என் மின்மினி தொடர்கதை (பாகம் – 64)
முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-64
En minmini thodar kadhai
குழம்பி நின்றவளை மேலும் குழப்பும் விதமாக அந்த சாமி,இந்த சாமி ன்னு பார்க்க மாட்டேன்னு வாயால மட்டும் சொல்லிட்டு ஏன் பெயரை மாத்தணும்??? அப்படியே உன் வாழ்க்கைப்பயணம் தொடர்ந்திருக்கலாமே என்றான் பிரஜின்…
கேள்விக்கணைகள் தொடுப்பது எவ்வளவோ எளிது தான்.ஆனால் உன் அம்பு மாதிரியான ஒவ்வொரு கேள்விகளும் என் மனசை கிழித்து விடும் என்று உனக்கு தோன்றவே இல்லையா என்று அவளையறியாமல் ஏதேதோ தனக்குள் கேள்விகளை கேட்டபடி…
இப்போ என்ன தெரிஞ்சுக்கணும் உனக்கு… நான் ஏன் பெயர் மாத்தினேன்ன்னு தெரியணும் அவ்வளவு தானே… இப்போ சொல்கிறேன் கேட்டுக்கோ…
அப்பா, அம்மா, தம்பி ன்னு எல்லோரும் இறந்து கிடக்காங்க.அப்போ கூட எங்க சித்தப்பா மற்றும் சுற்றி இருக்கும் எங்க ஆளுக யாருமே எனக்கு உதவ முன்வரவில்லை, அவர்களை காயப்படுத்தி என்னோட அப்பா செய்யாத தவறுக்காக பழியை அவரு மேலே சுமத்தி தற்கொலைக்கு தூண்டிய அத்தனை பேருமே என்னுடைய உறவினர்கள் தான்…
அவர்கள் பிறந்து வளர்ந்த மதத்தில் நான் இருக்க கூடாது என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே தான் என் பெயரையும் மாற்றி எனக்கான அடையாளத்தையும் மாற்ற துடித்தேன்… ஏன் இன்னும் கூட என் அடையாளத்தை மாற்ற வேண்டும்ன்னு தான் நான் தினசரி முயற்சி செய்கிறேன்… இதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது. என் பக்கத்தில் இருந்து யோசிப்பவர்களுக்கே என் நிலை புரியும் என்று கண்களில் நிரம்பி கீழே வழிய காத்திருந்த கண்ணீர் துளிகளை வேகமாக துடைத்து மெதுவாக அவனைப்பார்த்து புன்முறுவல் பூத்தாள் ஏஞ்சலின்…
மன்னிச்சுறு ஏஞ்சலின்… உன்னைப்பற்றி தெரிஞ்சுக்கணும்ன்னு மட்டும் தான் துருவி துருவி கேள்வி கேட்டேனே தவிர உன்னை காயப்படுத்தி கண்ணீர் விட வைக்கணும்ன்னு நான் எப்போதும் நினைச்சதில்லை என்று அவன் அவளை சமாதானப்படுத்த முயற்சிக்க…
ஹே நான் கண்ணீர் விடவே இல்லையே, இனியும் கண்ணீர் விட மாட்டேன்… நான் ஏன் கண்ணீர் விடணும், என் அப்பா நன்றாக உழைத்துத்தான் என்னையும்,என் தம்பியையும் படிக்க வைத்தார்.
குடும்பத்தை அவர் வழிநடத்திய விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். அம்மாகிட்டேயும் ரொம்ப அன்பா இருப்பாங்க. அவரோட நேர்மையும், உழைப்பையும் எண்ணி நான் வாழ்க்கையில் மென்மேலும் வளர்வேனே தவிர இனி ஒரு போதும் நடந்ததை எண்ணி வருந்தவும் மாட்டேன், கண்ணீர் சிந்தவும் மாட்டேன் என்று சொல்லியபடியே நிமிர்ந்து நின்று அவனை நோக்கி பெருமூச்சு விட்டாள் ஏஞ்சலின்…
அவனும் அவளைப்பார்த்து தட்ஸ் கிரேட்… இப்போதான் எனக்கு சந்தோஷமா இருக்கு… நீ எப்போதும் இப்படியே இருக்கணும்ன்னு சொல்லி அவள் சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவளது கைகளை பிடித்து முத்தமிட்டான் பிரஜின்… – என் மின்மினி தொடர்கதை பாகம்-64
பாகம் 65-ல் தொடரும்
– அ.மு.பெருமாள் (அர்ஜுன் பாரதி)