என் மின்மினி தொடர்கதை (பாகம் – 67)
முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-67
En minmini thodar kadhai
ம்ம்…ஒரு வழியா மழையில் நனஞ்சுகிட்டே வீட்டுக்கு வந்துட்டோம்.நான் வண்டியை ஒரமாக நிறுத்திவிட்டு வரேன்., நீ வீட்டை திறந்து உள்ளபோயி தலையை துவட்டிக்கோ என்று சாவியை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு அவன் வண்டியை நிறுத்தச்செல்ல அவளோ சாவியை வாங்கி கதவைத்திறந்து வீட்டின் உள்ளே நுழைந்தாள்…
உள்ளே நுழைந்தவள் வேக வேகமாக தலையை துவட்டிய படியே,தொழ தொழன்னு இருந்த அவனது ஒரு சட்டையை எடுத்து அணிந்தபடி.,அவனுக்காக டீயினை தயார் செய்தாள் ஏஞ்சலின்…
வண்டியை ஓரம் நிறுத்தி விட்டு வீட்டுக்குள்ளே நுழைந்த அவனை,கொதித்த தேநீர் வாசனை வாசலுக்கே சென்று வரவேற்பது போலே அவனுக்கு மனதில் தோன்ற…
ஹே என்ன ஒரு வாசனை…ஏதோ ஒரு அற்புதமான வாசனை நம்ம வீட்டுல இன்னிக்கு வருது…ஒரு வேளை தேவதை நீ வந்ததால் தானோ இவ்வாசனை இல்லம் முழுக்க நிறைந்ததோ என்று வர்ணனை தொடுக்க அவன் தொடங்க…
ஐயோ போதும் போதும்…உம் வர்ணனை.வாசனை வந்தது தேனூட்டும் தேவதையாலுமில்லை,மயங்கச்செய்யும் மோகினியாலுமில்லை…ஏலக்காய்,புதினா,கிராம்பு,இஞ்சி சேர்த்து உனக்காக நான் போட்ட தேநீரால் வந்தது…இதோ குடிச்சு பார்த்து சுவை எப்படின்னு சொல்லு என்று டீக்கப்பினை அவனிடம் நீட்ட ஏதோ தேவாமிர்தமே தந்தது போல அவளது கைகளை தொட்டு அவன் வாங்கி.,
குடித்துப்பார்த்து தான் சொல்லணுமோ,வாசனையே சொல்கிறதே இதன் ருசியை என்று அவன் பாராட்ட உள்ளப்பூரிப்பில் தன்னையே தான் மறந்து அவனது தோளில் மெதுவாக அவள் சாய்ந்தாள்…
வெளியில் வேறு மழை நன்றாகவே பெய்ய ஆரம்பித்தது…மழையின் அழகை மேலும் ரசிக்க தன் அருகில் இருந்த ஜன்னலினை திறந்தான்.மழை நீரோ சுற்றி அடித்த காற்றில் சுழலாக சுழன்று காத்தோடு காத்தாக அந்த ஜன்னல் வழியே சாரல் அவர்கள் இருவரின் முகத்தில் லேசாக தெளிக்க.,கையில் இருந்த டீக்கப்பினை மெதுவாக தன் வாயருகில் கொண்டு சென்று ஒரு மடக்கு மெதுவாக அவன் குடிக்க தொடங்கினான் பிரஜின்…
சுவையில் மெய்மறந்து ம்ம்…ம்ம்…அருமை அருமை…இப்படியொரு சுவையான தேநீர்…அதுவும் இந்த ரம்மியமான மழையில்…பக்கத்தில் தேவதை போன்ற பெண்ணுடன்… வாழ்வில் வேறென்ன வேண்டும் என்று அவளைப்பார்த்து தன் காதலை சொல்லாமல் அவன் சொல்ல.,
மழையினை ரசித்தபடி கூடவே அவனது முகத்தையும் பார்த்தபடி தோளில் சாய்ந்தவாறு எனக்கும் ஒரு வாய் டீ தாயேன் என்று கேட்டபடி வெட்கத்தில் அமைதியானாள் ஏஞ்சலின்…
ஹே…உனக்கு டீ இல்லையா.எல்லா டீயையும் எனக்கே கொடுத்துட்டீயா. கொஞ்சம் உனக்கும் எடுத்துறுக்கலாம் இல்லையா என்று அவன் கேட்க… இல்லை…போட்ட டீ எல்லாம் உனக்கே தந்துட்டேன். ஏன் எனக்கு ஒரு வாய் டீ கூட தர மாட்டீயா.கொஞ்சம் தாயேன் ஒரு வாய் தான கேட்கிறேன் என்று கெஞ்சலுடன் அவளை கேட்டாள் ஏஞ்சலின்…
என்ன என்னை பார்த்து இப்படி கேட்டுட்டீயே…உனக்காக என்னையே நான் தருவேன்.ஒரு வாய் டீ தரமாட்டேனா என்றபடி அவளிடம் தன் டீ கப்பினை நீட்டினான் பிரஜின்…
தேங்க்ஸ் டா…நிஜமா தான் சொல்றீ்யா.எனக்காக நீ உன்னையே தருவீயா. உன்னை நம்பலாமா என்று அவனைப்பார்த்து கேட்டபடி அவன் குடித்த தேநீரை அமிர்தமாக நினைத்து தானும் ஒரு வாய் சுவைத்தாள் ஏஞ்சலின்…
பாகம் 68-ல் தொடரும்
– அ.மு.பெருமாள் (அர்ஜுன் பாரதி)