதைக்கிறது
    செய்தது நானென்று.

    மரத்தடி நிழலில்
    கவசம் இல்லா முதுவன்.
    தொலைவில்
    நான் மட்டும்..

    வழி பிறந்தது என்ற கண்ணுக்கும்
    நோய் வருகிறது என்ற கண்ணுக்கும்
    நடந்த போர்.

    அந்த வெற்றிக்கு இன்றளவும்
    மன்னிப்பு கேட்கும்
    நான்.

    இன்றும் இதயம் கணக்கிறது
    நினைக்கையிலே.

    விலகி நின்று கொரானாவில்
    தப்பினேன்
    மனிதத்தில் மாய்ந்தேன்.

    தவறை சரி செய்ய
    எவரிடம் முறையிட…

    சமர்ப்பணம்
    என்னைபோல் ஒருவனுக்கு.

  14. ஸ்டாலின் ஆண்டனி says:

    சமீபத்ய துயரம்.

    கெஞ்சிய கைகளுக்கு விடை சொல்லாமல்
    சென்ற தருணம்
    அவ்வப்போது நெருடலுடன் கடக்கிறேன்
    அந்த நினைவை.

    மனிதம் மாறியதா? என் மனம் மாறியதா?
    புலப்படவில்லை.

    இரு வினாடி காட்சி, இன்றளவும்
    வதைக்கிறது
    செய்தது நானென்று.

    மரத்தடி நிழலில்
    கவசம் இல்லா முதுவன்.
    தொலைவில்
    நான் மட்டும்..

    வழி பிறந்தது என்ற கண்ணுக்கும்
    நோய் வருகிறது என்ற கண்ணுக்கும்
    நடந்த போர்.

    அந்த வெற்றிக்கு இன்றளவும்
    மன்னிப்பு கேட்கும்
    நான்.

    இன்றும் இதயம் கணக்கிறது
    நினைக்கையிலே.

    விலகி நின்று கொரானாவில்
    தப்பினேன்
    மனிதத்தில் மாய்ந்தேன்.

    தவறை சரி செய்ய
    எவரிடம் முறையிட…

    சமர்ப்பணம்
    என்னைப்போல் ஒருவனுக்கு.

  15. வீ.ராஜ்குமார் says:

    ‘ஆட்சியே வேணா மென இருவரும்
    அலறி யோட்டம் பிடித்தாலும் ஆச்சரியமில்லை!
    கல்விக்கண் திறந்த
    காமராசரே வந்தாலும்
    கலங்கித்தான் போவார் வேணுமா? வேண்டாமா?
    பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு!

  16. MaheswaranGovindan says:

    மரண வாக்குமூலம்

    இங்கு உச்சரிக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும்
    ஓராயிரம் முறை உச்சரிக்கப்பட்ட பின்பே
    உருவம் கொண்டிருக்கின்றன….
    ஏனென்றால் என் வார்த்தைகள் கூட உன்னை
    காயம் படுத்திவிட கூடாதென்பதால் …
    அதிகம் பேசியதில்லை உன்னிடம்
    ஆனால் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன் …
    மனதிற்குள் கதை பல பேசி,
    மறுமுனையில் மறுதலிக்காமல் நீ ஏற்பதாய் எண்ணி
    மனம் மகிழ்ந்து போயிருக்கிறேன் …
    கனவுகளில் காதலை சொல்லி ,
    காதலியாய் உன் கைக்கோர்த்து
    கனதூரம் கடந்து போயிருக்கிறேன் …
    ஆனால் நிசத்தில் ஏராளமான முறை முயன்றும்
    முடியாமல் போனது .
    ஏனோ தெரியவில்லை , என் ஏக்கங்கள் எல்லாம்
    ஏமாற்றமாய் தான் போயின …
    எல்லாம் முடிந்த பின்பும்
    எந்தவித குறையும் இன்றி ,
    இதயத்தோடு இன்னும் இருக்கிறது
    என் காதல் …
    தகப்பனாகி , தலை நிரைத்து தாத்தாவாகி,
    தள்ளாத வயது ஆன போதும் ,
    தரம் குறையாமல் ததும்பி நிற்கிறாய்
    என் காதலாய் …
    வாழும் போது ஏனோ ,
    வார்த்தையை வார்க்க முடியமால்
    வருத்தங்களோடு வாழ்ந்துயிருக்கிறேன் …
    உயிர் போகும் தருவாயிலாவது
    உள்ளம் எல்லாம் நிறைந்த என் காதலை
    உன்னிடம் சொல்லாது போனால்
    உறக்கம் கொள்ளாது போகும்
    என் ஆன்மா …
    சாகும் போது ஏனும்
    சங்கடங்களை கலைந்து , சந்தோசமாய்
    சாவை சந்திக்க , சந்தேகமின்றி இது
    இதமாய் அமையும் என்றெண்ணியே
    இந்த முயற்சி …
    நான் இருக்கும் போது நீ பாடும்
    இன்னிசை பாவாக இது இல்லாது போயிடினும்
    என் இறப்புக்கு நீ பாடும் இரங்கற்பாவாக
    இது அமைந்திடினும் சந்தோசமே
    எனக்கு …
    இவன்
    மகோ ( மகேஸ்வரன்.கோ)

  17. வீ.ராஜ்குமார் says:

    ‘வைகறையில் சேவலுக்கு முன்னெழுந்து
    அகவும் மயிலையோ
    கரையும் கரிச்சானையோ
    நாம் கவனத்தில் கொள்வதில்லை!
    இழுத்துப் போர்த்துகிறோம் செவிகளை! சேவலுக்கே
    வழுத்துப் பாடுகிறோம் கவிகளை!’

  18. Balakrishnan. S says:

    I am very happy to mingle with “NEEORDAI”

  19. Maheswaran says:

    மாறிப்போன மனித வாழ்க்கை …

    கூடி குலைந்து குதூகலமாய்
    திரிந்த மக்கள் வாழ்வு கூனிக்குறுகி
    கூண்டில் அடைபட்ட கிளியானது …

    பருப்பு , குழம்பு , பலகாரம்
    என பகிர்ந்துண்ட பக்கத்து வீடும்
    பயமாய் போனது …

    ஆருயிர் நட்பு எல்லாம்
    அவரவர் உயிர் பயம் கொள்ள
    எட்டமாய் அகன்று நின்றது …

    கட்டி தழுவி திரிந்த
    கணவன் மனைவி மக்கள்
    எல்லோரும் கலவரமாய் எட்டி
    நின்னு பேசுது …

    காசு பணம் எனத்தேடி திரிந்த
    மக்கள் காத்துக்கு காசு கொடுத்தும்
    காப்பாத்த யாரும் இன்றி
    கண்மூடி கிடக்குது …

    எதற்கும் நேரம் இன்றி
    காலில் சக்கரம் கொண்ட மக்கள்
    கடைசியாய் முகம் பார்க்க
    யாரும் இன்றி அனாதையாய்
    அமைதி கொள்ளுது …

    எல்லாம் தெரிந்தாய் எக்காளம்
    செய்த மக்கள் என்ன செய்வதென
    எதுவும் புரியாமல் இதயம்
    குலைந்து போனது …

    எல்லாம் மாறிப்போனது ,
    ஏனோதானோ வாழ்க்கை
    எதுவும் பிடிப்பின்றி…

    பாசமும் நேசமும் பரவலாய்
    பார்த்த மக்கள் , பாவி கொரோனவால்
    பார்ப்பது அரிதானது …

    எல்லாம் தொலைத்தப்பின்பு
    எதைத்தேடி ஓடும் வாழ்க்கை???
    எவரோடு துணைக்கொண்டு ???…

    இவன்
    மகேஸ்வரன் .கோ ( மகோ)

  20. பாவலர் கருமலைத்தமிழாழன் says:

    வேண்டியோர்க்குத் தருவதற்கே
    பாவலர் கருமலைத்தமிழாழன்

    அன்புநண்பன் அவசரமாய் ஓடி வந்தே
    —அழுகின்ற முகத்தோடே என்னைப் பார்த்து
    உன்னைத்தான் நம்பிவந்தேன் இல்லை யென்று
    —உரைத்திடாதே காய்ச்சலிலே மயங்கி யுள்ளாள்
    என்குழந்தை கையிலொரு காசு மில்லை
    —எனக்கின்று நீயுதவி செய்ய வேண்டும்
    என்றேந்தி நின்றவனின் கரத்தில் நானோ
    —எடுத்தளித்தேன் ஆயிரமாம் தாளை அன்று !

    சிலநாள்கள் சென்றபின்பு சாலை யோரம்
    —சிற்றுண்டிக் கடையருகில் அவனைப் பார்த்தேன்
    நலமாக இருக்கிறாளா உன்கு ழந்தை
    —நட்போடு நான்கேட்டே தேநீர் தந்தேன்
    பலமாகத் தலையாட்டித் தேநீர் தன்னைப்
    —பருகியவன் ஊர்கதைகள் பேசி யப்பின்
    செலவுக்கு நான்கொடுத்த பணத்தைப் பற்றிச்
    —செய்தியொன்றும் சொல்லாமல் சென்று விட்டான் !

    ஆண்டொன்று சென்றபின்பும் பலநாள் பார்த்தும்
    —அவன்பெற்ற பணம்பற்றிப் பேச வில்லை
    தூண்டிலில்மீன் பிடிப்பதைப்போல் நான்பி டித்தே
    —துடிப்பாக நான்கொடுத்த பணத்தைக் கேட்க
    ஈண்டுனக்குச் சொல்கின்றேன் உன்னி டத்தில்
    —இருப்பதிகம் இருந்ததாலே எனக்க ளித்தாய்
    வேண்டியது போகமீதி வைத்தி ருப்போர்
    —வேண்டியோர்க்குத் தருவதற்கே என்றான் சென்றான் !

    (என்னைப் பாதித்த நிகழ்வினைக் கவிதையாக்கியுள்ளேன்.)
    பாவலர் கருமலைத்தமிழாழன், தொலைப்பேசி எண்- 9443458550
    மின்னஞ்சல்- karumalaithamizh@gmail.com

    2gmail.com

  21. பாவலர் கருமலைத்தமிழாழன் says:

    வேண்டியோர்க்குத் தருவதற்கே

    பாவலர் கருமலைத்தமிழாழன்

    அன்புநண்பன் அவசரமாய் ஓடி வந்தே

    —அழுகின்ற முகத்தோடே என்னைப் பார்த்து

    உன்னைத்தான் நம்பிவந்தேன் இல்லை யென்று

    —உரைத்திடாதே காய்ச்சலிலே மயங்கி யுள்ளாள்

    என்குழந்தை கையிலொரு காசு மில்லை

    —எனக்கின்று நீயுதவி செய்ய வேண்டும்

    என்றேந்தி நின்றவனின் கரத்தில் நானோ

    —எடுத்தளித்தேன் ஆயிரமாம் தாளை அன்று !

    சிலநாள்கள் சென்றபின்பு சாலை யோரம்

    —சிற்றுண்டிக் கடையருகில் அவனைப் பார்த்தேன்

    நலமாக இருக்கிறாளா உன்கு ழந்தை

    —நட்போடு நான்கேட்டே தேநீர் தந்தேன்

    பலமாகத் தலையாட்டித் தேநீர் தன்னைப்

    —பருகியவன் ஊர்கதைகள் பேசி யப்பின்

    செலவுக்கு நான்கொடுத்த பணத்தைப் பற்றிச்

    —செய்தியொன்றும் சொல்லாமல் சென்று விட்டான் !

    ஆண்டொன்று சென்றபின்பும் பலநாள் பார்த்தும்

    —அவன்பெற்ற பணம்பற்றிப் பேச வில்லை

    தூண்டிலில்மீன் பிடிப்பதைப்போல் நான்பி டித்தே

    —துடிப்பாக நான்கொடுத்த பணத்தைக் கேட்க

    ஈண்டுனக்குச் சொல்கின்றேன் உன்னி டத்தில்

    —இருப்பதிகம் இருந்ததாலே எனக்க ளித்தாய்

    வேண்டியது போகமீதி வைத்தி ருப்போர்

    —வேண்டியோர்க்குத் தருவதற்கே என்றான் சென்றான் !

    (என்னைப் பாதித்த நிகழ்வினைக் கவிதையாக்கியுள்ளேன்.)
    பாவலர் கருமலைத்தமிழாழன், தொலைப்பேசி எண்- 9443458550
    மின்னஞ்சல்- karumalaithamizh@gmail.com

  22. வீ.ராஜ்குமார் says:

    #கண்ணீர்_அஞ்சலி! 😢

    #தூரிகை_உதிர்ந்தது!

    இளையராஜாவே!
    அபூர்வ சித்திரக்காரரே!
    உமது சித்திரங்களைப் பயன்படுத்திப்
    பலனடைந்த பலபேரில் நானும் ஒருவனய்யா!
    மென்பொருளில் வடிக்கப்பட்ட சித்திரங்களோ எனநான்
    வண்சிந்தனை கொண்டேனே!
    உமது கைதீட்டிய எண்ணெய் ஓவியங்கள்
    என்னை மெய்தீட்டி மயங்கச் செய்தனவே!
    நீ படைத்தவை உயிர் ஓவியங்கள்!
    உலகுளவும் வாழும் அக் காவியங்கள்!

  23. தலைப்பு__
    எப்போ சுதந்திரம்
    கொத்தடிமைகளுக்கு

    நாங்கள்வாழத்தான் பிறந்தாட்சி
    வலியோடு ஏன்?
    இந்த வறுமைகாட்சி???

    ஓசியிலே சோறு போட
    யாரும் இல்லை
    பக்கத்திலே உக்காந்து பேசி அனைக்க ஓரு நாதியும் இல்லை❌????

    நீ தேடும் சொந்தமோநெடுதொலைவு போயாட்சி????

    சுகம் தரும் சுழலும்சுற்றி சுற்றி மாற்றி அமைச்சாட்சி???

    அருள் தரும்அன்பனையே!! (God)இடம் மாறி இடம் தேடி ஓடவச்சாட்சி????

    ?எதிர்பார்த்த ஆற்றலும்அடிமையாக யாருக்கோ கோவணமாட்சி??

    ?உங்களுக்காக எட்டி எட்டி உதைக்கும் கூட்டமடா நாங்கள்எங்களுக்கோ இறங்க மறுக்குது ஏணோ!!!!

    பாட்டாளிகளாய் வாழும் கூட்டம் நாங்கள்!!!!

    ஏணோ?எங்கள் ஏட்டு படிப்பை எட்டி உதைக்கும் கூட்டமாய் மாறியது நீங்கள்?ஏணோ?

    பகுத்தறிவு கருத்தை சொல்ல இங்கே இன்னும் யாரும் பிறக்கவில்லை??

    பாவி பய கூட்டம்கல்ல நம்பி நம்பி கருத்தே போயாட்சி??

    ஆணி வேராய் படர்ந்த கூட்டமொன்று அடிமையாகி அமிழ்ந்தே போகுதய்யா ??

    அதிகார குரலை எண்ணி எண்ணி!!போராடும் தன்னிலை மறந்தாட்சிதனிமை எனும் நோய் வந்து அதிகநாட்கள் நீண்டாட்சி???

    இரவு தூக்கம் கலைந்து போயாட்சிவணக்கம் சொல்லி சொல்லி கைகள் இரண்டும் வளைந்தே வடுவாட்சி??

    ஓவ்வொரு பிஞ்சும் பொதிகளை சுமக்குதடிபொருமையாய் புலன்களுக்குள் போதனைகள் செல்லாமல்எம் இனத்தை போதையிலே ஆழ்த்துதடி ???

    எங்களை நாங்களேமறைத்து ஒளித்து வாழ பழகியாட்சி ??

    மாற்றம் வரும் சொல் எங்கே என்று இங்கேயே தேடுது எங்கள் மனசாட்சி??

    ?கூடி வாழ தேடுது இங்கே நடக்கும் அவலகாட்சியால்

    ஒழித்து கட்ட ஓலமிடுது இங்கே நடக்கும் மறையாட்சியால் (வேதம்)

    இன்பம் தொட்டால் எதிரிகளாட்சி!துன்பம் மட்டுமே அன்யோன்யமாட்சி!!

    அருவியில் மீன்கள் தீண்டகுருவிகள் ஓலமிட்டு சாட்சிகளாட்சி??

    படிப்பும் பாதியிலேயே பிஞ்சுகளை நிறுத்தியாட்சிஇங்கேபாசாங்கு காட்டும் வேலைகள் எல்லாம் நியாயத்தோடு நடந்தேரியாட்சி??

    காகித படிமங்கள் ஆங்காங்கே படிந்தாட்சிஎம் கைகளில் சில்லறைகளோ தேடி வர ரொம்ப நாளாட்ச்சி??

    சுகங்கள் என்னோடு வாழ திமிராட்சிஅமைதி எங்கே என இறுக்கம் பதில் கூற மறுத்தாட்சி???

    வாழ்த்துகளும் எனை அண்ட தீண்டாமையாட்சிதீர்வுகள் தீருமே என்று நிர்கதியாய் நின்னாட்சி??

    வாழையாய் தலைத்தோங்க மூன்று குட்டிகள் போட்டாச்சிமுச்சந்தியிலே நான் மட்டும் (புன்னை) வழை மரமாய்வழக்காட வலியோடு வம்பிழுத்தாட்சி?

    ?நான் இருப்பது எல்லோரும் மறந்தாட்சிகாலை பொழுது என்னுள் இருந்து தூரமறைந்தே போயாட்சி??

    கதர் வேடமிட்டு சுதந்திரம் மீட்டாச்சிதுரோகம் வேஷம் போட்டு நடுவிலே எங்களையும் கெடுத்தாட்சிஉடைகள் ஏதும் இல்லாமல் கோவணத்தோடு சுற்றி வர நீங்கள் மட்டுமே சாட்சியாச்சி????

    பாதி பகலை கல்லை எண்ணியே ஏமாந்தே போயாட்சிஏமாற்றமே மீதி பகலிலும் மிஞ்சியாட்ச்சி??

    எமக்காக வழக்காட வந்தவனெல்லாம்கொலு(சு) சத்தத்தினாலும்கொடியவனின் உண்டியல் சத்த்தினாலும் குழைந்து குழைந்தே போனானே!!

    !நான் செய்யும் கல்லோஅதில் உறங்கும் மண்ணையோ அரும்பொருள் என்று நினைத்து வாழ்ந்தேனே!!!நான் அயர்ந்து ரொம்ப நாளாச்சிநாட்களும் நீண்டு கொண்டே அடிமை என்ற பெயரும் பரவியாச்சி!!!

    பொழுதையும் நீட்டிகொள்ளஇயற்கையாகவே சமிக்கைகள் உங்களுக்குள் வந்தாட்ச்சி????

    எம்!!கதையை கேட்க எந்த நாசி துளைக்கும் மாறி மாறி அளவுகள்
    ஏணோ குறைஞ்சாட்சி???

    ஓவ்வொரு முழக்கமாய் அங்காங்கே வந்தாட்ச்சிஎதிர்வினை ஆற்ற வரும் வார்த்தைகளோ கடுமையாட்சி??

    இனி இருப்போம் ஓர் உயிராய்
    ஒதுங்கட்டும்

    அவண் நாடித்துடிப்புகள்உறங்கட்டும் எதிர்வினை கண்கள்முடியும் வரை போராடி வீழ்வோம்
    இல்லையேல்!

    ஓவ்வொருவராய் வீழ்ந்து
    விதையாய் முளைப்போம்!

    விதையாய் முளைப்போம்!!

    நியாயங்கள் ஓவ்வொரு வீதியிலும்விதியென
    மாறட்டும்

    நிம்மதிகள் யாருக்கும் லாபம் இல்லாமல்தரநாணயத்தோடு
    தரபடட்டும்???

    கொத்தடிமைகளோ??

    சுயமாய் உறங்க
    சுகமாய் உறங்க
    முன்வரட்டும்வியர்வைகள்

    வேதனைகள் இல்லாமல் வெளியே சிந்தட்டும்……! கலையரசன்.ம

    தலைப்பு___
    எப்போ சுதந்திரம்
    கொத்தடிமைகளுக்கு

    நாங்கள்வாழத்தான் பிறந்தாட்சி
    வலியோடு ஏன்?
    இந்த வறுமைகாட்சி???

    ஓசியிலே சோறு போட
    யாரும் இல்லை
    பக்கத்திலே உக்காந்து பேசி அனைக்க ஓரு நாதியும் இல்லை❌????

    நீ தேடும் சொந்தமோநெடுதொலைவு போயாட்சி????

    சுகம் தரும் சுழலும்சுற்றி சுற்றி மாற்றி அமைச்சாட்சி???

    அருள் தரும்அன்பனையே!! (God)இடம் மாறி இடம் தேடி ஓடவச்சாட்சி????

    ?எதிர்பார்த்த ஆற்றலும்அடிமையாக யாருக்கோ கோவணமாட்சி??

    ?உங்களுக்காக எட்டி எட்டி உதைக்கும் கூட்டமடா நாங்கள்எங்களுக்கோ இறங்க மறுக்குது ஏணோ!!!!

    பாட்டாளிகளாய் வாழும் கூட்டம் நாங்கள்!!!!

    ஏணோ?எங்கள் ஏட்டு படிப்பை எட்டி உதைக்கும் கூட்டமாய் மாறியது நீங்கள்?ஏணோ?

    பகுத்தறிவு கருத்தை சொல்ல இங்கே இன்னும் யாரும் பிறக்கவில்லை??

    பாவி பய கூட்டம்கல்ல நம்பி நம்பி கருத்தே போயாட்சி??

    ஆணி வேராய் படர்ந்த கூட்டமொன்று அடிமையாகி அமிழ்ந்தே போகுதய்யா ??

    அதிகார குரலை எண்ணி எண்ணி!!போராடும் தன்னிலை மறந்தாட்சிதனிமை எனும் நோய் வந்து அதிகநாட்கள் நீண்டாட்சி???

    இரவு தூக்கம் கலைந்து போயாட்சிவணக்கம் சொல்லி சொல்லி கைகள் இரண்டும் வளைந்தே வடுவாட்சி??

    ஓவ்வொரு பிஞ்சும் பொதிகளை சுமக்குதடிபொருமையாய் புலன்களுக்குள் போதனைகள் செல்லாமல்எம் இனத்தை போதையிலே ஆழ்த்துதடி ???

    எங்களை நாங்களேமறைத்து ஒளித்து வாழ பழகியாட்சி ??

    மாற்றம் வரும் சொல் எங்கே என்று இங்கேயே தேடுது எங்கள் மனசாட்சி??

    ?கூடி வாழ தேடுது இங்கே நடக்கும் அவலகாட்சியால்

    ஒழித்து கட்ட ஓலமிடுது இங்கே நடக்கும் மறையாட்சியால் (வேதம்)

    இன்பம் தொட்டால் எதிரிகளாட்சி!துன்பம் மட்டுமே அன்யோன்யமாட்சி!!

    அருவியில் மீன்கள் தீண்டகுருவிகள் ஓலமிட்டு சாட்சிகளாட்சி??

    படிப்பும் பாதியிலேயே பிஞ்சுகளை நிறுத்தியாட்சிஇங்கேபாசாங்கு காட்டும் வேலைகள் எல்லாம் நியாயத்தோடு நடந்தேரியாட்சி??

    காகித படிமங்கள் ஆங்காங்கே படிந்தாட்சிஎம் கைகளில் சில்லறைகளோ தேடி வர ரொம்ப நாளாட்ச்சி??

    சுகங்கள் என்னோடு வாழ திமிராட்சிஅமைதி எங்கே என இறுக்கம் பதில் கூற மறுத்தாட்சி???

    வாழ்த்துகளும் எனை அண்ட தீண்டாமையாட்சிதீர்வுகள் தீருமே என்று நிர்கதியாய் நின்னாட்சி??

    வாழையாய் தலைத்தோங்க மூன்று குட்டிகள் போட்டாச்சிமுச்சந்தியிலே நான் மட்டும் (புன்னை) வழை மரமாய்வழக்காட வலியோடு வம்பிழுத்தாட்சி?

    ?நான் இருப்பது எல்லோரும் மறந்தாட்சிகாலை பொழுது என்னுள் இருந்து தூரமறைந்தே போயாட்சி??

    கதர் வேடமிட்டு சுதந்திரம் மீட்டாச்சிதுரோகம் வேஷம் போட்டு நடுவிலே எங்களையும் கெடுத்தாட்சிஉடைகள் ஏதும் இல்லாமல் கோவணத்தோடு சுற்றி வர நீங்கள் மட்டுமே சாட்சியாச்சி????

    பாதி பகலை கல்லை எண்ணியே ஏமாந்தே போயாட்சிஏமாற்றமே மீதி பகலிலும் மிஞ்சியாட்ச்சி??

    எமக்காக வழக்காட வந்தவனெல்லாம்கொலு(சு) சத்தத்தினாலும்கொடியவனின் உண்டியல் சத்த்தினாலும் குழைந்து குழைந்தே போனானே!!

    !நான் செய்யும் கல்லோஅதில் உறங்கும் மண்ணையோ அரும்பொருள் என்று நினைத்து வாழ்ந்தேனே!!!நான் அயர்ந்து ரொம்ப நாளாச்சிநாட்களும் நீண்டு கொண்டே அடிமை என்ற பெயரும் பரவியாச்சி!!!

    பொழுதையும் நீட்டிகொள்ளஇயற்கையாகவே சமிக்கைகள் உங்களுக்குள் வந்தாட்ச்சி????

    எம்!!கதையை கேட்க எந்த நாசி துளைக்கும் மாறி மாறி அளவுகள்
    ஏணோ குறைஞ்சாட்சி???

    ஓவ்வொரு முழக்கமாய் அங்காங்கே வந்தாட்ச்சிஎதிர்வினை ஆற்ற வரும் வார்த்தைகளோ கடுமையாட்சி??

    இனி இருப்போம் ஓர் உயிராய்
    ஒதுங்கட்டும்

    அவண் நாடித்துடிப்புகள்உறங்கட்டும் எதிர்வினை கண்கள்முடியும் வரை போராடி வீழ்வோம்
    இல்லையேல்!

    ஓவ்வொருவராய் வீழ்ந்து
    விதையாய் முளைப்போம்!

    விதையாய் முளைப்போம்!!

    நியாயங்கள் ஓவ்வொரு வீதியிலும்விதியென
    மாறட்டும்

    நிம்மதிகள் யாருக்கும் லாபம் இல்லாமல்தரநாணயத்தோடு
    தரபடட்டும்???

    கொத்தடிமைகளோ??

    சுயமாய் உறங்க
    சுகமாய் உறங்க
    முன்வரட்டும்வியர்வைகள்

    வேதனைகள் இல்லாமல் வெளியே சிந்தட்டும்……!
    ம. கலையரசன்.

  24. Maheswaran.G says:

    வாழ்க்கை வாழ்வதற்கே …
    வாழ்க்கை ஒரு கடல் , கடல் அலைதனை
    அதன் போக்கில் அரவணைத்து
    உற்சாகமாய் நீந்த
    கடலை கடப்பது எளிதாகும் .

    அது போல் தான் வாழ்க்கையும் ,
    வாழ்க்கையை அதன் போக்கில் வாழ
    பழகி கொண்டால் வாழ்வு வளமாகும் .

    உடல் பாகம்தனை உள் சென்று
    உருகுலைக்கும் நுண்கிருமி ,
    உள்நின்று உபத்திரம் செய்யும்.
    பாகம்தனை புறம் தள்ள , உடல் புத்தியுயிர் பெரும் .

    பாகம் பறி போகுதே என பதறினால் ,
    பற்றி கொண்ட நுண்கிருமி மொத்த
    உடலையும் பாலி வாங்கும் .

    அதுபோல் உள்நின்று உற்சாகத்தை ,
    உறக்கத்தை கலைத்து ,
    உன் நிம்மதி தனை கொல்லும்
    காயங்களை , கலக்கங்களை புறம் தள்ள ,
    வாழ்க்கை வசந்தம் ஆகும்

    அகற்றிட அல்லாமல் அழுது புலம்பினால் ,
    அது அறக்கம்மின்றி ஆள் கொல்லும் ….

    உள்ளம் குலைந்து , உற்சாகம் இழந்து ,
    உன்னை காயம் செய்து கலங்க வைத்ததை
    நினைத்து உன் வாழ்வை தொலைக்காதே …

    காலங்கள் மாறும் , காட்சிகளும் மாறும் ,
    காட்சி மாறும் போது காலம் சுழற்சி
    கொண்டு கடந்த காலத்தை
    களித்திருக்க கையில் தராது .

    வாழ்க்கை தரும் வலி தன்னை வாஞ்சையாய்
    வாரி அணைத்துக்கொள்ள ,
    அதன்பால் ஆட்கொண்ட காயம்
    அதனை கட்டி அணைக்க ,
    ஆழ்மனதை ஆட்டுவித்த ஆரா ரணம்
    அதனை ஆசையாய் அரவணைக்க ..
    அது தன்னையும் , தந்தவனையும்
    தடி கொண்டு தாக்கி தறிகெட்டு ஓட வைக்கும் …

    உழைப்பவனுக்கு வியர்வை ஒன்றும் புதிதில்லை ..
    ஓடுபவனுக்கு தூரம் என்றும் பயமில்லை …
    நீந்த தெரிந்தவனுக்கு கடல் ஒன்றும் ஆழம் இல்லை …
    புன்னகை பூப்பவனுக்கு புண்கள் என்றும் வலி இல்லை …
    வாழ தெரிந்தவனுக்கு வலிகள் என்றும் தடை இல்லை …

    வலிகளை பார்த்து சிரிக்க பழகு ,
    எது வந்தாலும் , எவர் தடுத்தாலும் எதிர்த்து சிரி …
    உற்சாகமாய் , உத்வேகமாய் உன்வாழ்வை உனதாய் வாழு ,
    உனக்கான கதவு திறக்கும் , அது முன்பு எப்போதும் இருந்ததை விட ,
    உண்மையான இன்பத்தை தரும் …

    நான் ஒன்றும் முனிவன் இல்லை ,
    முதுமைக்கு முன் போனவன் இல்லை ,
    ஆழ்மனது ஆர்ப்பரிக்க , அடிபட்டு , அழுது , புலம்பி
    புற்றாய் புண் பட்டு , புதையுண்டு போய் விட நினைத்து ,
    புதிதாய் புத்துயிர் பெற்று , புன்னகைத்து வாழும் ஆண் .

    அது போல அன்பு தோழமை எல்லாம் அவர் தம் அகம் மகிழ்ந்து ,
    ஆர்ப்பரிப்பாய் , ஆசையுடன் வாழ…
    அரவணைப்பாய் இல்லை ,அன்பாயும் இல்லை ,
    ஆரம்பமாய் இருக்கவே இது .

    என்றும் அன்புடன்
    இவன்
    மகேஸ்வரன். கோ
    கோவை

  25. ரோகிணி says:

    நீரோடைப்போட்டிஎண்6
    ________________________
    பாரதியின்அக்னிக்குஞ்சுகள்
    ____________________________
    பணக்கார முதலைகளே!!
    பச்சைக் குருதி கண்டதுண்டு,
    பச்சைநிறக்குருதி கண்டதுண்டா?

    உயர்வர்க்க உத்தமர்களே!
    உயிரும் உணர்வும் எல்லோருக்கும்
    ஒன்றுதானே….

    ஏடுபடிக்க வந்த பிள்ளைகளை
    பாடு படுத்துவது ஏனோ?
    ஆதிக்கத்திண்மை கொண்டு
    சாதிக்க நினைத்தீரோ?

    நீங்கள் அருந்திய ப்
    பச்சைக் குருதியெல்லாம்
    ஒன்றிணைந்து விஸ்வரூபம்
    எடுக்கப் போகிறது…
    அந்த ரோஜாப் செடிகளின்
    முட்கள் ஒன்றிணைந்து உங்களை
    குத்திக்கிழிக்கப் போகிறது…

    அந்த அக்னிக்குஞ்சுகளின்
    பெண்மைக்கனலில் எரிந்து
    சாம்பல் ஆகப் போகிறீர்கள்!
    பெண்மை சக்தியின் வடிவமடா!

    _______________________________

  26. Maheswaran says:

    எது வரை யார் …

    எனக்கென்ன எல்லாம் என்னிடம்
    என நான்கொண்ட இறுமாப்பெல்லாம்
    இளக தொடங்கியது இப்போது …

    கண்மூடி கிடக்கிறேன் காத்து
    புகா நெகிழி பையில் …

    காலன் அழைத்துக்கொண்டான்
    அவன் வசம் என உயிருக்கு
    உறைத்தது உடல் அது
    தனித்து கிடப்பதினால் …

    உயிர் கொடுத்தவரையும்
    உயிராய் வந்தவளையும்
    நான் உயிர் தந்த எம் பிள்ளைகளையும்
    உற்றார் உறவினரையும்
    நான் கொண்ட நட்ப்புகளையும்
    எவரையும் காணோமே
    என்னருகில் …

    எனை வருத்தி இவர் வாழ்வை
    உயர்த்திட்டேனே!!! …
    என் உயிர் போனப்பின்பு
    உடல் காண ஒருவரையும்
    காணோமே!!! …

    உரத்து அழ ஆளில்லாமல் போகுதே
    உளைச்ச எல்லாம் விட்டுவிட்டு போகுதே
    எனக்கென ஒருவரும் தான் இல்லையோ???!!!…

    உடல் வாங்க யாரு வருவா?
    எங்கப்பன் வருவாரா ?
    இல்லை என்பிள்ளை வருவானா ?
    உடன்கட்டை ஏறாட்டியும்
    என் பொண்டாட்டி வருவாளா ?
    யாரையும் காணலையே !!!…

    எல்லாம் இருக்குதுனு
    நான் போட்ட ஆட்டம் எல்லாம்
    நாதியத்து கிடக்கயிலே
    நசுங்கித்தான் போகுதே …

    போனா வரமாட்டேன்
    போட்டாவா தான் இருப்பேன்…
    ஆனாலும் ஒருத்தரையும் காணலையே ???
    போனா போகட்டும்னு
    போட்டுவிட்டு போனாங்களோ ???..

    பொருமி தவிக்கிறேனே
    போட்டு எரிக்கும் முன்னே
    எவர் முகத்தை பார்ப்பேனோ ???.

    எவர் முகமும் பாக்காம
    எரிஞ்சு தான் போவேனோ ???
    எல்லாம் தெரிஞ்சதா என்
    பேச்சு இருந்துச்சே , ஆனா
    என் உசுரு போனப்பின்னே
    எவரையும் காணாம எல்லாமே
    போயிடிச்சே …

    சேர்த்து வச்ச சொத்து இல்ல…
    செத்தா தேவையுன்னு நினைச்சிருந்த
    சொந்தம் இல்ல…
    சேர்ந்தே திறிஞ்ச
    சேர்க்கையும் தான் காணவில்லை …
    கொள்ளிவைக்க , குலம் காக்க
    வேணுமுன்னு வேண்டி பெத்த புள்ளையையும்
    காணவில்லை…

    எல்லாம் முடிஞ்சிடுச்சு
    என் வண்டி கிளம்பிடிச்சு
    எரிக்கட்ட வச்சாச்சு
    எவனோ கொள்ளி வைக்க
    என் உடலும் வேகுது இப்போ …

    எதுவும் இல்லாம போறேனே !!!…
    எதுவரைக்கும் யாருன்னு
    தெரியாம போறேனே!!!…
    எல்லாம் தெரிஞ்சவனே, எம் இறையே
    என் கட்டை முழுசா வெகும் முன்னே
    எனக்கு தான் சொல்வாயா
    எதுவரைக்கும் யாருன்னு ???…

    என்றும் அன்புடன்
    இவன்
    மகேஸ்வரன். கோ( மகோ )
    கோவை

  27. தனியெழிலன் says:

    அவள்

    கழலணிகள் மேலுயர்த்தி
    அவளுயரங் காட்டும் – நீலக்
    கடலெழுந்து அவளடியைக்
    களவுகொள்ளப் பார்க்கும்!

    உழவனது வரப்பையொத்தப்
    பசுமைநிறம் அவளே – என்றன்
    உறவுக்கேற்ற வதுவையவள்
    என்றுசொல்லும் மனமே!

    நிழலும்வந்(து) அவளுருவில்
    நிலவெனவே ஒளிரும் – எனது
    நெஞ்சமெல்லாம் அவள்நினைவே
    வந்துவந்து குளிரும்!

    தழலெனவே இருபுருவம்
    மேலெழுந்து நிற்கும் – அதைத்
    தழுவுமந்த ஒருகூந்தல்
    உலகினையே விற்கும்!

    குழலினிதா குரலினிதா
    பேரையங் கொள்வர் – இங்கு
    குழப்பமெலாம் வந்தெழுதல்
    அவளழகென்(று) உய்வர்!

    பழமவளா பாலவளா
    என்றுவினா எழும்பும் – யாரும்
    பார்க்காதப் பால்வெளியே
    பாவையவள் தழும்பும்!

    மழையினிதாம் மடையினிதாம்
    என்றுபலர் சொல்வர் – அவள்
    மச்சமதைப் பார்த்திடாத
    பாபஞ்செய்தக் கள்வர்!

    விழநினைக்கும் என்மனதோ
    அவளழகை விளிக்க – இன்று
    வேறொருவன் கைப்பிடித்தாள்
    நானுமிக்கு முழிக்க!

    அழுதுதீர்க்க முடிவெடுத்தேன்
    அவள்நினைவைப் போக்க – அதுவும் அழிந்திடுமோ அகன்றிடுமோ
    என்னுயிரும் நீக்க!

    எழநினைந்து நினைவழித்தேன்
    என்னுயிரைப் புதைத்து – அதில்
    எழுந்ததெல்லாம் அவளுருவே
    கவிதையென முளைத்து!

    தனியெழிலன்

  28. வீ.ராஜ்குமார் says:

    #உலகப்_பெருங்கடல்கள்_தினம்!

    #வணங்குகிறோம்_கடலம்மா!

    ‘உயிர்வளியில் எண்பது விழுக்காட்டை நீதான்
    உற்பத்தி செய்கிறாய் கடலம்மா! எங்கள்
    மூச்சு நில்லாது காக்க உந்தனலைப்
    பேச்சு தானே பெருங் காரணம்!

    ஊடல் எங்களோடு உனக்கிருந்தாலும் எமது
    உடல் வளர்க்க ஊனூட்டும் அன்னையே!
    உப்பைத் தின்றுதான் நாங்கள் செய்யும்
    தப்பை நினைத்து தண்டிக் காதே!

    மூன்றில் இருபங்கு விரிந்து பரந்து
    மன்றினில் மாய உலகம் கொண்டாய்!
    ஆனையை விடவும் பெருவிலங் குண்டு
    ஆழியே நீதான் அடைக்கலம் தந்தாய்!

    கடல் பறவைக்கெல்லாம் இரை தந்தேநீ
    குடல் வளர்க்கும் பரவை தானே!
    முத்து பவளம் மொத்தமாய் வாரித்தரும்
    சொத்து சுகங்கள் எத்தனை வாரிதியே!

    தரங்கம் நீபாடும் சலதரங்கம் எந்த
    அரங்கமும் ஓயாது அளித்ததில்லை ஆழி!
    ஆபத்தை அளிக்கும் நெகிழியை வீசும்
    பாவத்தை நாங்களினிப் புரிந்திடோம் அம்மா!

  29. பாவலர் கருமலைத்தமிழாழன் says:

    ஜீவாவைப்போல் யாரே உள்ளார்
    பாவலர் கருமலைத்தமிழாழன்

    ஊர்நடுவே பழுத்தமரம் மக்க ளுக்கே
    —உரியபயன் நல்குகின்ற தன்மை யாகப்
    பேர்பெற்ற காமராசர் முதல்வ ராகப்
    —பெருமையுடன் தமிழகத்தை ஆண்ட போது
    சீர்மிகுந்த அரசுவிழா ஒன்றில் பேசச்
    —சிலரோடு மகிழுந்தில் செல்லும் போதோ
    ஆர்வமுடன் சீவாவை அழைத்துச் செல்ல
    —அவரிருந்த குடிசைமுன்னே இறங்கி நின்றார் !

    கட்டுவதற்குத் துவைத்திட்ட வேட்டி தன்னைக்
    —காய்வதற்கு வேலிமீது போட்டி ருந்த
    சட்டமன்ற உறுப்பினராய் இருந்த சீவா
    —சற்றுநீங்கள் பொறுத்திருந்தால் வருவே னென்றே
    எட்டிநின்று உரைத்துவேட்டி காய்ந்த பின்பு
    —எடுத்துடுத்திக் குடிசைவிட்டு வெளியே வந்தார்
    கட்டுமொரு வேட்டியொடு வாழும் செய்தி
    —காமராசர் அறிந்துநெஞ்சுள் கண்ணீர் விட்டார் !

    காந்திமகான் தமிழ்நாடு வந்த போது
    —காண்பதற்கு வந்தசீவா தம்மைப் பார்த்துச்
    சாந்தமூர்த்தி சொத்துளதா என்று கேட்கச்
    —சட்டென்றே இந்தியாதான் என்சொத் தென்றார்
    பாந்தமுடன் சீவாவைத் தழுவிக் காந்தி
    —பாரதத்திதின் நல்சொத்தே நீதான் என்றார்
    காந்தியைப்போல் வாழ்ந்தசீவா தியாகி போல
    —காணவின்றோ அரசியலில் யாரே உள்ளார் !

  30. வேல் says:

    அலையின் அமைதி

    அலை அலையாய் அழ்கடலினுள் !
    அமைதியாக நிலவும் ஒலி அலையே!

    அழகின் அம்சம் உன் விரிகடலாய்
    சிறகடித்து !
    பார்க்க தூண்டும் சிற்றலைகளே!

    மங்கை உள்ளமும் மழலை செல்வமும்!
    பாதம் தொட்டு வெட்கம் கொண்டு
    அன்பை பொழிவது உன் பேரலையே !

    வேட்கையில் விளையாடும் உன்னுடன் !
    ஆசையில் ஆயிரம் ஆயிரமான ரசித்த உள்ளம் !

    வேடிக்கை பார்க்கும் போது மனது பிரமிக்க வைக்கிறது !

    வாடிக்கையாக வைத்து கொள்ளும் பழக்கம்!
    வாடிக்கையாளராக வருகையின்
    நோக்கம் !

    எண்ணி கொண்டு தான் வந்து போகுது நெஞ்சில் விதைந்த நினைவு அலைகளாய்…!

    திரும்பி பார்க்கும் தருணம் என்றாவது
    திரும்ப கிட்டுமா என்று !

    கவலையும் மகிழ்ச்சியும் உன்னுடன் பகிர்ந்து கொள்வது பரம சந்தோசமே…
    இன்றைய உலகில்….!

    வேல்…

  31. வேல் says:

    ரசித்திடு உலகை :

    உலகின் அதிசயங்களில் பல !
    உனக்கு தெரிந்தது சில !

    உலகை ரசித்திட பல இடமுண்டு !
    உனக்கு தெரிந்திட வாய்ப்பு உண்டு !

    அறிந்த சிலவற்றை நீ !
    அறியாத பலவற்றை தெரிந்திடு!

    புண்ணிய தலத்திற்கு சென்றிடு !
    பலவற்றின் நன்மைகளை புரிந்திடு!

    காதலின் நினைவு சின்னம் இடம்
    பெயரும்
    கலை வண்ணத்தோடு பார்க்கும்
    மனதை கவர்ந்திடும்!

    விளையாடும் குழந்தைகளுக்கு
    வீரபாண்டி கட்டபொம்மன் பற்றி
    அறிய வைத்திடுவோம் !

    குதூகலமாக சேர்ந்து ரசித்திட !
    குடும்பத்தோடு சென்று மகிழ்ந்து
    அறிந்திடுவோம் !

    வேல் …

  32. வீ.ராஜ்குமார் says:

    #ஐயோ_அம்மா!

    ஊரடங்கு காலத்தில் ஊர்திகளை இயக்கவே
    மறந்து விட்டதோ சமூகம்!
    தட்டுப்பாடு ஏற்பட்டதே கட்டுப்பாட்டிற்கு!
    சாலை விதி மறந்து
    சோலையில் செல்வார்போல் செல்கிறாரே!
    மனதுக்குள் குமைந்தேன் சென்றேன்!
    அந்தோ!
    ஐயோ! அம்மா! அலறல் சத்தம்!
    முதியவரை முட்டிச் சாய்த்து
    சென்றாரொரு வாகன ஓட்டி!

  33. Maheswaran.G says:

    காணாமல் போன காதலி …

    கண்ணுக்குள்ள இருந்தவளை
    காணாம தொலைச்சேனே!!!
    கைப்பிடிச்சு திருஞ்சவள
    கை கூப்பி தேடுறனே !
    தேடி சலிச்சுப்புட்டேன்
    திசையேதும் தெரியலையே …

    காலம் கடத்துறேன்னு
    கழட்டி விட்டு போனாளோ ?
    காசு பணம் தேடி
    கடல் கடந்து போனாளோ ?
    கல்யாணம் கட்டிக்கிட்டு
    கணவனோடு போனாளோ ?
    எதுவும் புரியலையே !
    என்னாச்சி தெரியலையே ???…

    தெரிஞ்சவங்க சொல்லுங்களே
    தினம்தோறும் சகுறேன்னு !
    தின்னா இறங்கவில்லை
    திரை மூடி தூங்கவில்லை
    தினமும் அவ நெனப்பு
    தீயா எரிக்குதுன்னு …

    மனசெல்லாம் நெறைஞ்சவள
    மறக்கத்தான் முடியலையே !
    மண்ணுக்குள்ள போற வரை
    மனசுக்குள்ள நிப்பாளே !
    மரணமும் வந்து அவளை
    மறக்கத்தான் செய்திடுமோ ???…

    சேர்ந்து சாவமுன்னு
    சத்தியம் தான் செஞ்சாளே !
    சத்தியமும் செத்துத்தான்
    போயிடுச்சோ ?
    போனவளும் வருவாளோ
    போகும் உசுரை பிடிப்பாளோ???…

    பிடிக்காம போயிருந்தா
    பிழை ஏதும் இல்லையடி? .
    பிள்ளைக்கு பேரு வச்சு
    பிறவிப்பயன் தந்திடுடி !…

    பிள்ளையா இருந்துன்ன
    பிரியமா பார்த்திடுவேன்
    பின்னும் ஓர் பிறவிக்கொண்டு
    புரியாம சேர்ந்திடுவேன் …

    இவன்
    மகேஸ்வரன் .கோ ( மகோ )
    கோவை

  34. வேல் says:

    தந்தை மகள் பாசம் :

    தாய் சுமக்கும் காலத்தில்
    தன்னை அறியாமல் கலங்கும்
    குணம் தந்தைக்கே !

    நினைக்கும் தருணத்தில் நடந்த
    நிகழ்வு ஆனந்த கண்ணீரை வர
    வழைத்தது !

    தேவதை அம்சமாக பெண் குழந்தை
    பிறந்தது
    தன்னை தாங்க இன்னொரு தாய்
    என்று !

    மகிழ்ச்சி பொங்கிய தந்தை தன்
    மனதில் உற்சாகத்தை அடைந்து
    அனைவருக்கும் !

    இனிமையான தகவலை சொல்லி
    இனிப்புகள் வழங்கி பெருமிதம்
    கொள்கிறார் !

    தன் தாயின் மரு உருவம் என்று
    தன் அன்பை முழுவதும் காட்டினார் !

    மழலையின் சொற்பொழிவை
    கேட்டு
    மயங்கி போனார் பரவசத்தில் !

    தன் காலில் தடம் பதித்த இடத்தில் தன் செல்ல மகளின் நடையை
    கண்டு வியந்தார் !

    பள்ளி பருவம் முடிந்து விரும்பும்
    மேற்படிப்பை படிக்க வைத்தார் !

    வயது செல்ல செல்ல தன் மகளின் வளமான எதிர்காலத்தை உருவாக்க
    அரும்பாடுபட்டார் !

    வாழ்க்கை எனும் அங்கத்தை ஒரு வசந்த காலமாக அமைத்து
    கொடுத்தார் !

    மகளுக்கு மண வாழ்க்கையை
    முடித்து கொடுத்து
    மனமே இல்லாமல் வீடு திரும்பினார் !

    காணும் இடமெல்லாம் தன் மகளின்
    கற்பனை முகம் என்று தேம்பினார்!

    தனது பொறுப்பு முடிந்த மகிழ்ச்சி
    தந்தையின் கண்ணில் துளியாய்
    கொட்டியது !

    ” தந்தை பாசம் மகளுக்கே
    உரியது ”
    ” மகளின் பாசம் அன்னையைப்
    போல ” …..

    வேல் …

  35. பாவலர் கருமலைத்தமிழாழன் says:

    கொரோனா வாழ்க்கை
    பாவலர் கருமலைத்தமிழாழன்

    செக்குமாடு போலவன்றோ வீட்டிற் குள்ளே
    —-செயலின்றிச் சுற்றுகிறேன் கொரோனா வாலே
    பக்கத்து வீட்டாரும் வருவ தில்லை
    —-பழகிட்ட நண்பருமே அழைப்ப தில்லை
    துக்கத்தின் செய்திவந்தும் போவ தற்குத்
    —-துடித்தபோதும் நோய்தொற்றும் எனத்த டுத்தார்
    அக்காவின்ன மகளுக்குக் காது குத்தல்
    —-அதற்குமாமன் செல்வதற்கு வழியு மில்லை !

    பூங்காக்கள் நூலகங்கள் திரைய ரங்கைப்
    —-பூட்டிவிட்டுப் பொழுதுபோக்கை அடைத்து விட்டார்
    ஏங்குகின்ற மனவமைதி பெறுவ தற்கும்
    —-எந்தவொரு கோயிலுமே திறக்க வில்லை
    தாங்காமல் வெளிவந்தால் தெருக்க லெல்லாம்
    —-தனித்ததொரு முகமுமில்லா வெறுமைக் காட்சி
    பாங்கான கருத்தரங்கம் பட்டி மன்றம்
    —-பாட்டரங்கம் எல்லாம்கைப் பேசிக் குள்ளே !

    காலையிலே எழுவதுவும் மனைவி ஈயும்
    —-கபசுரநீர் குடிப்பதுவும் செய்தித் தாளைக்
    காலைநீட்டிப் படிப்பதுவும் குளித்து விட்டுக்
    —-கட்டியவள் தருமுணவை உண்ட பின்பு
    வேலையெல்லாம் நூல்படித்தல் சோர்ந்து விட்டால்
    —-வெவ்வேறு தொலைக்காட்சி பார்த்த யர்தல்
    மாலையிலே காணொளியில் கவிப டித்து
    —-மறுபடியும் உண்பதுதான் வாழ்க்கை யிங்கே !

  36. Rohini says:

    நீரோடைப்போட்டிஎண்_6
    _________________________
    அந்தமலை …
    அங்கு வெயிலுக்கு வேர்த்தால்கூட
    மலைக் காற்று மயில் தோகை வீசும்

    மூலிகைவாசம், மூக்கிலே நர்த்தனமிடும்
    மரங்கள் மந்தியின்
    விளையாட்டு மைதானங்களாகும்…

    அது கானக்குயில்களுக்கும்
    கானகமயில்களுக்கும் , கந்தர்வலோகம்…
    அங்கே,
    பெண்கள் தலையில் கட்டுக்கட்டாக
    சுள்ளிக்குச்சிகள் நடந்தே போகும்…

    மீண்டும் அதேபாதை , அதே பயணம்,
    காட்டுத்தீ யின் கங்குகளால்
    மாறிப் போன காட்சிகள்..
    இறந்துபோன அந்தக்காட்டிற்கு
    என்இரு துளி கண்ணீர் அஞ்சலி…

    அதே பெண்கள் தலையில்
    சுள்ளிக்குச்சிகள் கட்டுகளோடு
    முன்னைவிட இன்னும் நிறைய..
    புவிவெப்பமடைதலும்
    ஓசோன் படல ஓட்டைபற்றியம்
    அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை…
    ______________________________________

  37. அர்ஜுன் பாரதி says:

    கல்லுக்குள் ஈரமோ!!!
    அது போலத்தான்
    இப்பூட்டுக்குள் தாவரமோ!!!
    என்று தான் பார்த்தவுடன் பரவசம் எழுகிறது…

    துருயேறி பூட்டிய நிலையிலும்.,
    விதையின் கதவுகள் ஏனோ அடைக்காமல்
    அழகாய் திறந்து
    அற்புதமாய் வெளிவந்து
    வான் நோக்கி வளர
    காத்திருக்கும் என்
    பச்சைப்பூந்தளிரே…

    வருக வருகவெனவே
    அழைக்கிறோம்…
    விண்வெளி வரை உன் பயணம் தொடர
    வியந்து வரவேற்கிறேன்…

  38. அர்ஜுன் பாரதி says:

    ஆயிரமாயிரம் பொன் மகள்களும்,மகன்களும்
    இங்கே அரை மனதுடன்
    அங்குமிங்கும் அலைந்து
    தன்னுருவம் சிசுவினிலே சிதைக்கப்பட்டு

    சூடுகளின் வடுக்கள்
    ஆறாமல்
    மனமதிலே ரணங்களாய்
    நெருடிக்கொண்டிருக்க
    வெளியிலே புன்னகைத்து
    உள்ளுக்குள் அனுதினம் செத்து

    மனதளவில் வீரம் வதைக்கப்பட்டு
    தனக்கான கொடுமையை யாரிடமும் சொல்லா
    மனத்திராணியும் தானிழந்து

    தனை தாறுமாறாய் வதைத்து
    குருதி கொப்பளிக்க
    உயிருடன் தன் சதை கிழித்து கொண்டவனை
    கொலை செய்யவும்
    கொள்கையின்றி

    ஒரு சிலர் அதுவே பழகி போய்
    பாலியலில் தனை தொலைத்து
    தன் நிம்மதியான தூக்கமும் தினம் வெறுத்து
    ஆயிரம் கைகள் அன்றாடம் கற்பழிக்கும்
    சொப்பனங்களை சோகக்காட்சியாய் கனவில் நிறுத்தி
    அணுவணுவாய் அறுக்கப்பட்டு

    வாழவும் முடியாமல்
    செத்து மடியவும் முடியாமல்
    எப்படியோ
    மரம் போலே
    மக்களோடு மக்களாய்
    உலவி கொண்டிருக்க

    ஜோதியின் இப்பொன்மகள் வந்தாள் ஒரு ஆறுதலே…
    திரையிலாவது தீயவன்
    அழியட்டும்
    தீக்கிரையாகட்டும்….
    சத்யஜோதி நின்று என்றும் ஒளிரட்டும்

    By… அர்ஜுன்பாரதி

  39. வீ.ராஜ்குமார் says:

    #குழந்தைத்_தொழிலாளர்_எதிர்ப்பு_தினம்!

    #பிஞ்சுகளைக்_காத்திடுவோம்!

    ‘அருமையாய்க் கல்வி கற்கவேண்டிய குழந்தைகள்
    வறுமையை விரட்ட வாழ்வு மிரட்ட
    பிட்டுக்கு மண்சுமந்து அடிபட்ட பெருமானாய்
    தட்டில் மண்சுமந்தும் மலையடியில் கல்சுமந்தும்

    குறைந்த கூலியில் காலத்தைக் கரைத்தும்
    மறைத்த முதலாளியிடம் அடிமையாய் உழைத்தும்
    ஊட்ட உணவின்றி உருவம் குலைந்து
    நாட்டமில்லாப் பணியில் நலிவும் அடைந்து

    எழுத் தறிவும் எண்ணறிவும் கிடைக்காது
    மன அழுத்தமும் மதுமயக்கமும் பெற்று
    பிஞ்சிலே வெம்பி விழுந்த காய்போல
    நெஞ்சிலே உரமின்றி விம்மி வாழ்ந்து

    வாழ்வில் இறுதிவரை உயர்நிலை யடையாது
    தாழ்வில் தவித்து சமூகத்தால் ஒதுக்கும்
    அவல நிலை தீராதோ! அவர்கள்
    துவளும் நிலை மாறாதோ!’

  40. மு. கலையரசி says:

    தலைப்பு:- கொரோனா உயிர் இழப்பு பெரும் பேரிழப்பு

    ஒரு தாய் வயிற்றில் பிறக்கவும் இல்லை

    உன் கை விரல் பிடித்து நடந்ததும் இல்லை

    நாம் இருவரும் கூடி விளையாடியதும் இல்லை

    அண்ணன், தங்கையாக சண்டை போட்டு கொண்டதும் இல்லை

    ஏனோ வலிக்கிறது மனம்…

    நினைக்கும் போதெல்லாம் உண்மை என்பதை உறுதி செய்ய மறுக்கிறது மனம்…

    அதிகமாக பேசியதும் இல்லை…

    அதிக அன்பை பரிமாறிக்கொண்டதும் இல்லை..

    ஏனோ வலிக்கிறது மனம்…

    அண்ணன் என்ற வார்த்தையில் அடிமையாகி போனேனோ

    நீ உதிர்த்த புன்னகையும், அளவாக பேசும் வார்த்தைகளும் அழியாத காவியம் ஆகுமேன்று யோசித்ததில்லை…

    இறைவனின் படைப்பில் இத்தனை அவசரமா…

    அழகான முகத்தை இறுதியாக பார்க்கவும் இல்லை..

    அன்பான உறவுகள் உன்னை அள்ளி அனைக்கவும் முடியவில்லை இது எங்களுக்கு கிடைத்த
    சாபமா…

    இனி ஒரு முறை பார்க்கப்போவதும் இல்லை…

    இறுதி வரை சுமந்திருப்போம் உன் நினைவுகளை…

    விழித்திருப்போம், விரைவில் விடை கொடுப்போம் உயிர்களுக்கு அல்ல நுண் உயிரிகளுக்கு..

  41. Rohini says:

    . நீரோடை கவிதைப் போட்டிகளில் எண்6
    ________________________________________
    அக்னி நட்சத்திர நாட்கள்…
    வானிலை அறிக்கை கூறுகிறது
    வெயில் சுட்டெரிக்கும்
    அனல் காற்று வீசும் என்று..

    வானமோ சூரியன் கக்கும்
    அனல்கங்குகளை
    முழுங்கிக்கொண்டு மழையை
    அல்லவா பொழிகிறது?

    முன் ஆழிப்பேரலைகள் வந்து
    அள்ளிக் கொண்டு போனது
    உயிர்களை…
    இப்போதோ கொரோனாப்பேரலை
    வந்து, கொள்ளை கொண்டு போகுது
    உயிர்களை….
    கிழக்கே உதித்து மேற்கே
    மறையும் சூரியன்
    அமைதியான குளங்கள்
    ஆர்ப்பரிக்கும் கடல்கள்
    விழுந்து புரண்டு ஓடும் நதிகள்
    வீசும் காற்று, இவைகளும்
    தடம் மாறிப்போகுமோ
    காலநிலை மாற்றத்தால்?

    வாருங்கள்,
    புதிய விஞ்ஞானம் கொண்டு
    புதியதோர் பூமி படைப்போம்
    காலநிலை மாற்றத்தையும்
    காலத்தோடு கடந்து போவோம்!

    _____________________”________

  42. Rohini says:

    நீரோடை போட்டிஎண்_6
    ________________________
    அக்னி நட்சத்திர நாட்கள்…
    வானிலை அறிக்கை சொல்கிறது
    வெயில் சுட்டெரிக்கும்
    அனல்காற்று வீசுமென்று…

    வானமோ சூரியன்
    கக்கும் அனல்கங்குகளை
    முழுங்கிக்கொண்டு மழையை
    அல்லவா பொழிகிறது!

    முன் ஆழிப்பேரலைகள்
    வந்து அள்ளிக்கொண்டுபோனது
    உயிர்களை…
    இப்போதோ கொரோனா பேரலைகள்
    கொள்ளை கொண்டு போகுது
    உயிர்களை..

    கிழக்கே உதித்து
    மேற்கே மறையும் சூரியன்
    அமைதியான குளங்கள்
    ஆர்ப்பரிக்கும் கடல்
    விழுந்து புரண்டு ஓடும்
    நதிகள், வீசும் காற்று
    இவைகளும் தடம் புரளுமோ?
    காலநிலை மாற்றத்தால்…
    வாருங்கள்!
    புதிய விஞ்ஞானம் கொண்டு
    புதியதோர் பூமி படைப்போம்!
    காலநிலை மாற்றத்தையும்
    காலத்தோடு கடந்கடந்து போவோம்!

  43. Maheswaran says:

    மனித கடவுள் ….
    கருவை சுமப்பவள் தாய் ,
    கருவை தந்தவர் தந்தை …

    அன்பை அரவணைப்பாய் தருபவள் அன்னை ,
    அன்போடு அன்பவத்தையும் தருபவர் தகப்பன்…

    கவனிப்பை கருணையாய் தருபவள் அம்மா ,
    கரிசனையும் கண்டிப்புடன் தருபவர் அப்பா …

    தோழியாய் ஆறுதல் சொல்பவள் அம்மா ,
    தோழனாய் தோல்வியை எதிர்கொள்ள பழக்குபவர் அப்பா…

    கண்ணீரை துடைக்கும் கரிசனம் அம்மா ,
    கண்ணீரை காட்டாத கடினம் அப்பா …

    குடும்பத்தை தன் தோளில் சுமக்கும் தாய்
    எல்லோரும் தகப்பனே …

    தன்னை தொலைத்து தன் மக்கள்
    நலம் காக்கும் எல்லா தகப்பனும்
    தன் குழந்தையை தன் வயிற்றில் சுமக்கவில்லை
    என்றாலும் தாய் தான்…

    தாயை தன்னுள் கொண்டு
    தனக்கென ஏதுமின்றி
    தன் மக்கள் நலம் காத்து
    மகிழ்ச்சி கொள்பவன்…

    தன் தோளில் சுமந்து
    தான் கண்டிராத பலவும்
    தன் பிள்ளைகள் பார்க்க செய்யும்
    தியாக தோழன்…

    தன் வலி சொல்லாது
    தன் மக்கள் வாழ்வதனை
    உயர்த்திடும் உன்னதன்…

    உயிர் தந்து, உயிராய் காத்து
    உயிரில் கலந்து, உயிராய் மாறி
    போகும் கண் பார்க்கும் மனித கடவுள்…

    ஆம்… படைப்பவன் இறைவன்
    என்றால் படைப்பை பதிப்பித்தவனும்
    இறைவன் அன்றோ!!!…

    இவன்
    மகேஸ்வரன்.கோ (மகோ )

  44. Elanthenral Diraviam இளந்தென்றல் திரவியம் says:

    கண்ணாமூச்சி (தலைப்பு)

    நம் பிரியங்களுடன்
    நாம் விளையாடும் கண்ணாமூச்சி
    அழகானது.

    கண்களின் தைரியத்தில் நடந்த கால்கள்
    இன்று பூமியை உரசி உரசி நடக்கின்றன,
    கண்களுக்குப் பதிலாக
    என் கைகள்
    ஆகாயத்தைத் துளாவி
    வழிகாட்டுகின்றன.

    கண்கண் மூடப்பட்டிருந்தாலும்
    நம்மால் தேடப்படுபவா்கள்

    நம் திணறலை
    ரசித்துக்கொண்டே தான்
    ஒளிந்திருக்கிறார்கள்,

    சிறு பள்ளத்திலோ
    படிக்கட்டிலோ
    இடர நேர்கையில்
    ஓடி வந்து நம் கண்கட்டை அவிழ்க்கும்
    காவல்களின் காதல்களுக்காக

    காத்துக்கிடனக்கின்றன
    நம் பிரியங்கள்

    இளந்தென்றல் திரவியம்

  45. மு கலையரசி says:

    அமைதியும் நிம்மதியும்:-

    மயான அமைதி கேள்வி பட்டிருப்போம் மயானத்தையும் விட்டு வைக்க வில்லை நம் சமூகம்…

    பல குடும்பங்களின் அலறல் சத்தத்தை தாண்டி ஓங்கி எரிந்து கொண்டிருக்கிறது…

    எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என மருத்துவர்கள் போராட

    யாரையாவது பாத்துக்கத்திட வேண்டும் என காவலர்கள் போராட…

    தனக்காக மட்டும் போராடும் ஒரு பெருங்கூட்டம் நம் குடிகார மக்கள்…

    அப்பா,அண்ணன், தம்பி,கணவன் என அனைவரையும் தொலைத்து விட்டோம் இனி தொலைப்பதற்கு எவரும் இல்லை,நம் கஷ்டங்களை துடைப்பதற்கு கைகளும் இல்லை…

    நீ எவரையும் காப்பாற்ற வேண்டாம் உன்னை காப்பாற்றி கொள் பிறர் காப்பாற்ற படுவர்

    உண்மையை யோசி! உலகை நேசி!….

  46. Loganayagi Mohan says:

    புத்தகம் மட்டுமே உலகமாய்
    படித்துப் பட்டங்கள் பெற்ற
    அவளுக்கு…
    புதியதோர் புத்தகம்
    அறிமுமானதோ????

    முகம் தெரியாத நண்பர்களுடன்
    முக நூல் புத்தக நட்பில்
    நாட்கள் எல்லாம்
    தடையேதும் இன்றி நடைபோட….

    தன்னை மறந்து…..
    குடும்பம் மறந்து….
    சிறகுகள் இன்றி பறந்தாள்….

    உரையாடுதலில் தொடங்கி ….
    உறவாடுதல் வரை நீள…
    அவளின்
    பெண்மை தீயிக்கு
    நெய் ஊற்றின….
    சில ஆண்களின்
    ஆசை வார்த்தைகள்….

    அதுவரை அவள் அறியா
    அர்த்தம் தெரியா
    வார்த்தைகள் சில
    அவளின்
    வாழ்க்கை அகராதியில்
    இடம் பிடிக்க….

    கொஞ்சல்கள் எல்லாம்
    மிரட்டல்களாய் மாற….
    சுழன்ற உலகம் சற்றே நிற்க…

    கண்விழித்தால் தப்பித்து விடலாம்
    என்பதற்கு அது கனவல்லவே….
    கண்கலங்கிப் போனாள்….

    இனி இவள் மீள்வாளோ????
    இல்லை மாள்வாளோ????
    என்றெண்ணும் போது

    கட்டிய கணவன் கடவுளாக..
    விவரமறியா பதுமையை
    விரட்டியடிக்கவில்லை…..

    மனம்விட்டுப் பேசி
    மீட்டெடுத்தான் மனைவியை…

    அவன்
    தண்டித்திருந்தால் கூட
    சில காலம் மட்டுமே வலித்திருக்கும்….

    மன்னித்துவிட்டதால்
    ஆயுள் தண்டனையாக
    வாழ்நாள் முழுவதும்
    வலத்துக் கொண்டேதான் இருக்கிறது…

    “அவளின் அந்த தவறு”

    -loganayagi

  47. வீ.ராஜ்குமார் says:

    #குரங்காட்டி!

    ‘கலங்காதே! தாத்தா கலங்காதே! _ உன்
    கண்ணீரைத் துடைத்திடுவேன் கலங்காதே!

    காலம் ஒருநாள் தேடிவரும் _ நம்
    கவலை யாவும் மூடிவிடும்!
    உலகை அடக்கி முடக்கிவிட்ட
    ஊரடங்கு ஒருநாள் ஓடிவிடும்!

    குழந்தைகளும் குட்டிகளும் விளையாடும்
    கலைக்கூத்து தெருக்கூத்து தொடங்கிவிடும்!

    கழியொன்று எடுத்துவா நீ தாத்தா!
    வழியொன்று பிறக்கும் விழி பார்த்தா!
    குட்டிக் கரணமும் அடித்திடுவேன் _ கோலை
    எட்டியே தாண்டிக் குதித்திடுவேன்!

    பாமரனும் பல்காட்டிச் சிரித்திடுவார் _ இந்த
    ராமனுக்குப் பணம்வீசி இறைத்திடுவார்!

  48. Rohini says:

    கன்றுக் குட்டிகளை கூட
    காமக்கத்திகள் கொண்டு
    கழுத்தறுக்கும் கூட்டம்
    இங்கே உண்டு…

    மொட்டுக்கள் மலரும் முன்பே
    மரணிக்கும் சம்பவமும்
    இங்கே உண்டு…
    நீதி கேட்டு போராட்டங்களும்
    இங்கே உண்டு..
    புதியப் போராட்டம் பொறுப்பேற்கும்!
    பழைய போராட்டம் பதவியிழந்து
    போகும்…
    புதிய இலை தழைக்கும்!
    பழைய சருகு காய்ந்து போகும்!
    உதிர்ந்துபோன சாம்பலால்
    உபயோகம் ஒன்றுமில்லை!
    கொள்ளிக்கட்டை எரிந்தால்தான்
    கொடுங்காட்டில் பயணம் செய்யலாம்…

    மக்கள்மனம் எரிந்தால்தான்
    மங்கையர்க்கு நியாயம் பிறக்கலாம்
    இனி எந்த,
    பொள்ளாட்சியும் வேண்டாம்
    பொல்லாத காட்சிகளும் வேண்டாம்!

    _____________________________________
    நீரோடை கவிதைப் போட்டி எண்6

  49. தே.லூவியாவின்சி. says:

    உலக அழுகை!!!

    அழுகை, ஆழிபோல் மாறியது..
    அழுகை ஆழிபோல் மாறியது….
    நுண்கிருமி உலக நுணுக்கத்தை
    தெரிந்து கொண்டதால் என்னவோ???

    பாரம்பரியத்தில் பச்சிலாட வைத்தாலும்,
    ஓடிய கால்களை ஓய வைத்தாலும்,
    விடிந்ததும் பூட்டி,
    அடைந்ததும் திறந்த வீட்டை…
    திறந்தே இருக்க வைத்தாலும்,
    தாய்ப்பாசம் கிடைக்கா பிள்ளையையும்,
    பிள்ளை முகமறியா தாயையும்,
    புரிய வைத்தாலும்,
    இவ்வனைத்தையும் மறைக்காமல்
    கொடுத்தாலும்…
    மறைந்திருந்து(நுண்கிருமியாகையால்)
    பல்லுயிர்களை காவு வாங்கி,
    பல உயிர்களை பரிதவிக்க வைத்து,
    பற்பல உயிர்களை பயமுறச்செய்தாயே….
    நீ மறுக்கப்பட வேண்டிய ஒன்று தான்!!
    அழிக்கப்பட வேண்டிய ஒன்று தான்!!!

    உன்னால் உயிருக்கு,
    உத்திரவாதம் அல்ல…
    என்ற ஆதாரத்தினால்…..
    ஆணியோடு பிடுங்கினாயோ???
    என பயமளிக்கிறது…
    கல்வியெனும் ஆணிவேரை!!

    பலபயம் காட்டி,
    உலகை உலுக்கி,
    நாட்டை நடுக்கி,
    ஊரை ஊசலாட வைத்து,
    உயிரை பனைய வைக்க,
    வீதியைச் சாடவிடாமல்,
    வீட்டிலேயே விடியவும், அடையவும்
    வைத்தாயே….
    உனையும் ஒழிக்க,
    காலம் வரும்…
    திறமையும் வரும்….
    தமிழனாகையால்!!
    நாங்கள் தமிழனாகையால்!!!!

    மேலே கூறிய தலைப்பு,
    உலக அழுகையாக இருக்கலாம்….
    ஆனால், அது தமிழனின் அழுகையாக
    இருக்க முடியாது…..
    ஏனென்றால், அது தமிழகத்தில்,
    தடம்பதிக்க இயலாது!!!
    தமிழ்நெஞ்சை நெருட இயலாது!!!!!

    வாய்ப்பளித்த வாஞ்சைமிகு
    உள்ளங்களுக்கு நன்றி!!!
    – லூவியா.தே

  50. D.luvia vincy. says:

    ஆசபாசமான அப்பா!!!
    ஆனா, அந்த ஒரு நாள்…..

    பெண் புள்ளட்ட,
    பொருண்ம உள்ளங்க…
    அப்பா பொருண்ம உள்ளங்க!!!

    கூலித்தொழிலாளி தான்…
    ஆனா, கோவேந்தரத்துல
    வைக்கனும்னு கனவு…
    தான், புள்ளையா!!

    ஆனா, அதுக்காக,,
    கல்வித்தகுதிய நிறுத்திட்டாங்க..
    ஆனா, அதுக்காக,,
    கல்வித்தகுதிய நிறுத்திட்டாங்க….
    குடும்பச் சூழ்நிலையால்!!

    அந்த ஒரு நாள்…
    புள்ள படிக்கணும் படிக்கணும்னு
    சண்ட போடுது…
    புள்ள படிக்கணும் படிக்கணும்னு
    சண்ட போடுது….
    தன் ஆசபாசமான அப்பாட்ட!!!

    அன்பான அப்பா,
    அன்றொரு நாள்
    விரோதமா தெரிஞ்சாரு…
    தான் கண்ணுக்கு!!(2)

    புள்ளைக்கு தன் ஆசை,
    அப்பாக்கு தன் கனவு,
    இருவரும் புரிய முற்படவில்லை…
    விரோதமே முன் வந்தது!!
    விரோதமே முன் வந்தது!!!

    எப்படி பாசமான மகள்,
    என்றுணர்ந்த தந்தை…
    சற்று எண்ணிப்பார்க்கிறார்….
    மகளும் அவ்வாறே!!!

    மகளே மனம் நொந்து,
    தந்தையை அகமகிழ…
    தந்தை, நீயா எனை
    புரிய முற்படவில்லை???
    என்ற வார்த்தை கூற….
    புரிந்து புறப்படுகிறாள்!!
    தந்தையின் முடிவுக்கு!!!!
    இருந்தாலும், தன்தேடலை
    விடவில்லை….
    என்பதே நிதர்சனமான உண்மை!!!!!
    – லூவியா.தே

  51. Maheswaran Govindan says:

    கல்வி என்பதே கனவாய் …
    கல்வி சேனல்ல பாடம் நடத்துறோங்க
    பாத்து படிச்சுக்கோங்க ….
    பள்ளிக்கூட வாத்தியாரு
    தண்டோரா தான் போடுறாரு …

    கலைஞர் தாத்தா தந்த டிவி அத
    கஞ்சிக்கு வேணுமுன்னு வித்துட்டாரு எங்கப்பா…
    கஞ்சிக்கு கஷ்டப்படும் நாங்க எல்லாம்
    கல்வி சேனல் பார்ப்பதுவும்
    எப்படியோ …

    கடைக்கார அக்காவுக்கு கைக்குள்ள ஸ்கூலு
    கங்காணி வீட்டு அண்ணனுக்கு கம்ப்யூட்டர்ல ஸ்கூலு
    கஞ்சிக்கு கஷ்டப்படும் எங்களுக்கு ???…

    பள்ளிக்கூடம் இல்லையில்ல
    பண்ணையார் வீட்டு வேலைக்கு
    வாரியான்னு கேக்கும் அம்மா …

    தம்பிக்கு பால் வாங்க காசுவேணும்,
    தனியா கஷ்டப்படும் எனக்கு
    துணையா இருக்குமுன்னு
    கஷ்டத்த சொல்லும் அப்பா …

    சோத்துக்காக ஸ்கூல் போகும்
    எங்களுக்கு , இப்போ சோத்துக்கே வழியில்ல …
    வருஷம் ரெண்டு ஆச்சு
    வாத்தியாரு முகம் கூட மறந்துடிச்சு …
    வாங்கி வச்ச புத்தகப்பை
    எடுக்காம கிழிஞ்சிடுச்சு …

    வயல் வேலைக்கு போகும் போது
    வழியில பாத்த வகுப்பு தோழன்
    வாழ்க்கை இப்படியே போகிடுமான்னு
    வருத்தமா கேட்ட வார்த்தை
    வலியா வந்துடுச்சு …

    பள்ளிக்கூடம் போகவில்லை
    பரிட்சையும் எழுதவில்லை
    பாஸுன்னு சொல்லிட்டாங்க …
    பக்கத்துக்கு வீட்டு அக்கா
    பத்தாவது பாஸுன்னு சந்தோசம்
    பட்டாங்க …

    படிக்காம பாஸாகி என்ன பண்ண
    படிச்சு பாஸான எதிர்வீட்டு அக்காவே
    மேற்கொண்டு படிக்காம , ஏதோ ஒரு வீட்டுக்கு
    எடுபிடி வேலை செய்ய போறாங்க …

    எதுவுமே படிக்காம ,
    எழுத படிக்க தெரியாம எத்தனாவது
    பாஸாகி என்ன பண்ண …

    படிச்சு கலெக்டர் ஆகி
    என் குடும்பம் கஷ்டம் தீர்ப்பேன்னு
    கண்ட கனவெல்லாம் கண்ண நிறைக்குதிப்போ …

    கடல் கடந்து வந்த கொரோனா
    இப்போ எங்க கல்வியிலும்
    கரையானா கலந்துடுச்சே …

    கஷ்டப்பட்டு படிச்சாக்க
    காசுக்கு கஷ்டமில்லைன்னு
    கணக்கு வாத்தியார் சொன்னாரு …
    வாத்தியாருக்கு தெரியாதோ
    படிக்கவே காசு அது வேணும்னு …

    கஞ்சிக்கு கஷ்டப்படும் எங்களுக்கு
    கல்வி என்பதுவே கனவாதான் போகிடுமே
    பள்ளிக்கூடம் தொறக்கலானா !!!…

    இவன்
    மகேஸ்வரன்.கோ ( மகோ), கோவை -35