என் மின்மினி தொடர்கதை (பாகம் – 62)
முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-62
En minmini thodar kadhai
சிரிக்காதே எனைப்பார்த்து… நீ சிரிக்கும் போது நீயழகா இல்லை நீ வாங்கி வந்து கையில் வைத்திருக்கும் செண்பகப்பூவழகா என்று அவளின் சிரிப்பைப்பார்த்து பிரஜின் கவிதை வடிக்க
போதும்,போதும்…
கவிதை வடித்து களைத்தது.,
நானென்ன பொற்சிலையோ
இல்லை
கள்வடியும் தாமரையோ
என்று பதிலுக்கு கவிதை நடையில் ஏஞ்சலினும் பதில் சொல்ல.,
அச்சோ…என்ன ஒரு கவிதை நடை.உனக்கு சத்தம் போட்டு அழ மட்டும் தான் தெரியும் மத்தபடி ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சேன்.பரவாயில்லையே நீ கவிதை கூட சொல்லுவீயா என்று அவளை பார்த்து பிரஜின் பிரம்மிக்க.,
ஓஹோ நீ என்னைப்பார்த்து அப்படி நினைச்சு வெச்சுறுக்கீயா என்று மனசுக்குள் பொசுங்கி கொண்டவள்., நானும் உனக்கு கோபம் மட்டும் தான் வரும்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் ஆனா பரவாவில்லையே நீயும் கவிதை எல்லாம் சொல்லுவீயா என்று பதிலுக்கு அவனை சீண்டினாள் ஏஞ்சலின்..
ம்ம்…எல்லாம் இருக்கட்டும்.நான் இங்கே உன்கூடவே தான் இருக்க போறேன்.எப்போ வேணும்னாலும் என்னை ஓட்டிக்கலாம்.கோயில் நடையே சாத்திட போறாங்க வா சாமி கும்பிட்டு வரலாம்ன்னு சொல்லிட்டே அவளையும் அழைத்து கொண்டு கோயிலுக்குள் இருவரும் நுழைந்தனர்…
மென்மையான மஞ்சள் வாசனையோடு கூடிய சந்தன தென்றல் அள்ளித்தெளிக்க, அங்குமிங்கும் லேசான மக்கள் கூட்டம் வட்டமிட்டு அமர்ந்திருக்க, மணிச்சத்தங்கள் மனதினை பிசைய, மேளதாள கருவிகள் இடிபோலே சத்தமிட அவ்விடமே பக்தியில் திளைத்து கொண்டிருந்த வேளையில் இருவரும் அடி மேல் அடி வைத்து கோயிலின் கருவறை முன் வந்து நின்றனர்….
அதுவரை கேட்ட மேளதாளங்களும்,மணிச்சத்தங்களும் ஏனோ சட்டென அடங்கிவிட உன்னதமான ஒரு அமைதி இருவரின் மனதிலும் நிலவியது…ஒருவரையொருவர் பார்த்த வண்ணம் லேசாக புன்முறுவல் செய்தபடி கருவறையில் இருக்கும் தேவி பகவதியம்மன் முன் கைகூப்பி நின்றனர்… – என் மின்மினி தொடர்கதை பாகம்-62
பாகம் 63-ல் தொடரும்
– அ.மு.பெருமாள் (அர்ஜுன் பாரதி)