என் மின்மினி தொடர்கதை (பாகம் – 70)
முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-70
En minmini thodar kadhai
பயணம் தொடர்ந்தாலும் மனம் மட்டும் ஏனோ அவளது நினைவுகளில் இருந்து விலகவே இல்லை.அவளது நிலை வேறு அவனுக்குள் கலக்கத்தை ஏற்படுத்த கண்களில் கண்ணீர் நிறைந்து வழிந்து கொண்டிருக்க அதை தன்னுடைய முழுக்கை சட்டையால் துடைத்தபடி தன் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தி சிறிது நேரத்தில் தன் வீட்டை அடைந்தான் பிரஜின்…
வண்டியை ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு வீட்டுக்கதவை மெதுவாக திறந்து உள்ளே நுழைந்தான்.அவளுடன் இருந்த போது துண்டிக்கப்பட்ட மின்சாரம் இன்னும் வராத நிலையில் சுற்றிலும் இருள் சூழ தன்னுடைய செல்போனில் உள்ள டார்ச் லைட்டை ஆன் செய்து விட்டு மெழுகுவர்த்தியையும்,பற்றவைக்க தீப்பெட்டியையும் தேட ஆரம்பித்தான்.
சுற்றி முற்றி தேடி பார்த்தப்பின்பு தான் நினைவுக்கு வந்தது.இருந்த ஒரு மெழுகுவர்த்தியும் எரிந்து முடித்து தரையோடு தரையாக ஒட்டிய படி கிடக்க., ச்சே…இந்த கரண்டும் வராது,மெழுகுவர்த்தியும் இல்லை…இப்படியே இருட்டில் எவ்வளவு நேரம் இருக்குறது ன்னு சலித்தபடியே ஒரு இடத்தில் உட்கார்ந்தான்.
நேரம் செல்ல செல்ல வெளியில் மின்னல் விடாமல் மின்னி கொண்டிருக்க இடியுடன் கூடிய மழையும் நன்றாக பெய்ய தொடங்கியது.
அவளுடைய நிலை ஏற்படுத்திய தாக்கம் இன்னுமின்னும் அவனை கலங்க செய்ய கண்கள் சோர்வடைந்து அவனையுமரியாமல் நன்றாக தூங்கி போனான் பிரஜின்…
அதே வேளையில் ஹாஸ்டலுக்கு சென்றவள்.,மனதுக்குள் அவனை பற்றி எண்ணியபடியே தன்னுடைய ஒவ்வொரு வேலையையும் செய்து கொண்டு ஜன்னல் வழியே வெளியே எட்டிப்பார்த்தாள் ஏஞ்சலின்…
இடியும்,மின்னலும் வானிலிருந்து கீழிறங்கி அவளை பயமுறுத்த மழை வேறு நன்றாக வெளுத்து வாங்கி கொண்டிருந்தது.வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவள்.,பெய்யும் மழை நீரில் ஜன்னல் கம்பிகள் வழியே தன் கைகளை வெளியே நீட்டி நனைத்து தன்னையே மறந்து நின்று கொண்டிருந்தாள்…
திடீரென்று ஒரு பெரிய இடி டமார்,டுமீல் என்று இடிக்க…கோடுகள் கிழித்தபடி மின்னலும் பூமியை நோக்கி கீழிறங்க தூரத்தில் இருந்த தென்னைமரம் பற்றி எரிந்தது.ஜன்னலின் வழியே தன் கைகளை நனைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவள் வெடுக்கென்று பயந்து வெளியே நீட்டிய கைகளை உள்ளிழுக்க
இழுத்த வேகத்தில் அவளது வலதுகை மணிக்கட்டு ஜன்னல் கம்பிகளில் பட்டு கிழித்து இரத்தம் வழிய தொடங்கியது.
அம்மா என்று சத்தம் போட்டபடி கதறி அழ தொடங்கினாள் ஏஞ்சலின்…
இதைப்பார்த்த சகத்தோழி ஒருத்தி ஓடி வந்து தன் அருகில் இருந்த முதலுதவி பெட்டியில் இருந்த சில மருந்துகளை எடுத்து கட்டுப்போட்டு,ஆறுதல் கூறி அவளை சமாதானப்படுத்தினாள்.
சிறிது நேர இடைவெளிக்கு பிறகு சமாதானம் அடைந்தவள்.,
அய்யோ…வெளியில் இடி,மின்னல்,மழை ன்னு இருக்கே.அவன் எப்படி போயிருப்பான்.முழுசா நனைந்து இருப்பானோ…என்று தனக்குள் தானே அவனைப்பற்றி ஆயிரம் கேள்விகளை கேட்டபடி குழம்பி அவள் கொண்டிருக்க….
அதே வேளையில் குளிர்காற்று திடீரென வேகமாக நன்றாக தூங்கி கிடந்த அவன் மீது வீச…திடுக் என விழித்து எழுந்து அமர்ந்தான் பிரஜின்…
சுற்றிலும் இருளாக இருந்தாலும் மின்விசிறி மட்டும் வேகமாக சுழன்று கொண்டிருந்தது…
ச்…என்று உச் கொட்டியபடியே கரண்டு வந்தாச்சா என்றபடி தூரத்தில் கிடந்த போர்வையினை எடுத்து நன்றாக போர்த்தி கொண்டு…
அவனது செல் போனை தேட ஆரம்பித்தான்.
சில வினாடிகளுக்கு பிறகு அது தனது தலையணையின் அடியில் கிடந்ததை பார்த்து கையில் எடுத்து ஏஞ்சலினுக்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்ய துவங்கினான்…
மறுமுனையில் ரிங் ஏதும் இன்றி அமைதியாக இருந்து அதுவாகவே தொடர்பு துண்டிக்க பட்டது.இரண்டு மூன்று முயற்சிகளுக்கு பிறகு.,சரி காலையில் பார்த்து கொள்ளலாம் என்று நினைத்தபடி மீண்டும் படுக்கையில் படுத்தான் பிரஜின்…
பாகம் 71-ல் தொடரும்
– அ.மு.பெருமாள் (அர்ஜுன் பாரதி)
அழகான அச்சமூட்டும் மழை வர்ணனை …அழகாய் நகர்கிறது கதை
ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்..
கதை நகர்வை எதிர்பார்க்கிறோம்…