கார வடை – சமையல்

ஊரடங்கு காலத்தில் குழந்தைகளுக்கு செய்து தரக்கூடிய சுவையான சிற்றுண்டி சட்னியுடன் கார வடை – kara vadai recipe

Kara Vadai recipe

தேவையானவை

பச்சரிசி
புழுங்கல் அரிசி
துவரம்பருப்பு
சிறு பருப்பு
கடலைப்பருப்பு
வெள்ளை உளுத்தம்பருப்பு
இந்த ஆறு பொருட்களும் சம அளவில் தலா கால் கப் வீதம் எடுத்துக் கொள்ளவும்.

தேங்காய் சிறு பல்பல்லாகக் கீறியது – கால் கப்
சிறிது கருவேப்பிலை
சமையல் எண்ணெய் (பொரிக்க)
மிளகாய் வற்றல் – 4
காயப் பொடி – கால் ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

அரிசி இரண்டையும் தனியாக ஊற வைத்துவிட்டு… மீதமுள்ள பருப்புகளை ஒன்றாக ஊற வைக்கவும் .. இரண்டு மணி நேரம் ஊறினால் போதுமானது.
மிக்ஸியில் அரிசியை முதலில் போட்டு அரை அரிசி பதத்துக்கு அரைத்து விட்டு, பருப்புகளை சேர்க்கவும். அத்துடன் மிளகாய் வற்றல், காயப்பொடி , உப்பு , எல்லாவற்றையும் சேர்த்து (கொஞ்சம் தண்ணீர் சேர்த்து) ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும் – kara vadai recipe.

அரைத்த மாவில் சமையல் எண்ணெய் (ஒரு தோசை மாவு குழிக்கரண்டி) குழிக் கரண்டி சேர்த்துக் கிளறிக் கொள்ளவும்.தேங்காய் பல்பல்லாக நறுக்கியதையும், கருவேப்பிலையும் சேர்த்துக் கொள்ளவும்.

எண்ணெயைக் காயவைத்து, காய்ந்ததும் ஒரு சிறிய குழி கரண்டியில் எடுத்து (குழி கரண்டியில் எடுத்து எண்ணெயில் விடும் அளவுக்கு பதம் இருக்க வேண்டும் தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டாம்) எண்ணெயில் விடவும். பின் மிதமான தீயில் வைத்து ,பொன்னிறமாக பொரித்தெடுக்கவும் .சுவையான இந்த கார வடை எண்ணெய் குடிக்காது. இதற்கு சரியான காம்பினேஷன் தேங்காய் சட்னி ..

– தி.வள்ளி, திருநெல்வேலி

You may also like...