என் மின்மினி தொடர்கதை (பாகம் – 53)
சென்ற வாரம் – சென்ற ஆண்டு துவங்கி தற்பொழுது வெற்றிகரமாக ஐம்பது (50) வாரங்களை கடந்து வளர ஆதரவு தந்த வாசக உள்ளங்களுக்கு நன்றி – என் மின்மினி தொடர்கதை பாகம்-53
En minmini thodar kadhai
ஐய்யோ இவ என்ன பொத்தென்று விழுந்து கிடக்கிறாளே., நான் இப்போ என்ன பண்ணுவே.நல்ல வேளை யாரும் இங்கே இல்லை. யாராவது இருந்திருந்தால் இப்போ என்ன நடந்திருக்கும் என்று எண்ணியவாறே ஓடிப்போயி அவள் ஹேண்ட் பேக்யில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு அவளை நோக்கி ஓடினான் பிரஜின்.
மூச்சிறைக்க ஓடியவன் அவள் அருகில் சென்று தண்ணீர் பாட்டிலை திறந்து பயந்தவாறே அவள் முகத்தில் தண்ணீரை தெளிக்கவும் லேசாக முகத்தை சுழித்தவாறே கண்களை திறந்தவளுக்கு பேரதிர்ச்சி. இந்தா எழுந்து தண்ணீர் குடி என்றவாறு தண்ணீர் பாட்டிலை நீட்டியவாறு எதிரில் பிரஜின்…
விபரீதம் ஆக ஆகிவிட்டதே
குனிந்து தண்ணீர் கொடுத்தவனை கீழே தள்ளிவிட்டு அவனிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று எழுந்து ஓட தொடங்கினாள் ஏஞ்சலின். விழுந்தவன் எழுந்து அவளை துரத்தியவாறே இரு ஓடாதே.நான் உன்ன சும்மாதான் கலாய்ச்சேன்,பயப்படாம கொஞ்ச நில்லு என்றவாறே பின்தொடர்ந்து ஓடினான் பிரஜின். அவன் சொல்லும் எதையும் நம்பாதவளாக அவள் ஓட ஓட மழை வெளுத்து வாங்க தொடங்கியது.
எதிரினில் வரும் ஆள் கூட தெரியாத மழை. அவளை துரத்திய பிரஜின் ஓடியவன் சற்றுபின் வாங்கினான். இனிமேலும் இவளை துரத்தி ஓடினால் வண்டியினை எடுக்க திரும்ப வர வேண்டும் என்று எண்ணியவாறே வந்த பாதையில் திரும்பி ஓட ஆரம்பித்தான். சற்றுநேரத்தில் தன் வண்டியின் அருகே வந்து.,ச்சே ஒரு விளையாட்டு காரியம் இப்படி விபரீதம் ஆக ஆகிவிட்டதே.
நான் ஆரம்பிச்ச விளையாட்டினை நான்தான் சரிபண்ணனும் என்று வண்டியில் ஏறி மீண்டும் அவளை பின்தொடர்ந்தான் பிரஜின்.கரும்மேகங்கள் திரண்டு அவள் மனதில் இன்னும் அதிக பயத்தை உண்டு பண்ணியது. ஓடிக்கொண்டே எதிரில் இருக்கும் மரத்தில் போய் மோதி நிலைதடுமாறி உருண்டு கீழே விழுந்தாள் ஏஞ்சலின்.
நான் ஒன்னும் முட்டாள் இல்ல
தூரத்தில் அவனது வண்டியின் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை நெருங்கி வருகிறது என்பதை உணர்ந்தவள் மெதுவாக எழுந்து ஓட முயன்றாள்… தட்டுதடுமாறி எழுந்து நிற்கவும் அவனது வண்டி அவளின் அருகே வந்து நிற்கவும் சரியாக இருந்தது. பட படவென வண்டியை விட்டு இறங்கியவன், உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு.நான் ஏதோ விளையாட்டுக்கு பேசுனே.அது இவ்வளவு வினையாகும்னு நினைச்சு கூட பார்க்கவில்லை என்று அவளின் அருகே செல்ல முயன்றான் பிரஜின்.
ஹே அங்கேயே நின்னு. என்கிட்டே வர முயற்சி பண்ணாதே.. இப்போதும் உன்னை நம்ப நான் ஒன்னும் முட்டாள் இல்ல என்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேசியவாறே மீண்டும் தப்பி ஓட முயற்சித்தாள் ஏஞ்சலின். ஹே என்ன ஓவரா பண்றே.இவ்வளவு தூரம் சொல்றே நான் உன்கிட்டே சும்மா ஒரு ஜாலிக்குதான் விளையாடுனேனு..என்னை ஏதோ பொறுக்கிய பாக்குற மாதிரி பாக்குறே, இவ்வளவு நாள் பழகி இருக்கே.என்னை பத்தி தெரியல இல்லையா. நம்ப
மாட்டே என்றவன் வெடுக்கென்று அவள் கையை பிடித்தான்.
அவன் கையை பிடிக்கவும் அவளுக்கு மனதில் இருந்த பயமும் கோபமும் துளியளவும்இல்லாமல் போனது… ஒரு குழந்தை போலே அவன் முகத்தை பார்த்து,என்னை மன்னிச்சுறுடா,நான் எப்பவுமே கொஞ்சம் அவசரக்காரி.
என்ன கோபமா. இப்போ போலே எப்போதும் என்கூட இருப்பீயா என்றபடி முத்தமிட்டாள் ஏஞ்சலின்…
இருவரிடமும் இருந்த கோபம் இல்லாமல் போக அவளுக்கென தன் சட்டைபையில் வாங்கி ஒளித்து வைத்திருந்த
வெள்ளிக்கொலுசினை எடுத்தவாறே அவள் கால்களின் அருகே அமர்ந்தான் பிரஜின்.. – என் மின்மினி தொடர்கதை பாகம்-53
– அ.மு.பெருமாள்
பாகம் 54-ல் தொடரும்
காதல் தொடரட்டும்..கதை வளரட்டும்