கவிதை போட்டி 2022_04 , 2022_05 | மற்றும் போட்டி 2022_03 முடிவுகள்

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-04

kavithai potti

கவிதை போட்டி 2022-03 முடிவுகள்

இந்த போட்டியில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுவோர்,
அ. செந்தில்குமார், சூலூர்
மு.இளங்கோவன் அந்தியூர்

வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு நீரோடை சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

கவிதை போட்டி 2022_04 அறிவிப்பு

  • புத்தாண்டு
  • இன்னா செய்தாரை ஒருத்தல்
  • தமிழ் அன்னை
  • கற்க கசடற
  • புத்தக கண்காட்சி
  • நெகிழி ஒரு சகாப்தம்
  • மறந்தான் மரத்தை
  • இலக்கிய ஓடை நீரோடை

தலைப்புகளில் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம். எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வெற்றி பெறும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்

தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 2022-04. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.


குறிப்பு:

1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.

You may also like...

23 Responses

  1. S. V. Rangarajan says:

    மறந்தான் மரத்தை. நான் படிக்கும் போது அசோகன் மரம் நட்டான் என்று படித்தேன் ஆனால் இப்போதோ என் மகள் அதை படித்தாள் ஆனால் ரோட்டில் மரமில்லை வளர மனமில்லை உலகமயமாக்கல் என்ற போர்வையில் இயற்கையை நாம் ரசிக்கவில்லை அதனால் இயற்கை அதன் வேலையைச் செய்கிறது.

  2. *சித்திரைப் பிறந்தது*
    நித்திரை கலைத்தது
    முத்திரை பதித்தது
    மகிழ்ச்சி மலர்ந்தது
    வளமும் நலமும் வந்தது
    வாழ்க்கை சிறந்தது

    தமிழ் மகளின் பிறந்த நாள்
    அருமையான பண்டிகை திருநாள்
    பள்ளி கல்லூரி விடுமுறை
    கிராமத்தில் தேடி பயணம்
    தூய்மையான காற்றோட்டம்
    இனிமையான கொண்டாட்டம்

    மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
    சித்திரை திருவிழா ஆரம்பம்
    மக்கள் கூட்டம் ஆரவாரம்
    கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்
    சைவ வைணவ சமய பெருவிழா
    இறைவனிடம் பிரார்த்தனை வழிபாடு

    வெயில் உச்சம் தொடும்
    இளநீர் மோர் நுங்கு வரும்
    வீட்டுக்குள் மகிழ்ச்சி விளையாட்டு
    நண்பர்கள் அரட்டை சந்தோஷம்
    மனதில் இனிமையான நினைவுகள்
    காலம் முழுவதும் வாழும்

    உறவினர் ஒன்றாய் கூட்டம்
    வியர்வை உடலை நனைக்கும்
    தமிழின் அடையாளம் மாறாதது
    பக்தியின் ஆதாரம் தொடரும்

    எஸ் வீ ராகவன் சென்னை

  3. A.Francis sonia says:

    தமிழ் அன்னை
    ஆயிரமாயிரம் மொழிகள் உண்டு அவனியிலே
    ஆதாரம் நீயே அன்னை தமிழே
    யுகங்கள் பல கடந்து வந்தாய்
    நிகருண்டோ உனக்கு நற்றமிழ்
    பழமையின் பெருமை குன்றாமல்
    புதுமையில் புகழும் கொண்டாய் பூந்தமிழே
    செங்குருதி சிந்திய சீர்மிகு காப்பியங்கள்
    எராளம் சுமந்து வந்தாய் செந்தமிழே
    இயல் இசை நாடகமாய் இதயத்தில்
    வேர்விட்டாய் மாண்புமிகு முத்தமிழே
    கவிதையாய் செய்யுளாய் இளமனதின்
    கற்பனையில் கனிந்திட்டாய் கன்னிதமிழே
    உணவே மருந்தென்று இயற்கையோடு
    இணைந்திட்டாய் பார்போற்றும் பைந்தமிழே
    உன் புகழ் பாடிட இந்த ஓர் கவிதை போதாது
    உனக்காய் எழுதிடுவேன் கவிதைகள் ஆயிரம்.

  4. கபில் மு says:

    இரும்பு பெண்மணி
    அன்னை பெண்ணே!
    ஆயிராயிரம் பிரச்சனைத் தீர்க்கும் ஐ.நா தலைவியே!
    இங்கோ உன் பிள்ளையை வளர்க்க – உன் வாழ்வில்
    ஈட்டி ஏந்தியப் போராட்டம்
    உண்மையிலே நீ என்நிகழ் தெய்வம்
    ஊரார்க்கும் உதவும் பெண் தெய்வம்
    என்றுமே நீ! ஒரு போராளி
    ஏன் என கேட்பவனோ கோமாளி
    ஐயமில்லை உன் வாழ்வு உனக்கன்றோ
    ஒருபுறமோ குடியடிமை, மறுபுறமோ சந்தேக பேதை
    ஓட்டம் ஒன்றே உன் வாழ்வில் அதுவும், உனக்கன்றோ
    ஔவை ஒரு பெண்ணே!
    இது என் பெருமைக்கோ உண்மை.

  5. தாரா says:

    தலைப்பு: தமிழ் அன்னை

    அழித்தல் அழியாத மொழி பல

    ஆராய்ச்சியாளர்கள் கண்டு

    வியந்த

    மொழி வினாவுதல்லுக்கு விடை

    தரும்

    மொழி பல துன்பங்களை கடந்த

    மொழி‌ பொல்லாங்கு இல்ல புது

    மொழி கடுஞ்சொல்களை

    இனிமையாகும் மொழி

    மறைக்காது

    அதன் புகழ் மொழி திறமையாய்ப்

    பேசுபவள்ளின் தமிழ் மொழி அழகு

    கொண்ட அன்னை மொழி

    இயற்கையழகு கொஞ்சும் இனிய

    மொழி அன்பு குறையாத பழமொழி

    அயலார் விரும்பும் தமிழ் மொழி

    பழமையான புது மொழி அகிலாம்

    போற்றும் இயல் மொழி

    இலக்கியம்,

    இலக்கணம் போற்றும் செம்மொழி

    செவி சாய்க்கும் தமிழ் மொழி பல

    வருடங்கள் கடந்தும் இளமை

    மாறாத

    மொழி சங்கம் வைத்து பாண்டிய

    மன்னன் வளர்த்த தமிழ் மொழி

    தனித்த மொழி தரணி எங்கும்

    போற்றும் மொழி தமிழ் மொழி

    எங்கள் உயிர் மொழி

  6. நித்யாநரேஷ் says:

    தலைப்பு:தமிழ் அன்னை
    பாரதியின் தோட்டத்து
    பூக்கள் கண்களைப் பறிக்க!
    தாசரின் தோட்டத்து
    பூக்களின் வாசனை இழுக்க!
    தேடித் திரிகிறேன்
    தமிழ் தோட்டம் வளர்க்க!
    சிற்பி முதல் முத்து வரை
    விதைகள் ஏராளம் இருக்க!
    எதை விதைக்க! எதை விடுக்க!
    விதையெல்லாம் வளர்ந்து
    பூத்துகிடக்க! இன்றோ ஆர்வம்
    கொண்டேன் மாலை தொடுக்க!
    தமிழன்னையே இடம் தருவாயாக
    உன் காலடியில் சமர்ப்பிக்க!

  7. தாரா says:

    தலைப்பு-மறந்தான் மரத்தை

    மண்ணின் பெருமை மரத்திற்கு தெரியும்
    மரத்தின் அருமை மண்ணிற்கு புரியும்
    மழை இல்லை என ஏங்கும் நிலம்
    காடுகள் தான் மழைக்கு முதல் காரணம்
    ஆதிமனிதன் வாழ்ந்த இடம்
    அடையாளம் இல்லாமால் போகும்
    மரம்
    வனவிலங்குகள் வாழும் இடம்
    நாசம் ஆகிபோகும் வனம்
    மரம் இல்லை என்றால் மனிதன்
    இல்லை
    மூச்சு காற்று என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லை
    மரங்கள் பல வகை அதன் நன்மைகள்
    பல வகை
    உயிர்கள் வாழ சிறந்தவை கூடுகட்டி வாழும் பறவையின் தாய் அவை
    இயற்கை அன்னையின் பிள்ளை அவை
    அதன் குழந்தையை அழிக்கும் உரிமை நமக்கு இல்லை
    இறைவன் படைத்த செயல் அவை
    அதை காப்பது நாம் கடமை அவை
    காடுகளை நேசிப்போம் மூச்சு காற்றை சுவாசிப்போம்

  8. மைத்ரவர்ஷினி says:

    தமிழ் அன்னை!

    ஃ ஆய்தம் ஏந்தியவள்;
    ழ கரப் பெருமை கொண்டவள்;
    தாயாக உருவகப்படுத்தியவள்;
    மொழிகளின் முன்னோடி அவள்;
    மும்மைச் சிறப்பு கொண்டவள்;
    கல்லும் மண்ணும் தோன்றும் முன்னே தோன்றியவள்;
    சங்கம் வைத்து வளர்ந்தவள்;
    கவிஞர் பலரை புவிக்கு அளித்தவள் ;
    தன்னை நம்பியவரை திருவாய் தாங்குபவள்
    எனக்கும் தாய் அவள்.

  9. மைத்ரவர்ஷினி says:

    புத்தாண்டு!

    நேற்றுடன் முடிந்தது ஓர் வாழ்க்கை!
    இன்று ஆரம்பிப்போம் புது வாழ்க்கை!
    புது பல கல்வி கற்போம்
    புது பல தப்பு செய்வோம்!
    உறுதிமொழி சில ஏற்போம்
    முடிந்தவரை செய்து பார்ப்போம்!
    அதிகமாய் உதவுவோம்
    குறைவாய் ஏமாறுவோம்!
    வெற்றி சில பெறுவோம்!
    முயற்சி பல செய்வோம்!
    புது மனிதியாய் புத்துணர்வு பெறுவோம் இப்புத்தாண்டில்.

  10. சுற்றுச்சூழல்
    சொர்க்கம் தேடித்திரியும் மனிதப் பிறவியே,
    சொர்க்க வாசலில் தானே நின்று கொண்டிருக்கிறாய்,
    அற்புதம் கிடைத்தும் அனுபவிக்க தெரியாமல் அழிக்கும் ஆயுதமாகிவிட்டாய், தேவைகளைத் தேடி தேவையில்லாததுடன் வாழ்கிறாய், உனது பிறவி ஆரம்பிக்கும் முன்னரே உனக்குத் தேவையான இங்கு படைக்கப்பட்டுவிட்டது,
    இன்னும் நாட்கள் கடக்கவில்லை இனியாவது திருந்திடு உன் பாவங்களை சுமந்து கொண்டு , நீ வாழ வலி தாங்கும் சுற்றுச்சூழலை இயற்கையாக இருக்க விடு…..

    இப்படிக்கு ; படைப்பு ;ரா வளர்மதி

  11. காயத்ரி நிமலன் says:

    பெண் இனம்:
    பிறவி கொடுப்பவளே
    பிணமாக்கப் படுகிறாள்,
    சின்னஞ்சிறு சிட்டாய் பறந்தால்
    சீரழிக்க படுகிறாள்,
    பருவம் அடைந்துவிட்டால்
    பருந்து கழுக்கு இரையாகிறாள்
    வேறு எதுவும் வேண்டாம் என
    வீட்டுக்குள்ளேயே இருந்தாலும்
    மூடர்களால் முடக்கப் படுகிறாள்.
    முடங்கிக் கிடக்காமல் வெளியே வந்தாலும்
    வேரறுக்க படுகிறாள்.
    பெண்- வெறும் இச்சை தீர்க்கும் உடல் மட்டுமல்ல,
    தாயாகி உன்னை படைப்பவள்,
    கவலையிலும் கண்ணீரிலும்
    உன்னை காப்பவள்
    எதையும் அழிக்க வல்ல ஆற்றல் படைத்தவள்
    அன்பையே ஆயுதமாய் கொண்டவள்
    பெண்ணினம் போற்றினால்,
    உலகமே உன் பின்னால்.
    பெண்ணினம் போற்றிடு
    மண்ணகம் காத்திடு!

    – காயத்ரி நிமலன் , கோவை

  12. கவிமோகனம், கோவை says:

    வனம் அழித்து,
    வளம் கொள்ளை அடித்து,
    ஆழ்துளையில்
    ஆற்று நீரை உறிஞ்சி,
    ஓசோனை கெடுத்து,
    மெய்ஞானம் கொன்று,
    விஞ்ஞானம் தின்பவனே!
    உன் ஞானத்தில் வரும் தலைமுறை
    அழிவது புரியவில்லையா?
    சுயசிந்தனை மாற்றமே
    சுற்றுப்புறத்தை தூய்மையாக்கும்..
    சுற்றுப்புற சூழல் தான்
    பூமியை வளமாக்கும்..
    வளமுள்ள பூமியே
    மனிதனுக்கு வரம் தரும் சாமி..
    வளம் தரும் வானம் காப்பாய்!
    வரும் தலைமுறையை காத்திடுவாய்!!
    -கவிமோகனம், கோவை

  13. காயத்ரி நிமலன் says:

    தோழமை!
    தனக்கென வாழாது
    தன்னலம் பாராது..
    தாயன்பு தான் தந்து
    துன்பத்திலும் துணிவு கொடுத்து..
    தனிமைக்கு தாள் போட்டு
    தான் உண்டு என்பதை தலையில் கொட்டி..
    நமக்கு தவறாது உணர்த்துவது தான் தோழமை!
    -காயத்ரி நிமலன்

  14. கவிமோகனம் says:

    தயங்கினால்
    நீயே தடைக்கல் ஆவாய்..
    முயன்றால்
    நீயே முன் உதாரணம் ஆவாய்..
    உன்னால் முடியும்
    உன்னை நம்பு..
    உழைக்கும் வழியே
    உயர்வானது இன்று ..
    வெற்றிப் பயிருக்கு
    வலிகளை உரமாக்கு..
    வேதனைகளை
    சாதனைகளாக்கு..
    நிச்சயம் வெற்றியே
    என்றும் உனக்கு !
    கவிமோகனம், கோவை.

  15. M.Manoj Kumar says:

    மணலை தோண்ட தோண்ட தண்ணீர் வரும்
    புத்தகங்களை படிக்க படிக்க கல்வியறிவு வளரும்;
    அந்த கல்வியறிவால் புகழும், பெருமையும் தேடி வரும்;
    இப்பிறவி மட்டும் அல்ல ஏழேழு பிறவிக்கும் பாராட்டு தேடி வரும்

    கணக்கும் இலக்கியமும் இரண்டு கண்கள் என்று சொன்னார் வள்ளுவர்;
    இவை இரண்டுமே எண் மற்றும் எழுத்து என்று விளக்கமாக சொன்னார் அவர்;
    இவ்விரண்டும் இல்லையெனில் சிறுவர்களும் ஏமாற்றுவர்;
    படிக்காதவரும் நம்மை விழுங்கி விடுவர்

    திறமைசாலிகளை உலகம் விரும்பும்
    அவர்களை பிரிந்தால் துன்பத்தில் தேம்பும்;
    பேச்சு இனிக்க இனிக்க பேசினால் மயங்கும்;
    இதுவே புலவர்களின் சிறப்பு குணமாகும்

    கல்வி கற்றல் பெரிதல்ல; கற்ற கல்வியை பயன்படுத்த வேண்டும்;
    இல்லையென்றால் அவமானத்தை சந்திக்க வேண்டும்;
    கற்ற கல்வி அனைவருக்கும் பயன்தர வேண்டும்;
    இல்லையென்றால் மிருகத்தை போல் சுற்றி திரிய வேண்டும்

    உதவியின்றி தவிப்பவர்க்கு உதவி செய்ய படி!
    உணவு இன்றி தவிப்பவர்க்கு உணவு போட படி!
    அழுபவனின் கண்ணீரை துடைக்க படி!
    ஊர் பிரச்சனைகளை தீர்த்துவைக்க படி!

    படித்தவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
    படிப்பறிவு இல்லாதவரை பார்த்தால் எல்லோருக்கும் வரும் வெறுப்பு ;
    உலகத்தில் கல்வி தான் அழிக்கமுடியாத, நிலையான சொத்து;
    மற்றவையெல்லாம் நிலையில்லாத, எளிதாக அழியக்கூடிய சொத்து

    கவிதையின் பெயர்:- கற்க கசடற
    எழுத்தாளர்:- M.மனோஜ் குமார்

  16. M.Manoj Kumar says:

    யாருக்கு தெரியும் எது யாருக்கு கடைசி பாட்டு
    இறைவனுக்கு மட்டும் தான் தெரியும் அவரவருக்கு இது தான் கடைசி பாட்டு காதலில் பிரிவு ஏற்பட்டால் காதலனும் காதலியும் பாடுவார்கள் கடைசி பாட்டு விவாகரத்து ஆனால் கணவனும் மனைவியும் பாடுவார்கள் கடைசி பாட்டு இறந்தவர்களுக்கு சாவு வீட்டில் பாடும் ஒப்பாரியே அவர்களின் கடைசி பாட்டு
    ஒரு சிறை கைதி இறக்கும் முன் தூக்குமேடையில் பாடுவான் கடைசி பாட்டு
    சுதந்திர போராட்ட தியாகிகள் அன்னியர்களை விரட்டி அடித்து சுதந்திரம் வாங்கி தந்து பாடினார்கள் கடைசி பாட்டு
    ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு விடையளிப்பு விழாவில் பாடுவார்கள் கடைசி பாட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு பிரியாவிடை விழாவில் பாடுவார்கள் கடைசி பாட்டு
    ஊழியர்கள் அலுவுலகத்தில் வேலை முடித்துவிட்டு, அந்த நாள் இறுதியில் பாடுவார்கள் கடைசி பாட்டு
    பள்ளி மாணவர்கள் வகுப்புகள் முடிந்து, அந்த நாள் இறுதியில் பாடுவார்கள் கடைசி பாட்டு ஒரு குழந்தை பெரிதாக வளர்ந்து முதல் முதலில் பள்ளி செல்லும்பொழுது அம்மா அதற்கு பாடுவாள் கடைசி பாட்டு
    “மூன்றாம் பிறை” படத்திலிருந்து “கண்ணே கலைமானே” தான் கவியரசு கண்ணதாசனின் கடைசி பாட்டு
    “காவிய தலைவன்” படத்திலிருந்து “அல்லி அர்ஜுனா” தான் கவிஞர் வாலியின் கடைசி பாட்டு

    கவிதையின் பெயர்:- கடைசி பாட்டு
    எழுத்தாளர்:- M.மனோஜ் குமார்

  17. M.Manoj Kumar says:

    ஜனநாயகம் என்றால் மக்களால் நான், மக்களுக்காகவே நான்;
    ஜனநாயகம் என்றால் மக்களால், மக்களுக்காக, மக்களுடைய, மக்களின், மக்களே;
    ஜனநாயகம் என்றால் மக்களின் பிரதிநிதிகள் மக்களால்;
    ஜனநாயகம் என்றால் மக்களுக்காக மக்களால்

    ஜனநாயகம் என்றால் மக்களாட்சி;
    நமது முக்கிய கடமை ஒரு விரல் புரட்சி;
    இதில் ஒவ்வொருவரும் தொட்டு பார்க்க வேண்டும் அவரவரின் மனசாட்சி; இதற்கு உலகமே அத்தாட்சி

    ஜனநாயகம் என்றால் ஒரு நாட்டிற்கான பாராளமன்ற அமைப்பு அரசாங்கம்;
    மக்கள் கடவுள் என்றால் இது கடவுளின் ராஜாங்கம்;
    இதில் முடிவெடுத்தல் மக்களின் ஒரு அங்கம்;
    மக்களின் எல்லாம் அதிகாரங்களும் இதில் அந்தரங்கம்

    ஜனநாயகம் என்பது முகப்புரையில் ஒரு முக்கிய சொல்லாகும்;
    இந்த முகப்புரையே நேருஜியின் அறிமுக உரை மற்றும் அறிக்கையாகும்;
    இது பல சிறப்பம்சங்கள் கொண்ட அறிக்கையாகும்;
    இதுவே மக்களுக்கு ஒரு காணிக்கையாகும்

    கவிதையின் பெயர்:- ஜனநாயகம்
    எழுத்தாளர்:- M.மனோஜ் குமார்

  18. M.Manoj Kumar says:

    யார் சொன்னது கடவுள் இல்லையென்று?
    கடவுள் இருக்கிறார்;
    பகலில் ஒளி-வெளிச்சம் தரும் சூரியன் ஒரு கடவுள்;
    இரவில் ஒளி-வெளிச்சம் தரும் சந்திரன் ஒரு கடவுள்;
    சூரிய மண்டலத்தில் உள்ள ஒன்பது கோள்களும் கடவுள்;
    அதில் ராகுவும் கேதுவும் கூட ஒரு கடவுள்;
    கோவிலில் உள்ள மரத்தை சுற்றி வளம் வருகிறோமே அது ஒரு கடவுள்; வேப்பமரம், ஆலமரம் மட்டும் அல்ல, உலகத்தில் உள்ள எல்லாம் மரங்களும் கடவுள்; நீர், நெருப்பு, ஆகாயம், மண், காற்று ஆகிய பஞ்ச பூதங்களும் கடவுள்;
    பறவைகளில் நாம் காண்கிறோம் கடவுள்;
    மிருகங்களில் நாம் காண்கிறோம் கடவுள்;
    அன்பில், பாசத்தில், கருணையில் நாம் காண்கிறோம் கடவுள்;
    ரத்த பந்தத்தில் நாம் காண்கிறோம் கடவுள்;
    நம்மை பெற்ற அம்மா-அப்பா ஒரு கடவுள்;
    நமக்கு பள்ளி,கல்லூரிகளில் பாடம் கற்றுத்தரும் ஆசிரியர் ஒரு கடவுள்; நல்ல நண்பன் ஒரு கடவுள்;
    அண்ணன் மற்றும் அண்ணி ஒரு கடவுள்;
    வயதில் முதியவர்கள், மூத்தவர்கள் ஒரு கடவுள்;
    நதிகள் எல்லாம் கடவுள்;
    மலைகள் எல்லாம் கடவுள்;
    நமக்கு உணவு போடும் விவசாயி ஒரு கடவுள்;
    நமக்கு உணவளிக்கும், மருந்தளிக்கும் செடிகள் எல்லாம் கடவுள்;
    நதிகள் எல்லாம் கடலில் பொய் சங்கமிக்கும்
    அந்த கடலே ஒரு கடவுள்;
    ஆக மொத்தம் உலகத்தில் நாம் உணரும் அனைத்துமே கடவுள்;
    ஆகையால் இயற்கையே கடவுள்

    கவிதையின் பெயர்:- இயற்கையே கடவுள்
    எழுத்தாளர்:- M.மனோஜ் குமார்

  19. M.Manoj Kumar says:

    ஜனநாயகம் அழிந்தால், இறந்தால் தோன்றுமே பணநாயகம்; எல்லாம் தீய சக்திகளுக்கு இது தான் நாயகம்; லஞ்சம், ஊழலுக்கெல்லாம் இது தான் தாயகம்; வறுமை, பசி-பட்டினி கொடுமைக்கெல்லாம் இது தான் ராஜநாயகம்

    பணநாயகம் என்றால் ஊழலால் நான், ஊழலுக்காகவே நான்; பணநாயகம் என்றால் ஊழலுக்காக ஊழலால்; பணநாயகம் என்றால் ஊழலின், ஊழலுடைய, ஊழலுக்காக, ஊழலால்; அரசியல்வாதிகள் மக்களை வார்த்தை ஜாலத்தால் செய்வார்கள் ஜனரஞ்சகம்; வாக்குவாங்கி முட்டாளாக்க இது அவர்களின் நயவஞ்சகம்

    தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் மக்களிடம் தஞ்சம்; மக்களை குழப்பி, ஏமாற்றி செய்வார்கள் வஞ்சம்; வறுமை, பசி-பட்டினி எல்லாம் சேர்ந்தால் பஞ்சம்; மக்களும் வேறு வழியில்லாமல் அரசியல்வாதிகளிடம் தஞ்சம்; அறியாமையால் வாக்களிக்க வாங்குவார்கள் லஞ்சம்

    தேர்தலுக்கு பிறகு ஏமாற்றமே மிஞ்சும்; ஏமாந்த பிறகு மக்களுக்கு எது தான் எஞ்சும்; மக்கள் கூட்டம் நியாயவிலைக்கடையில் தேவைகளுக்காக கெஞ்சும்; அடுத்த தேர்தலுக்கு தயாராகி அரசியல் கட்சிகள் வாக்குக்காக கெஞ்சும்

    கவிதையின் பெயர்:- பணநாயகம் எழுத்தாளர்:- M.மனோஜ் குமார்

  20. க.பா.சுப்பு says:

    க.பா.சுப்பு

    தகுதி

    வலது காலை
    எடுத்து வைத்து வாமா
    காலம் காலமாக
    இந்த வார்த்தையை கேட்டு
    சிரிப்புதான் வருகிறது
    எனக்கல்ல!
    வலது காலிற்க்கு
    வலது கால்
    என்ற தகுதியை கொடுத்த
    இடது காலிற்க்கு !

  21. Mahesh. S says:

    இன்னா செய்தாரை ஒறுத்தல்!

    கடல் மலை…
    நதிகளைக்கடந்து வந்தன…
    அக் கரைப் பறவைகள்!

    நியாயமில்லா ..
    இரைகளைக்குவிக்கும்
    மனிதனைக் கண்டு….
    கலங்குகின்றன!

    அழிப்பதிலும் நசுக்குவதிலும்….
    யார் பெரிதென எண்ணம்….
    பரவி வடிகிறது!

    உயிர்களைத் தின்றுவிட்ட…
    உயிர்….
    அடங்கியபாடில்லை!

    பற்றவைத்த வேள்வித் தீ…
    பரவி எரித்து சாம்பலாக்கி….
    நச்சுகள் களைதல்….
    நாளை நடக்கலாம்!

    சுய பரிசோதனையின்….
    கதவுகளில்….
    காற்று மோதுகையில்…
    அக்கதவுகள் வளையலாம்!

    அவ்வாறான விளைச்சல்களால்…
    விருந்துக்கு வித்திடலாம்!
    வெற்று ஆரவாரங்கள்
    துறந்து!

    இன்னா செய்த…
    ஆறறிவுக்கும்….
    நன்மையே பயக்கின்றன….
    ஐந்தறிவுப் பறவைகள்!
    …..

  22. Mahesh. S says:

    அகம்!

    அகங்களைச்…
    சுத்திகரிக்கச் சொல்லிய…
    கணங்களினூடே…
    விழித்திருந்தது…
    அகங்காரம்!

    நிரந்தரங்களெனும்…
    அறியாமைக்குள்…
    ஒளிந்து சொந்தமாகியிருந்து…
    அகம்பாவம்!

    சிறகு விரித்த மனங்களை…
    சிதைத்துக் கொண்டிருந்தது…
    பெரும் செருக்கு!

    அழகிய அபிமானங்களைப்
    பற்றவைத்துப்போகிறது…
    மமதையின் பேதமை!

    நளினமான
    பேரன்பு நீரோடையின்….
    அமைதியில்…..
    விழித்திருந்த அகந்தை
    உறங்கிப்போகிறது!
    …………….

  23. Mahesh. S says:

    நிழல்!

    கோடையும் தேடிக் களைக்கிறது…
    பெரு மரத்தடி நிழலை!

    கயிற்றுக்கட்டில்கள் விசும்பின!
    மன்றாடுதலும் மறுத்தலும்…
    எடுபடாமல் அறுபட்டன…
    மரங்கள்!

    நான்கு சுவர்களில்…
    அடைபட்ட சந்ததிகளை..
    சென்றடையவில்லை…
    நிழல் சொர்க்கம்!

    பொருளீட்டுதலின் பொருட்டு….
    அமைந்துவிட்ட சுயநலங்களில்..
    வியர்வை ஆறு வழிகிறது!

    பசுமை தொலைந்த….
    காய்ந்த மனங்களில்….
    செயற்கை வாசம்…
    பரவி வழிகிறது!

    புன்னகையை….
    அடகு வைக்கின்றன…
    பதற்ற நாழிகைகள்!

    அடர்த்தி மறைந்த..
    அலங்கோல ஓட்டங்களில்..
    சருகுகளை மிதித்தவாறே…
    அழுது மடிகின்றன..
    கால்கள்!
    ……..